Untitled Document
September 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
டெனீஸ்வரனின் அமைச்சு யாருக்கு? - ரெலோவின் பரிந்துரை இன்று
[Monday 2017-07-17 08:00]

வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர்  பதவியில் இருந்து, டெனீஸ்வரனை  நீக்கியதும் யாரை அமைச்சராக பரிந்துரைப்பது என ரெலோ இன்று தனது பரிந்துரையை முதலமைச்சருக்கு அனுப்பவுள்ளது.

வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பதவியில் இருந்து, டெனீஸ்வரனை நீக்கியதும் யாரை அமைச்சராக பரிந்துரைப்பது என ரெலோ இன்று தனது பரிந்துரையை முதலமைச்சருக்கு அனுப்பவுள்ளது.

  

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ரெலோ தலைவர், செல்வம் அடைக்கலநாதன், கட்சி விதிமுறைகளை மீறி வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் செயற்பட்டு வருவதால், அவரை அமைச்சு பதவியில் இருந்து நீக்குமாறு வட மாகாண முதலமைச்சருக்கு எமது கட்சி பரிந்துரைத்திருந்தது.

அமைச்சர் டெனீஸ்வரனை பதவியில் இருந்து நீக்கும் பட்சத்தில் எமது கட்சியின் சார்பில் யாரை அமைச்சராக நியமிக்க பரிந்துரைப்பது என்பது தொடர்பாக வவுனியாவில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று கட்சியின் அரசியல்குழு கூடி ஆராய்ந்தது. எனினும் இக் கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படாமையினால் இன்று அனைத்து அரசியல்குழு உறுப்பினர்களும் தொலைபேசி மூலமாக தமது தெரிவுகளை தெரிவிப்பது எனவும் அதன் பின்னர் உடனடியாக முதலமைச்சருக்கு ரெலோ கட்சியின் சார்பில் புதிய அமைச்சருக்கான நபரை பரிந்துரைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும்! - ஜனாதிபதி மைத்திரியிடம் வலியுறுத்திய ஐ.நா பொதுச்செயலர் Top News
[Sunday 2017-09-24 08:00]

அரசியலமைப்புத் திருத்தம் மூலம் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் வலியுறுத்திக் கூறியுள்ளார். நியூயோர்க்கில் ஐ.நா. சபையின் 72வது அமர்வின்போது ஜனாதிபதி - குட்டெரஸ் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போதே குட்டெரஸ் மேற்படி கருத்து வெளியிட்டிருந்தார்.



வடமராட்சியில் புதிய நீர்த்தேக்கத்தை உருவாக்கி குடிநீர் வழங்கத் திட்டம்!
[Sunday 2017-09-24 08:00]

யாழ். குடாநாட்டுக்காக குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில், மழை நீர் சேகரிப்புத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, குடாநாட்டில் பெய்யும் மழையில் 20 சதவீதத்தை வடமாட்சியில் உள்ள 78 சதுர கிலோ மீற்றர் விஸ்தீரணம் கொண்ட நீரேரில் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு வட மாகாண சபை முதலமைச்சரும், அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளனர்.



75 வீதமான போரை முடிவுக்குக் கொண்டு வந்தது நான் தான்! - என்கிறார் சந்திரிகா
[Sunday 2017-09-24 08:00]

மூன்று தசாப்தங்களாக நிலவிய போரின் பெரும்பகுதியை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை தன்னையே சேரும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ விடுதலைப் புலிகளிடமிருந்த 75 வீதமான நிலப்பரப்பை நானே வெற்றி கொண்டேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 25 வீதம் மாத்திரமே யுத்தத்தை நிறைவு செய்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.



என்னைக் கொல்ல வருபவன் பைத்தியக்காரன்! - இப்படிச் சொல்கிறார் மகிந்த
[Sunday 2017-09-24 08:00]

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள தனது வீட்டுக்குள் கத்தியுடன் நுழைய முயன்ற நபரை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்தமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச, எவரேனும் கத்தியை எடுத்துக்கொண்டு என்னை கொலை செய்ய வருவாரேயானால் அவர் பைத்தியகாரனாக இருப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.



மாந்தைச் சந்தியில் விபத்து- யாழ். இளைஞன் பலி!
[Sunday 2017-09-24 08:00]

மன்னார்-யாழ் பிரதான வீதி மாந்தை சந்தியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் ஆத்திமோட்டை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். திருக்கேதீஸ்வரத்தில் இருந்து வந்த 4 இளைஞர்கள் முச்சக்கர வண்டியில் பிரதான வீதியை கடக்க முற்பட்ட போது,மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொரியுடன் மோதி விபத்து நடந்தது. முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



ஆறு மாகாணசபைகளுக்கு மார்ச்சில் தேர்தல்!
[Sunday 2017-09-24 08:00]

எதிர்வரும் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் ஆறு மாகாணசபைகளின் தேர்தல்களை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் பதவிக் காலம் இம்மாதத்துடன் பூர்த்தியாக உள்ள நிலையில் இந்த மாகாணசபைகளுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்த ஆண்டில் பதவிக் காலம் நிறைவடைய உள்ள மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணசபைகளின் தேர்தலும் மார்ச் மாதம் நடத்தப்பட உள்ளது.



இலங்கைக்கு திருட்டுத்தனமாக வரவில்லை! - சிங்களப் பத்திரிகைக்கு அருட்தந்தை எஸ்.ஜே இமானுவேல் பேட்டி
[Sunday 2017-09-24 08:00]

இலங்கைக்குத் தாம் திருட்டுத்தனமாக வரவில்லை என்று உலக தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே இமானுவேல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால தனக்கு பலமுறை அழைப்பு விடுத்திருந்ததாகவும் அதற்கமையவே தாம் இந்த விஜயத்தை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் பின்னர் இலங்கைக்கான தனது முதலாவது பயணமாக இது அமைந்திருப்பதாக இம்மானுவேல் அடிகளார் சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.



வடமராட்சி விபத்தில் இருவர் படுகாயம்! Top News
[Sunday 2017-09-24 08:00]

வடமராட்சி- புறாப்பொறுக்கி, யாழ்-பருத்தித்துறை பிரதான வீதியில் நேற்று பிற்பகல் 5 மணியளவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து இரண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர். கொழும்பைச்சேர்ந்த விக்ரம ஆராச்சி மற்றும் இமையாணன் மேற்கைச்சேர்ந்த குகதாசன் அனுசியா ஆகியோர் பலத்த காயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



சுன்னாகத்தில் நேற்றிரவு கடை தீக்கிரை!
[Sunday 2017-09-24 08:00]

சுன்னாகம் சந்தியிலுள்ள அழகுப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. மின் ஒழுக்கே தீ விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. தீ விபத்தினையடுத்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தீயணைப்புப் பிரிவினரும் அப்பகுதி வர்த்தகர்களும் இணைந்து தீயை மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கடையிலுள்ள பெரும்பாலான பொருட்கள் எரிந்துவிட்டதாக கூறப்படுகின்றபோதும் சேத விபரங்கள் தொடர்பில் உறுதிப்படுத்த முடியவில்லை.



நல்லிணக்க முயற்சிகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதியிடம் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்தல்! Top News
[Saturday 2017-09-23 19:00]

நல்லிணக்க முயற்சிகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் ஷெயிட் அல் ஹுஸைன் வலியுறுத்தியுள்ளார்.நேற்று (22) இரவு, அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடந்த சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்புத் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-



இரண்டு முகம் காட்டுகிறது இடைக்கால அறிக்கை! - தமிழ் சிவில் சமூக அமைப்பு குற்றச்சாட்டு
[Saturday 2017-09-23 19:00]

அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவினால் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையானது தமிழ் மக்களுக்கு ஒரு முகத்தையும், சிங்கள மக்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்டும் வகையில் கபடத்தனமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழ் சிவில் சமூக அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.



மருதானை திரிபொலி இராணுவ முகாமில் இருந்து வழி நடத்தப்பட்ட லசந்த படுகொலைத் திட்டம்!
[Saturday 2017-09-23 19:00]

மருதானை திரிபொலி இராணுவ முகாமை சேர்ந்த அணியினரே சன்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த கொலைக்கு கட்டளையிட்டவர் அரச புலனாய்வு சேவையின் உயர் பதவியை வகித்தவர் எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு அமைச்சின் அன்றைய உயர் அதிகாரியின் அறிந்தே இந்த கொலை நடந்துள்ளதாக ஏற்பட்டுள்ள சந்தேகத்திற்கு அமைய விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.



வடக்கில் குற்றச்செயல்களை தடுப்பது குறித்து பொலிஸ் அதிகாரிகளுடன் ஆளுனர் ஆலோசனை! Top News
[Saturday 2017-09-23 19:00]

வட மாகாணத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் இன்று சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.



இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து செயற்பட்டதாக ஞானசார தேரர் சாட்சியம்!
[Saturday 2017-09-23 19:00]

கடந்த காலத்தில் இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் நெருக்கமாக செயல்பட்டதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டி ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட வழக்கு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது அளித்த சாட்சியத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.



தியாகதீபம் திலீபனுக்கு புதுக்குடியிருப்பில் அஞ்சலி! Top News
[Saturday 2017-09-23 19:00]

தியாக தீபம் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவுகூரல் புதுக்குடியிருப்பில் இன்று உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. புதுகுடியிருப்பு ஜனநாயகப் போராளிகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திலீபனை நினைவு கூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.மேலும், இந்த அஞ்சலி நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.



பொருத்து வீட்டுத் திட்டத்துக்கு எதிராக மீண்டும் வழக்கு! - சுமந்திரன் தாக்கல்
[Saturday 2017-09-23 19:00]

வடக்கு, கிழக்கில் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள பொருத்து வீட்­டுத்­திட்­டத்­திற்கு எதி­ராக மீளவும் உயர் நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.ஏ.சுமந்­திரன் இந்த வழக்கைத் தாக்கல் செய்­துள்ளார்.



இடைக்கால அறிக்கையை மகாநாயக்கர்களிடம் கையளித்தார் லக்ஸ்மன் கிரியெல்ல!
[Saturday 2017-09-23 19:00]

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டவாக்க சபையின் இடைக்கால அறிக்கை மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று முற்பகல் இடைக்கால அறிக்கையை மகாநாயக்க தேரர்களிடம் கையளித்துள்ளார்.



வெளிநாட்டுப் புலிகளை ஒழிப்போம் என்று சிங்கள அமைப்புகள் ஜெனிவாவில் நாளை ஆர்ப்பாட்டம்!
[Saturday 2017-09-23 19:00]

இலங்­கைக்கு வெளி­யில் வாழ்­கின்ற விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் உறுப்­பி­னர்­களை ஒழிப்­போம் என்று வலி­யு­றுத்தி ஜெனி­வா­வில் நாளை ஆர்ப்­பாட்­ட­ம் நடை­பெ­ற­வுள்­ளது. ஜெனி­வா­வி­லுள்ள ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் அலு­வ­ல­கத்­துக்கு முன்­னா­ல் இந்த ஆர்ப்­பாட்­டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. சிங்­களத் தேசி­ய­வாத அமைப்­பு­க­ளின் கோரிக்­கை­யின் பிர­கா­ரமே புலம்­பெ­யர் வாழ் சிங்­க­ள­வர்­க­ளால் இது ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.



75 ரூபாவுக்கு மேல் தேங்காயை விற்பது தண்டனைக்குரிய குற்றம்!
[Saturday 2017-09-23 19:00]

தேங்காய் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 75 ரூபாவாக இருக்க வேண்டும் என்று தென்னை அபிவிருத்திச் சபை கூறியுள்ளது. தேங்காய் ஒன்றை நுகர்வோர் கொள்வனவு செய்யும் வரையிலான அனைத்து செயற்பாடுகளுக்கும் செலவாகின்ற முழுத் தொகையை கணக்கிடும் போது, ஒரு தேங்காயை அதிகபட்சமாக 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என்று சபையின் தலைவர் கபில யகந்தாவல கூறினார். குறித்த விலையை மீறி அதிக விலைக்கு தேங்காயை விற்பனை செய்வது தண்டனைக்குறிய குற்றமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



வவுனியாவில் சர்வதேச சமாதான தினம் அனுஷ்டிப்பு! Top News
[Saturday 2017-09-23 18:00]

சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டமைப்பினால் ( International Youth Alliance for Peace) தேசிய இளைஞர் சமாதான செயலமர்வு நாடாளாவிய ரீதியால் 20 மாவட்டங்களில் சர்வதேச சமாதான தினமான செப்டெம்பர் மாதம் 21ம் வியாழக்கிழமை அன்று பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், உயர்கல்வி நிறுவன மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது.


Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா