Untitled Document
March 28, 2024 [GMT]
காதலர்களை பிரித்து வைக்க கட்டணம் வசூலிக்கும் நிறுவனம்!
[Sunday 2017-05-07 09:00]

உங்கள் காதலன் அல்லது காதலியை விட்டு விலகுவதற்கு இன்னொருவருக்கு நீங்கள் பணம் கொடுப்பீர்களா?
இந்த 28 வயது இளைஞர் அதைத்தான் செய்திருக்கிறார்.

உங்கள் காதலன் அல்லது காதலியை விட்டு விலகுவதற்கு இன்னொருவருக்கு நீங்கள் பணம் கொடுப்பீர்களா? இந்த 28 வயது இளைஞர் அதைத்தான் செய்திருக்கிறார். "உறவை முறித்துக் கொள்வது என்பது யாருக்குமே மிகவும் கடினமான விஷயம். அந்த வேதனையை நான் நேரடியாக அனுபவிப்பதற்கு பதிலாக இன்னொருவர் அனுபவிப்பது எளிமையாக இருக்கும் என்று நினைத்தேன்," என்கிறார், ட்ரெவர் மெயர்ஸ் என்ற அந்த இளைஞர்.அது எப்படி?

  

உறவுகளை முறிப்பதற்கென்றே ஒரு நிறுவனம் இருக்கிறது. ஆங்கிலத்தில், `The Breakup Shop' என்று சொல்கிறார்கள். நம்ப முடியவில்லையா? நிஜம்தான். அந்த நிறுவனத்தின் சேவையைத்தான் ட்ரெவர் நாடினார். அவர் இருப்பது கனடாவில். வாழ்க்கையில் சிங்கிளாக வாழ்வது பலமா, பலவீனமா?"எனக்கு ஒத்துவராது என்று தெரிந்ததும் ஒருசில குறுகிய கால நட்புக்களை பிரேக்அப் ஷாப் உதவியுடன்தான் கைகழுவிவிட்டேன். எப்படியிருந்தாலும் நமக்காக உறவை முறிப்பவர்கள் பணம் பெற்றுக் கொள்கிறார்கள். இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை. இதை அடிக்கடி பயன்படுத்தாவிட்டாலும். அதற்காக ஒரு நிறுவனம் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது" என்கிறார் அவர்.

எப்படி உருவானது `உறவை முறிக்கும் கடை'?

கனடாவைச் சேர்ந்த சகோதரர்கள் இவான் மற்றும் மெகென்ஸி கீஸ்ட் ஆகியோர் இணைந்து, 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதை உருவாக்கினார்கள்.ஆனால், அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டுமல்லவா? மெகென்ஸியை காதலித்து வந்த ஒரு பெண், திடீரென அவரது வாழ்க்கையில் இருந்து மறைந்துவிட்டார். தினமும் சுற்றித்திரிந்து, உற்சாகமாக இருந்த அவரது மனம் துடித்தது. ஆனால், தொலைபேசித் தொடர்பு கூட இல்லை. அனுப்பிய குறுந்தகவல்களுக்கும் காதலியிடமிருந்து பதில் இல்லை. பிரிவை நேரடியாகச் சொல்லும் மன வலிமை அந்தக் காதலிக்கு இல்லை" என்றார் இவான்.அந்தப் பிரிவால் பிறந்ததுதான் `பிரேக்அப் ஷாப்'. அடுத்த ஒரே வாரத்தில் அந்த நிறுவனம் உருவானது.

காதலியோ, காதலனோ அல்லது நாம் நட்பு வைத்திருக்கும் எந்த ஒரு நபருடனோ உறவு முறிய வேண்டுமானால் அவருக்கு மொபைல் ஃபோனில் குறுந்தகவல் அல்லது ஈ-மெயில் மூலம் தகவல் அனுப்ப குறைந்தபட்ச 10 கனடா டாலர்களை (6 பிரிட்டன் பவுண்டுகள்) கட்டணமாக வசூலிக்கிறது பிரேக்அப் ஷாப். அதிகபட்சமாக, குக்கீஸ் மற்றும் ஒயின் பாட்டில் ஆகிய பரிசுப்பொருட்களுடன் பிரேக்அப் பரிசுப் பெட்டி ஒன்றை அனுப்புவதற்கான கட்டணம் 80 டாலர்கள்.தகவல்களை எப்படி வேண்டுமானாலும் வடிவமைத்துக் கொள்ளலாம். ஆனால், தரக்குறைவாகவோ மனம் புண்படும் வகையிலோ எந்தத் தகவலையும் தங்கள் நிறுவனம் அனுப்பாது என்கிறார் இவான்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில், நூற்றுக்கணக்கான உறவுகளை முறித்து சிறந்த சேவையாற்றியிருப்பதாக பெருமிதம் கொள்கிறார்கள் இந்த சகோதரர்கள். இது பகுதி நேர வேலைதான். தொழில்நுட்பம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் முழுநேர பணியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

`இது வேகமான உலகம்'

தங்கள் நிறுவனத்தின் நோக்கம் பற்றிக் கேள்விப்பட்டதும், `என்ன கொடுமை சார் இது' என்று சொல்லி சிலர் சங்கடப்படுகிறார்களாம். ஆனால், காலம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதுதான் இவானின் பதிலாக இருக்கிறது."மிக வேகமான தகவல் தொடர்பு உலகில் இருக்கிறோம். எல்லாமே உடனுக்குடன் நடக்கிறது. அப்படியே முடிந்தும் போகிறது. எல்லா வழிகளிலும், அடுத்த தலைமுறை தகவல் தொடர்பில் புரட்சி படைக்கிறது" என்கிறார் இவான்.ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் இணையதள இன்ஸ்டியூட்டின் ஆராய்ச்சி விஞ்ஞானியான பெர்னி ஹோகன், உறவுகளை முறித்துக் கொள்வது என்பது ஒரு புதிய பரிமாணத்தை அடைந்துவிட்டதாகச் சொல்கிறார்."காதலன் - காதலி இடையே இப்போதெல்லாம் ஒருமித்த கருத்து என்ற தத்துவம் எல்லாம் மாறிப்போய்விட்டது. இணையதளம் வழியாகவோ அல்லது வேறு வழிகளிலோ ஒருவரைச் சந்திக்கும்போது, அவர்கள் நண்பர்களின் நண்பர்களாகவோ அல்லது சக பணியாளர்களின் நண்பர்களாகவோ இருப்பதில்லை. அதனால், உறவு முறியும்போது பெரும்பாலும் நெருங்கிய நட்புக்களைப் பிரியும்போது ஏற்படும் வலி இருப்பதில்லை" என்கிறார் அவர்.

"அதிகாரப்பூர்வமாக உறவை முறித்துக் கொள்ளாமல், மூன்றாவது நபர் மூலமாகமாக உறவை முறித்துக் கொள்வது ஒருவேளை சரியானதாக இருக்கலாம். இருந்தாலும், இது நெறிமுறை மீறல்தான்" என்கிறார் அவர்.அதே நேரத்தில், `உன் காதல் உனக்கு இல்லை' என்று யாரோ ஒருவர் தீர்ப்பு சொல்வதை, எல்லாக் காதலர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதும் உளவியலாளர்களின் கருத்தாக உள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்: எங்கு தெரியுமா?
[Sunday 2024-03-10 17:00]

உலகில் பல அழகான தீவுகள் உள்ளன. அங்கு மக்கள் சுற்றுலா செல்கின்றனர். அதற்காக அவர்கள் பல லட்சம் ரூபாய் பணம் செலவிடுகின்றனர். ஆனால் ஒரு அழகான தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி அங்கு வசிப்பவர்களுக்கு ரூ.1.5 கோடி வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றிற்குள் நீங்கள் பொருந்தினால் மட்டுமே உங்களுக்கு ரூ.1.5 கோடி கிடைக்கும்.



கனடாவில் 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும் காணித்துண்டு?
[Wednesday 2024-03-06 19:00]

கனடாவில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய மக்கள் கூடுதல் நாட்டம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கோச்ரென்ஸ் நகரின் மேயர் பீற்றர் பொலிடிஸ் இது குறித்து அறிவித்துள்ளார்.



பிரித்தானிய கடலில் கண்டறியப்பட்ட புதிய கடல் வாழ் உயிரினம்!
[Friday 2024-03-01 18:00]

பிரித்தானியாவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் "ப்ளூரோப்ராங்கியா பிரிட்டானிகா" (Pleurobranchaea britannica) என்ற தனித்துவமான உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரித்தானியாவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் இதுவரை அறியப்படாத, தனித்துவமான ஓர் கடல் நத்தை (sea slug) இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.



"பேய்களின் சமையலறை" - கொடைக்கானலில் உள்ள குணா குகை பற்றிய உண்மை தகவல்!
[Wednesday 2024-02-28 18:00]

கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குணா குகை பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அது பேய்களின் சமையலறை என்பது குறித்து தெரியுமா?கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குணா குகையை முந்தைய காலத்தில் ‘டெவில்ஸ் கிச்சன்’ என்று தான் அழைத்துள்ளனர். அதாவது ‘பேய்களின் சமையல் அறை’ என அழைக்கப்பட்டது.



உலக சாதனை படைத்த 4 மாதக் குழந்தை!
[Sunday 2024-02-18 18:00]

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நாடிகாமா பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவருக்கு திருமணமாகி நான்கு மாதங்களுக்கு முன்பு கைவல்யா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை மிகச் சிறிய வயதிலேயே காய்கறிகள், பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என வெவ்வேறு 120 பொருட்களை அடையாளம் காணும் திறமையைக் கொண்டுள்ளார்.



பேய்கள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்!
[Tuesday 2024-02-13 16:00]

ராஜஸ்தானில் அமைந்துள்ள குல்தாரா என்ற கிராமத்தில் மனிதர்களுக்குப் பதிலாக பேய்கள் உலா வருகின்றது. மற்றைய கிராமங்களை போல் செல்வச் செழிப்பாக இருந்த இந்த கிராமத்தில் தற்போது பேய்களும் ஆவிகளும் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. இந்த கிராமத்தில் பாலிவால் பிராமணர்கள் வசித்து வந்துள்ளார்கள். இங்கு வசித்த மனிதர்கள் எங்கே சென்றார்கள்? ஏன் இந்தக் கிராமம் பேயின் ஆட்சியாக மாறியது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.



அபுதாபியில் திறக்கப்படும் முதல் இந்து கோயில்!
[Friday 2024-02-09 18:00]

அபுதாபியில் முதல் இந்து கோயிலை வரும் 14 -ம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். அபுதாபியில் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக சுமார் 900 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள பிஏபிஎஸ் அமைப்பின் பிரமாண்ட இந்து கோயில் வரும் 14 -ம் திகதி திறக்கப்படவுள்ளது.



நாய்க்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி போட்ட குடும்பம்!
[Tuesday 2024-02-06 18:00]

நாய்க்குட்டி கர்ப்பமானதையடுத்து அதற்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி விருந்து வைத்துள்ளனர். பொதுவாகவே வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது உண்டு. அதிலும் முக்கியமாக நாய்க்குட்டியை மிகவும் விருப்பமாக வளர்ப்பார்கள். அதுவும் சிலரது பாசம் செல்லப்பிராணிகளிடம் அதிகமாக காண்பிக்கப்படும்.



எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம சுரங்கப்பாதை!
[Sunday 2024-01-28 16:00]

சில ஆண்டுகளுக்கு முன்பு கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும் முயற்சியில் ஆராச்சியாளர்கள் இறங்கிய போதே அவர்கள் அந்த சுரங்கப்பாதை கண்டுபிடித்தனர். பண்டைய எகிப்து ராணி கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும்போது நிபுணர்கள் ஒரு சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்தனர். அதை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அது ஒரு மாபெரும் வடிவியல் அதிசயம் என்று தெரிவித்துள்ளனர்.



இறந்த குழந்தையின் சாம்பலை கற்களாக மாற்றி பாதுகாக்கும் தம்பதி!
[Saturday 2024-01-20 16:00]

அரிய வகை நோயால் உயிரிழந்த 15 மாத மகளின் சாம்பலை கற்களாக மாற்றி அமெரிக்க தம்பதி பாதுகாத்து வருகின்றனர். கெய்லி மற்றும் ஜேக் மாஸ்ஸியின் என்ற அமெரிக்க தம்பதியின் மகள் பாப்பிக்கு 9வது மாதத்தில் அரிய வகை TBCD என்ற மரபணு கோளாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்க வணிக வளாகத்திற்குள் ஏலியன்கள் புகுந்ததா?
[Monday 2024-01-08 18:00]

அமெரிக்காவில் உள்ள மால் ஒன்றில் ஏலியன்கள் இறங்கியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேற்று கிரக வாசிகள் எனப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது விஞ்ஞான உலகில் நீண்ட காலமாகவே நீடித்து வரும் வாதமாக உள்ளது.



புத்தாண்டை முதலாவதாக வரவேற்ற பசிபிக் தேசம்!
[Sunday 2023-12-31 17:00]

பசிபிக் நாடான Kiritimati atoll புத்தாண்டை முதலாவதாக வரவேற்றுள்ளது. இரண்டாவதாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. நியூசிலாந்தை அடுத்து டோங்கா மற்றும் சமோவா ஆகிய நாடுகள் 2024 ஆம் ஆண்டை வரவேற்க காத்திருக்கின்றன. அத்துடன் பல மில்லியன் மக்கள் வரும் மணிநேரங்களில் உலகம் முழுவதும் கொண்டாட்டங்களில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



எந்த வேலையும் செய்யாமலே ஆண்டுக்கு ரூ 8,300 கோடி சம்பாதிக்கும் நபர்!
[Saturday 2023-12-30 16:00]

பணம் சம்பாதிக்கவும் எதிர்காலம் கருதியும் பலர் இரவு பகல் பாராமல் உழைக்கும் நிலையில், எந்த வேலையும் செய்யாமலே பிறக்கும் புத்தாண்டு முதல் ஒருவர் ஆண்டுக்கு ரூ 8,300 கோடி சம்பாதிக்க இருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான Steve Ballmer என்பவரே, எந்த வேலையும் செய்யாமல் ஆண்டுக்கு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் சம்பாதிக்க இருக்கிறார்.



100 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் கொண்டாடிய நாடு!
[Tuesday 2023-12-26 18:00]

முதன்முறையாக ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உக்ரைனில் 100 ஆண்டுகால வழக்கத்தை மாற்றி, மக்கள் நேற்று (25.12.2023) கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.



டைனோசர் முட்டையை குலதெய்வமாக வழிபடும் கிராம மக்கள்!
[Wednesday 2023-12-20 18:00]

முன்னோர்களின் வழியில் டைனோசர்களின் முட்டையை குலதெய்வமாக கிராமத்தினர் வழிபடும் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டம் பட்லியா கிராமத்தைச் சேர்ந்தவர் வெஸ்டா மண்டலோய் (40). இவர், ஒரு உருண்டையான பொருளை குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ளார்.



கனடாவில் 75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மிருகத்தின் உடல் பாகங்கள் மீட்பு!
[Monday 2023-12-11 18:00]

கனடாவில் 75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் ஒன்றின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. டைரானோசர் (tyrannosaur)எனப்படும் வகை டைனோசர் ஒன்றின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடனாவின் அல்பேர்ட்டாவில் இந்த உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



40 கொள்ளுப் பேரன் பேத்திகளுடன் 100வது பிறந்தநாள் கொண்டாடிய தமிழக முதியவர்!
[Monday 2023-12-11 06:00]

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரி குமரகுரு தனது 5 தலைமுறை வாரிசுகளுடன் தன்னுடைய 100வது பிறந்தநாளை கொண்டாடி அசத்தியுள்ளார். தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த ஜவுளி வியாபாரி குமரகுரு தன்னுடைய 5 தலைமுறை வாரிசுகளுடன் தன்னுடைய 100வது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார்.



விரைவில் முதல் பயணத்தை தொடங்கவிருக்கும் டைட்டானிக்கை விட 5 மடங்கு பெரிய கப்பல்!
[Saturday 2023-12-09 18:00]

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டைட்டானிக்கை விட 5 மடங்கு பெரியதும் உலகின் மிகப்பெரியதுமான பயணிகள் கப்பல் தனது முதல் பயணத்தை அடுத்த வருடம் ஆரம்பிக்கவுள்ளது. Icon of the Seas என பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் Royal Caribbean International நிறுவனத்தினால் இயக்கப்படவுள்ளது.



தெற்காசிய நாடொன்றில் மகள்களை திருமணம் செய்யும் தந்தைகள்!
[Wednesday 2023-12-06 18:00]

மண்டி பழங்குடியினர் இனத்தில் மகளை திருமணம் செய்துகொள்ளும் விநோத பழக்கம் ஒன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக திருமணம் என்பது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டது. பெரும்பான்மை மக்களிடம் தந்தை, சகோதர, சகோதரிகளிடையே திருமணம் செய்யும் பழக்கம் இல்லை.



வெளிநாடொன்றில் நடக்கும் விநோத திருமணம்!
[Thursday 2023-11-30 18:00]

உலகளவில் விசித்திரமான திருமண மரபுகள் உள்ளன. அதில் பல திருமண மரபுகள் நமக்கு அச்சரியத்தையும், சுவராஸ்யத்தையும் தருகின்றன. அந்த வகையில், மேற்கு ஆப்பிரிக்காவில் வொடாபே என்ற பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பழங்குடியினரில், மக்கள் மற்றவர்களின் மனைவிகளை தன்வசப்படுத்தி திருமணம் செய்து கொள்வதுதான் அவர்களின் வழக்கம்.


Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா