Untitled Document
April 19, 2024 [GMT]
மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்: -சீமான் வலியுறுத்தல்
[Wednesday 2017-04-26 18:00]

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய அண்ணன் வைகோ அவர்கள் தேசத்துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டு, 20 நாட்களுக்கு மேலாகச் சிறைப்பட்டிருப்பது மிகுந்த மனவருத்தத்தைத் தருகிறது.
கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 15ந் தேதி சென்னை ராணிசீதை மகாலில் நடைபெற்ற

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய அண்ணன் வைகோ அவர்கள் தேசத்துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டு, 20 நாட்களுக்கு மேலாகச் சிறைப்பட்டிருப்பது மிகுந்த மனவருத்தத்தைத் தருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 15ந் தேதி சென்னை ராணிசீதை மகாலில் நடைபெற்ற   

அந்த கூட்டத்தில் பங்குபெற்றவர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் அன்றைய கூட்டத்தில் அண்ணன் வைகோ அவர்களின் மிகச்சிறந்த உரையை கேட்கும் வாய்ப்பு கிட்டியது. அப்பேச்சைத்தான் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக திரிக்கப்பட்டு அன்றைய திமுக அரசால் அவர் மீது தேசத்துரோக வழக்குப் புனையப்பட்டது.

இதன்விளைவாக, அவரது கடவுச்சீட்டும் முடக்கப்பட்டது. வழக்கு தொடுக்கப்பட்டு 8 வருடங்களுக்கு மேலாகியும் முடித்து வைக்கப்படாததால் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில்சென்று வழக்கை விரைந்து முடிக்கக்கோரி, பிணையை மறுத்துச் சிறைசென்றுள்ளார் அண்ணன் வைகோ. தடைசெய்யப்பட்ட இயக்கங்களையோ, அதன் தலைவர்களையோ ஆதரித்துப் பேசுவது குற்றமில்லை என ஒருமுறைக்குப் பலமுறையாக உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தெளிவுப்படுத்தியுள்ளது.

இறுதிகட்ட ஈழப்போரின்போது, ஈழப்படுகொலையை உலகுக்கு எடுத்துரைத்ததற்காக என் போன்றோர் மீது தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்குகளிலும்கூட அவ்வகைத் தீர்ப்புகளே வெளிவந்திருக்கின்றன. அப்படியிருக்கையில், அண்ணன் வைகோ மீது தொடுக்கப்பட்ட இவ்வழக்கானது சட்டவிதிமுறைகளுக்கே எதிரானது; சனநாயகத்தின் அடிநாதமான கருத்துரிமைக்கே உலைவைக்கிற செயலாகும்.

ஈழப்படுகொலையை மூடி மறைக்கவும், அதற்கெதிராய் குரலெழுப்புவோரின் குரல்வளையை நெறிக்கவும் அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு தயவில் தமிழகத்தை ஆண்ட திமுக அரசு பயங்கரவாதத்தின் கொடுங்கரம் கொண்டு அடக்குகிற செயலாகவே இவ்வகை வழக்குகள் தொடுக்கப்பட்டன என்பதே காலம் உணர்த்தும் உண்மை.

சர்வதேச அரங்கில் தமிழர்களின் சார்பாக வலிமையான குரல்கள் இருந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் தமிழகத்தில் தொடர்ந்து ஈழ தமிழர்களின் போராட்டத்திற்கு துணை நிற்கும் தலைவர்களின் கடவுசீட்டுகள் திட்டமிட்டு முடக்கப்படுகிறது. அப்படித்தான் அண்ணன் வைகோ அவர்களின் கடவுசீட்டு என்னுடைய கடவுசீட்டு ஆகியவை முடக்கப்பட்டது. இது அப்படட்டமான நீதிக்கு புறம்பான செயல். இவ்வழக்குகள் சட்டப்படியும், நியாயப்படியும் நிலைநிறுத்த தக்கதல்ல என்பதால், உடனடியாக நடத்தி முடிக்க இயலும்.

ஆனால் இவ்வழக்கினை அரசின் தரப்பு வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறது. இதன்மூலம், இவ்வழக்குகளுக்குப் பின்புலத்தில் இருக்கும் அரசியல் உள்நோக்கத்தையும், காழ்ப்புணர்ச்சியையும் அறிந்து கொள்ளலாம். ஆளும் வர்க்கங்கள் போராட்டக்காரர்களுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் இவ்வித வழக்குகளைத் தொடுத்து அதிகாரத்தினைத் தவறாகப் பயன்படுத்தி வருவது தமிழக ஆட்சியாளர்களுக்கு ஒன்றும் புதிதல்ல என்றாலும், இது வன்மையான கண்டனத்திற்குரியது.

எப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் ஒரு அசாதாரணச் சூழலும், அரசியல் பெருங்குழப்பமும் நிலவிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் வாழ்வாதாரத்தினையும், நிலவளத்தினையும் நிர்மூலமாக்கும் திட்டங்கள் தமிழர் மண்ணில் புகுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராக, அனுபவங்கள் பல பெற்ற அண்ணன் வைகோ அவர்கள் இத்தகைய சூழலில் சிறைப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு ஏற்பட்ட இழப்பாகும். அவர் விரைவில் சிறைமீண்டு தமிழகத்தின் உரிமைகளுக்காகக் கருத்துரையாளராகவும், களப்போராளியாகவும் போராடும் தருணத்தை எதிர்நோக்குகிறோம்.

எனவே, அண்ணன் வைகோ அவர்கள் மீது தொடரப்பட்ட இப்போலியான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும், அவருடைய கடவுசீட்டை உடனடியாக திருப்பித் தரவேண்டும் என்ற கோரிக்கைகளோடு அண்ணன் வைகோ அவர்கள் விடுதலைபெற்று தனது அரசியல், சமூகப் பங்களிப்பை செலுத்த வேண்டும் என்றும் உளமாற விரும்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



அனைத்து ஏற்பாடுகளும் தயார்: வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்!
[Friday 2024-04-19 07:00]

தமிழகத்தில் (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.



தேர்தல் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர சோதனை!
[Friday 2024-04-19 07:00]

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும் நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



ஈரோட்டில் போலீசார் விடிய விடிய தீவிர சோதனை!
[Friday 2024-04-19 07:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.



“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
[Thursday 2024-04-18 18:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.



“வாக்காளர்கள் கவனத்திற்கு...” - சத்யபிரதா சாகு முக்கிய தகவல்!
[Thursday 2024-04-18 18:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.



ஒட்டு மொத்தமாக தேர்தலை புறக்கணித்த கிராமம்!
[Thursday 2024-04-18 18:00]

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு, முனங்காடு மீனவ கிராமத்தில் தேர்தலுக்கு முன்பே தேர்தல் முடிவை பகிரங்கமாக அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த கிராமத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஒரே ஒருமுறை தான் தார் சாலை போடப்பட்டிருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம். அதுவும் ஒருசில மாதங்களில் பழுதாகி பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்தும், புகார் மனுக்களை அளித்தும் பலனளிக்காத நிலையில் இரண்டாவது தார் சாலை போட சொல்லியும் மற்றும் சுத்தமான குடிநீர் கேட்டும் போராடும் ஒரு அத்திப்பட்டி மாதிரியான அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படாத ஒரு குக்கிராமம் தான் அது.



கோவையில் அண்ணாமலை வெற்றி பெற கைவிரலை துண்டித்த பாஜக பிரமுகர்!
[Thursday 2024-04-18 18:00]

கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை வெற்றி பெற பாஜக நிர்வாகி ஒருவர் கைவிரலை துண்டித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டமான கடலூர், ஆண்டாள் முள்ளி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரை ராமலிங்கம். இவர், அம்மாவட்டத்தில் பாஜக துணைத்தலைவராக உள்ளார்.



ஓய்ந்தது பிரச்சாரம்: முடிவுக்கு வரும் தொழிலாளர் தட்டுப்பாடு!
[Thursday 2024-04-18 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.



வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்!
[Thursday 2024-04-18 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.



வெயிலின் தாக்கம்: வாக்குச்சாவடி மையங்களில் சாமியானா பந்தல்!
[Thursday 2024-04-18 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.



“பாஜகவினர் 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற மாட்டார்கள்” - பிரியங்கா காந்தி!
[Wednesday 2024-04-17 15:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.



“மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
[Wednesday 2024-04-17 15:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.



“ஊழலின் நாயகன் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி விளாசல்!
[Wednesday 2024-04-17 15:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.



திமுகவிலிருந்து சீமான் கட்சிக்கு போக இது தான் காரணம்: பிக்பாஸ் அசீம் வெளிப்படை!
[Wednesday 2024-04-17 15:00]

திமுகவிலிருந்து விலகிய பிக்பாஸ் அசீம் நாம் தமிழர் கட்சியின் ஶ்ரீபெரும்புதூர் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பல்வேறு இடங்களில் அசீம் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.



'மீண்டும் சிக்கிய 4 கோடி'- பறக்கும் படை அதிரடி!
[Wednesday 2024-04-17 03:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.



திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்: அதிர்ச்சியில் மீனவ கிராமம்!
[Wednesday 2024-04-17 03:00]

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.



தேர்தல் விதிமுறையால் மந்தமான ஈரோடு ஜவுளி சந்தை!
[Wednesday 2024-04-17 03:00]

ஈரோடு கனி மார்க்கெட் பகுதியில் தினசரி கடை, வார சந்தை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த ஜவுளி வார சந்தைக்காக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளைக் கொள்முதல் செய்வார்கள்.



வீங்கிய காலுடன் பிரச்சாரம் செய்யும் திருமாவளவன்!
[Tuesday 2024-04-16 18:00]

சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் திருமாவளவன் வீங்கிய காலுடன் பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த 2019 -ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தோல்வியின் விளிம்புக்கு சென்று திருமாவளவன் வெற்றி பெற்றார். அதேபோல இந்த ஆண்டும் கடும் சவால்கள் வரக்கூடாது என்பதற்காக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.



விடுமுறையை கொண்டாட சென்ற பிள்ளைகள்: தந்தை அரங்கேற்றிய கொடூரம்!
[Tuesday 2024-04-16 18:00]

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் தந்தை ஒருவர் மூன்று பிள்ளைகளை கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜல்னா மாவட்டத்தில் உள்ள கச்னர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் தக்வாலே. ஹொட்டல் ஒன்றில் தொழிலாளியாக இவர் வேலை பார்த்து வந்தார்.



பாஜக வந்தால் இது நடக்கும்: அதிமுக குற்றச்சாட்டு!
[Tuesday 2024-04-16 18:00]

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாயாக உயரும் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். தமிழகத்திற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா