Untitled Document
April 30, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
முல்லைத்தீவில் காந்தி சிலை திறப்பு! - காணிகளை மீளத் தரக் கோரி பேரணி Top News
[Friday 2017-04-21 18:00]

முல்லைத்தீவில் சில மாதங்களுக்கு முன்னர், விசமிகளால் சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தியின் சிலை புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இன்று திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் வட்டுவாகலில் மூன்றாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களால் இந்தச் சிலை இன்று திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவில் சில மாதங்களுக்கு முன்னர், விசமிகளால் சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தியின் சிலை புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இன்று திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் வட்டுவாகலில் மூன்றாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களால் இந்தச் சிலை இன்று திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

  

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்திலிருந்து பேரணியாக சென்றனர். வட்டுவாகல் கோத்தபாய கடற்படை இராணுவ முகாமை அகற்றி தரும் படி கோசமிட்டவாறு ஊர்வலமாக சென்ற அவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர். முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் பொதுமக்களின் காணிகளை கடற்படையினர் சுவீகரித்து வைத்துள்ள நிலையில் அந்த காணிகளை கடற்படையினர் மீள கையளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

மேலும் குறித்த மக்களின் உண்ணாவிரத போராட்ட இடத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் இந்திய அரசு முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியதுடன், மக்களின் அடையாள உண்ணாவிரத போராட்டத்திலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



சிவராம் படுகொலை பற்றிய உண்மைகளைக் கண்டறிய வேண்டும்! - சம்பந்தன் Top News
[Sunday 2017-04-30 09:00]

சிவராமின் படுகொலை சம்பந்தமான உண்மைகள் இன்னும் கண்டறியப்படவில்லை. அந்த உண்மைகள் அறியப்பட வேண்டியது தான் அவசியம் என்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் நேற்று சிரேஷ்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 12ஆவது நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது.



தமிழர்களின் உரிமைகளை பேச்சுக்களின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாது என்ற உண்மையை உலகிற்கு உரைத்தவர் சிவராம்!
[Sunday 2017-04-30 09:00]

சிங்களப் பேரினவாத அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக மாமனிதர் தராகி சிவராம் தனது சிந்தனையையும் எழுத்தையும் முன்வைத்து வந்தார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட மாமனிதர் தராகி சிவராமின் 12ம் ஆண்டு நினைவு நாள் கிளிநொச்சி பாரதி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண் டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.



கொழும்பு வரும் மோடிக்கு விசேட பாதுகாப்பு!
[Sunday 2017-04-30 08:00]

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஆகியன கூட்டாக இணைந்து விசேட பிரபுக்கள் பாதுகாப்பு படையணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விசேட படையணியே நரேந்திர மோடியின் இலங்கை பயணம் குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறது.



புலிகளின் திட்டங்கள் நிறைவேறுகின்றன! - ஐங்கரநேசன்
[Sunday 2017-04-30 08:00]

விடுதலைப்புலிகளால் திட்டமிடப்பட்டிருந்த பல அபிவிருத்திச் செயற்பாடுகள் இன்று எமது அமைச்சினால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் வடமாகாண விவசாய அமைச்சரால் கால்நடை பயிற்சி நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



நவுரு தீவு ஒரு நரகம்! -இலங்கை அகதியின் வேதனை
[Sunday 2017-04-30 08:00]

நவுரு தீவு ஒரு நரகம் என அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். சட்டவிரோதமாக படகு மூலம் சென்றவர்கள் அவுஸ்திரேலியாவினால் நவுரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த தடுப்பு முகாமிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞன் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி விக்டோரியாவில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றினார். இந்த நிகழ்வு அகதி நடவடிக்கை தொடர்பான அமைப்பு ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



மேதினத்துக்கு வராவிட்டால் மஹிந்த மீது நடவடிக்கை எடுக்கப்படாது!
[Sunday 2017-04-30 08:00]

மேதினத்துக்கு வராவிட்டால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரசன்ன ரணதுங்க உள்ளடங்களாக கூட்டு எதிரணியில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் எவருக்கு எதிராகவும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதாக தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.



கொழும்பில் கண்காணிப்பு நிலையத்தை அமைக்கும் அமெரிக்கா! - புலனாய்வு அமைப்புகள் தீவிர கவனம்
[Sunday 2017-04-30 08:00]

கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு சொந்தமான 6 ஏக்கர் காணியை, அமெரிக்க தூதரகம் கொள்வனவு செய்துள்ளதனை தொடர்ந்து பல நாடுகளின் புலனாய்வு பிரிவுகள் இலங்கை கவனம் செலுத்தியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.



சிங்கப்பூரில் இருந்து திரும்பினார் கோத்தா!
[Sunday 2017-04-30 08:00]

சிங்கப்பூர் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புலமைப் பரிசில் பெற்றுக் கொண்டு,அங்கு கற்கைநெறி ஒன்றைத் தொடர்ந்த கோத்தபாய வார இறுதியில் நாடு திரும்பியுள்ளார். பாதுகாப்பு தொடர்பான ஒரு மாத கால கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து அவர் நாடு திரும்பியுள்ளார்.



மோடியுடன் உடன்பாடு கையெழுத்திடப்படாது! - ஜனாதிபதி
[Sunday 2017-04-30 08:00]

மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தின கொண்டாட்டத்தில் பங்குபற்றுவதன்றி வேறு எந்தவொரு உத்தியோகபூர்வ நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டார் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.



முள்ளிக்குளம் மக்களின் காணிகள் கடற்படையினால் விடுவிப்பு! Top News
[Saturday 2017-04-29 17:00]

கடற்படையினர் வசமிருந்த முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கடற்படைத் தளபதி தலைமையில் முள்ளிக்குளம் கடற்படை முகாமில் இன்று இடம்பெற்ற காணி விடுவிப்பு குறித்த உயர்மட்ட கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



ஊடக போராளி மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ‘தராக்கி’ அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
[Saturday 2017-04-29 17:00]

மட்டக்களப்பு மண்ணில் பிறந்து ஊடகத்துறையில் சிறந்து விளங்கிய தராக்கி என்றழைக்கப்பட்ட தர்மரட்ணம் சிவராம் சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடக போராளி மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ‘தராக்கி’ அவர்களின் ஒன்பதாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ம் ஆண்டு ஏப்ரல் 28 ம் திகதி கடத்தி செல்லப்பட்டு மறுநாள் ஏப்ரல் 29 ம் திகதி சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொலை செய்யப்பட்டர்.



பேச்சு நடத்த அரசாங்கம் முன்வர வேண்டும்! - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை
[Saturday 2017-04-29 17:00]

எமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் மனந்திறந்து பேச விரும்புகிறோம். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எம்முடன் பேச்சு நடத்த முன்வர வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



காணிகள் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டி­யது அவ­சியம்! -ஐ.நா
[Saturday 2017-04-29 17:00]

பாதிக்­கப்­பட்ட மக்­களின் காணிகள் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டி­யது அவ­சியம். அவ்­வாறு காணி­களை மீள வழங்க முடி­யா­விடின் காணி உரி­மை­யா­ளர்­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­கப்­பட வேண்டும். இதுவே ஐக்­கிய நாடுகள் சபையின் நிலைப்­பா­டாகும் என்று ஐக்­கிய நாடுகள் சபையின் இலங்­கைக்­கான வதி­விடப் பிர­தி­நிதி உனா­ மெக்­குலே தெரி­வித்தார்.



அம்பாறையிலும், கிளிநொச்சியிலும் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள்!
[Saturday 2017-04-29 17:00]

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் அம்பாறை மாவட்டத்திலும் மே தினக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மே 01 ஆம் திகதி திங்கட்கிழமை தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மேதினம் பெரியளவில் கொண்டாடப்படுகின்றது.



காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஜனாதிபதிக்கு மகஜர்! Top News
[Saturday 2017-04-29 17:00]

வவுனியாவில் போராட்டத்தை மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக நேற்று ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமாரவிடம் இந்த மகஜர் கையளிக்கப்பட்டது. குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகளாவன-



மட்டக்களப்பில் இன்று மாமனிதர் சிவராம் நினைவு நிகழ்வு!
[Saturday 2017-04-29 17:00]

ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் 13 ஆவது நினைவு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஊரணியில் உள்ள அமெரிக்கன் மிஷன் தேவாலய மண்டபத்தில் இன்று மாலை 7.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.



சுவர் விழுந்து ஏழு வயதுச் சிறுமி பலி! Top News
[Saturday 2017-04-29 17:00]

ஏறாவூர் 4ஆம் குறிச்சியிலுள்ள வீட்டு சுவர் சரிந்து ஏழு வயதுச் சிறுமி மீது விழுந்ததில், அச்சிறுமி பலியாகியுள்ளாரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இன்று பகல் நடந்த இச்சம்பவத்தில், படமாளிகை வீதியைச் சேர்ந்த சண்முகராசா ஷாறுக்கா (வயது 7) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். சிறுமியும் அவரது சகோதரனும் விளையாடிக் கொண்டிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.



மே தினக் கூட்டத்துக்கு வராவிட்டால்..? - சுதந்திரக் கட்சி கடும் எச்சரிக்கை
[Saturday 2017-04-29 17:00]

கண்டி கெட்டம்பே மைதானத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் கட்சியில் இருந்து தாமாக விலகிக்கொண்டவர்களாகக் கருதப்படுவார்கள் என அந்த கட்சியின் உயர்மட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



மானிப்பாயில் வாள்வெட்டு- ஒருவர் படுகாயம்!
[Saturday 2017-04-29 17:00]

மானிப்பாயில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் படுகாயமடைந்த நபர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளளார். மானிப்பாய்- கூழாவடி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய குடும்பஸ்தரே வாள்வெட்டுக்கு இலக்கானவராவார். குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்! Top News
[Saturday 2017-04-29 17:00]

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றது. ஊறணியிலுள்ள அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இன்று காலை நடந்த கூட்டத்தில் கட்சியின் எதிர்கால செயற்றிட்டங்கள், சமகால அரசியல் மற்றும் சமூக பொருளாதார நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.


Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
<b>08-04-2017 அன்று  மார்க்கத்தில்  நடைபெற்ற IMHO DINNER NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>01-04-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற PRIMA DANCE NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-03-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற  பைரவி நுண்கலைக் கூட இசை அர்ப்பணம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா