Untitled Document
April 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
புலிகள் மீது கவனம் செலுத்தியதால் குப்பையை மறந்து விட்டாராம் மஹிந்த!
[Friday 2017-04-21 18:00]

போரில் அதிக கவனம் செலுத்தியமையினாலேயே மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரம் ஸ்ரீமகா விஹாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

போரில் அதிக கவனம் செலுத்தியமையினாலேயே மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரம் ஸ்ரீமகா விஹாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

  

“நாம் நாட்டினது பிரதானமான பிரச்சினையிலேயே அதிக கவனத்தினைச் செலுத்தியிருந்தோம். அதன்படி யுத்தத்தினையும் நிறைவுக்கு கொண்டு வந்திருந்தோம். எமது ஆட்சிக் காலத்தின் இறுதியில் மீதொட்டமுல்ல குப்பைமேடு தொடர்பாகவும் அதற்கான தீர்வுத் திட்டங்களும் வகுக்கப்பட்ட போதிலும், அதனை நடைமுறைப்படுத்த முடியாது போனது” என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.comமக்கள் அணியொன்றை உருவாக்குவது குறித்து தமிழ் மக்கள் பேரவை திருகோணமலையில் ஆலோசனை!
[Monday 2017-04-24 07:00]

தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து செயற்படுவதற்கு மக்கள் அணியொன்றை உருவாக்குவதென்றும் அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடியதாக வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த அனுமதிக்கும் சட்டத்தை கொண்டு வரப் போகிறதாம் அரசாங்கம்!
[Monday 2017-04-24 07:00]

போரை முடிவுக்கு கொண்டு வந்தவர்களை போர்க்குற்றவாளிகள் என்ற பெயரில் சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கும் உரிமையை வழங்கும் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவர அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. புலம்பெயர் அமைப்புகளினதும் சர்வதேச நாடுகளின் தேவைக்கு அமைய எம்மை தண்டிக்க முயற்சிக்கப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.நாளை மறுநாள் ஹர்த்தாலுக்கு அழைப்பு - தமிழ் மக்கள் பேரவை ஆதரவு!
[Monday 2017-04-24 07:00]

காணாமல் ஆக்கப்பட்​டோரின் உறவுகள் மற்றும் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிர்வரும் 27ம் திகதி வடக்கு கிழக்கில் அழைப்பு விடுத்துள்ள பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவை ஆதரவை தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் நில மீட்புக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிற்கு நீதி கோரும் வகையில், தமிழ் மக்கள் பேரவையினர், நேற்று திருகோணமலையில் கூடி கலந்துரையாடினர்.கோலூன்றிப் பாய்தலில் மற்றொரு தேசிய சாதனையை நிகழ்த்தினார் அனிதா ஜெகதீஸ்வரன்!
[Monday 2017-04-24 07:00]

23 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடத்தும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுனர் போட்டிகள் தியகமை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமானது.சம்பந்தனின் பாதையில் கண்ணை மூடிக் கொண்டு செல்வோம்! - சித்தார்த்தன்
[Monday 2017-04-24 07:00]

அரசியலில் எத்தகைய முரண்பாடுகள், மாற்றங்கள் ஏற்பட்டாலும் அரசியலமைப்பு முயற்சிகள் முடிவுறும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தலைவர் சம்பந்தனையும் விட்டு விலகமாட்டோம். அதுவரை அவர் செல்லும் பாதையில் கண்களை முடிக்கொண்டு செல்வோம் என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.இன்றைய கூட்டத்தில் முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமை அகற்ற அழுத்தம் கொடுப்போம்! - யோகேஸ்வரன் எம்.பி
[Monday 2017-04-24 07:00]

பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் இன்றையதினம் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமை அகற்றுவது தொடர்பில் அழுத்தம் கொடுக்கவுள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.சிவமந்திரத்தை உச்சரித்துக் கொண்டு சிவனொளிபாத மலையில் ஏறிய யாத்திரிகர்களுக்கு மிரட்டல்!
[Monday 2017-04-24 07:00]

சிவகொடியை ஏந்திக் கொண்டு “ஓம் நமச்சிவாய”, “ஓம் நமச்சிவாய” என்ற நாமத்தை உச்சரித்து கொண்டும் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யாத்திரிகள் சிலரை, இனந்தெரியாத சிலர் அச்சுறுத்தியுள்ளதாக, இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் சிவஸ்ரீ வேலு சுரேஷ்வர தெரிவித்தார்.தொடங்கியது வேலைநிறுத்தம் - நள்ளிரவு வரை வரிசையில் காத்திருந்த வாகனங்கள்! Top News
[Monday 2017-04-24 07:00]

பெற்றோலியக் கூட்டத்தாபன ஊழியர் தொழிற்சங்கங்கள் நள்ளிரவு தொடக்கம் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ள நிலையில், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள பெற்றோல் நிலையங்களில் நேற்று வாகனங்கள் அலைமோதின. பெற்றோலிய வர்த்தக சங்கம் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையிலேயே எண்ணெய் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் கூட்டம் அலைமோதின.இலங்கையில் புதிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு! Top News
[Monday 2017-04-24 07:00]

இலங்கையில் புதிய நீர்வீழ்ச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பலங்கொடை, கீழ் வலேபொட பிரதேத்தில் உள்ள காடு ஒன்றில் சுமார் 100 அடி உயரத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எவர் கண்ணிலும் இந்த நீர்வீழ்ச்சி இதுவரை தென்படவில்லை.தெரு நாய்களைக் கொல்லும் திட்டம் இல்லையாம்!
[Monday 2017-04-24 07:00]

வெசாக் கொண்டாட்டங்களுக்கு முன்னர், கட்டாக்காலி நாய்களைக் கொல்லும் திட்டம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் இருப்பதாக வெளியான தகவலை அமைச்சர் பைஸர் முஸ்தபா நிராகரித்தார்.கைநழுவும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை? - இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றில் தீர்மானம்!
[Sunday 2017-04-23 18:00]

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய பாராளுமன்றத்தின் 55 உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றே இந்த தீர்மானத்தை முன்வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்போம்! - காணாமல் போனோரின் உறவுகள் எச்சரிக்கை Top News
[Sunday 2017-04-23 18:00]

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உரிய தீர்வு வழங்கப்படாவிடில், மீண்டும் சாகும் வரையான உண்ணாவிரதத்தை மேற்கொள்ளவுள்ளதாக, அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா தபால் நிலையத்திற்கு முன்னால் 59வது நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தில் 1515.7 ஏக்கர் காணிகள் படையினர் வசம்!
[Sunday 2017-04-23 18:00]

கிளிநொச்சி மாவட்டத்தில் 1515.7 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரின் வசம் உள்ளதாக மாவட்டச் செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான கூட்டத்தின் போதே இத் தகவல்கள் வெளியிடப்பட்டன.வடக்கில் கடும் வரட்சி - நான்கரை இலட்சம் பேர் பாதிப்பு!
[Sunday 2017-04-23 18:00]

தற்போது நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக, வடக்கு மாகாணத்தில் மட்டும் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 603 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களின் விவரங்களை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ளது.மைத்திரியிடம் எழுத்துமூல உறுதிமொழி பெறவில்லை! - சுமந்திரன் சொல்வது பொய் என்கிறார் சுரேஷ்
[Sunday 2017-04-23 18:00]

தனியார் காணிகளை விடுவிப்போம் என்று மைத்திரிபால சிறிசேன எழுத்து மூலம் உத்தரவாதம் தந்துள்ளதாக சுமந்திரன் பொய் கூறுகின்றார். அவ்வாறு தந்திருந்தால் அந்த ஆவணத்தினை காட்டவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.வடமாகாண கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டத்துக்கு தூண்டும் இராணுவம்!
[Sunday 2017-04-23 18:00]

வடமாகாணக் கல்வி அமைச்சருக்கு எதிராக இராணுவத்தினரின் தூண்டுதலின் பேரில், சிவில் பாதுகாப்புப் படையினரால் (சி.எஸ்.டி) நாளை கிளிநொச்சி டிப்போச் சந்தியில் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜெனிவாவில் அளித்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்! - ஜேர்மனி
[Sunday 2017-04-23 18:00]

2015ம் ஆண்டு ஜெனிவாவில் அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென ஜெர்மனி வலியுறுத்தியுள்ளது . இலங்கைக்கான ஜெர்மன் தூதுவர் ஜோன் றோட் ( Jorn Rohde ) இதனைத் தெரிவித்துள்ளார். அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசியல் முனைப்பு மிகவும் இன்றியமையாதது என சுட்டிக்காட்டியுள்ள அவர் மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் - இன்று 62 ஆவது நாள்! Top News
[Sunday 2017-04-23 18:00]

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்கா முன்பாக மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரக போராட்டம் 62 ஆவது நாளாக இன்றும் இடம்பெறுகிறது. தமது தொழிலுரிமையினை உறுதிப்படுத்துமாறு கோரி, இவர்கள் இரவு பகலாக வீதியில் படுத்துறங்கி தொடர்ச்சியான போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் நாளை கூட்டம்!
[Sunday 2017-04-23 18:00]

முள்ளிக்குளம் உள்ளிட்ட வடமாகாணத்தில் படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள காணிகள் விடுவிப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சில் நாளை முக்கிய கூட்டம் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.சுதந்திரக் கட்சியின் 7 புதிய அமைப்பாளர்களுக்கு நியமனம் - யாழ். அமைப்பாளராக கஜந்தன்!
[Sunday 2017-04-23 18:00]

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு மாவட்ட அமைப்பாளர்களுக்கு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமனக் கடிதங்களை வழங்கினார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன. கொழும்பு மாவட்டத்திற்கான ஆசன அமைப்பாளராக சுமுது விஜேரத்னவும், குருநாகல் மாவட்டத்திற்காக ஆர்.எம்.சனத் பத்மசிறி மற்றும் ஏ.ஏ.ஏ.லதீப் ஆகியோரும், திருகோணமலை மாவட்டத்திற்காக கே.பி.பிரியந்த பிரேமகுமாரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
<b>08-04-2017 அன்று  மார்க்கத்தில்  நடைபெற்ற IMHO DINNER NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>01-04-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற PRIMA DANCE NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-03-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற  பைரவி நுண்கலைக் கூட இசை அர்ப்பணம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா