Untitled Document
August 18, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
இத்தாலி பிரதமர் பாலோ ஜென்டிலோனியை சந்தித்த டொனால்ட் ட்ரம்ப்!
[Friday 2017-04-21 08:00]

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இத்தாலி நாட்டுப் பிரதமர் பாலோ ஜென்டிலோனியை (Paolo Gentiloni) வெள்ளை மாளிகையில் சந்தித்தார். பின்னர், இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அப்போது ட்ரம்ப், 'ஆப்கான் போருக்கும், ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போருக்கும் இத்தாலியின் ராணுவப் பங்கு மிகப்பெரியது. அமெரிக்கா மற்றும் இத்தாலி இணைந்து, பெரிய அளவிலான மக்கள் இடப்பெயர்வு மற்றும் சர்வதேசக் கடத்தல் ஆகிய பிரச்னைகளுக்கு வழி காணலாம்' என்று கூறினார்.

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இத்தாலி நாட்டுப் பிரதமர் பாலோ ஜென்டிலோனியை (Paolo Gentiloni) வெள்ளை மாளிகையில் சந்தித்தார். பின்னர், இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அப்போது ட்ரம்ப், 'ஆப்கான் போருக்கும், ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போருக்கும் இத்தாலியின் ராணுவப் பங்கு மிகப்பெரியது. அமெரிக்கா மற்றும் இத்தாலி இணைந்து, பெரிய அளவிலான மக்கள் இடப்பெயர்வு மற்றும் சர்வதேசக் கடத்தல் ஆகிய பிரச்னைகளுக்கு வழி காணலாம்' என்று கூறினார்.

  

இந்த செய்தியாளர்கள் சந்திப்பு நடந்துகொண்டிருக்கும்போதுதான், ஃப்ரான்ஸில் போலீஸார் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவம் பற்றிய செய்தியும் வெளிவரத் தொடங்கின. இது குறித்து ட்ரம்ப், 'அமெரிக்க தரப்பில் ஃப்ரான்ஸில் நடந்த தாக்குதலுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது இன்னொரு தீவிரவாத தாக்குதல் போலத்தான் தெரிகிறது' என்று கூறினார். ஆனால், இதுவரை ஃப்ரான்ஸ் அரசு இந்தத் தாக்குதல் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.comடொனால்ட் ட்ரம்ப்பின் ட்வீட்டால் 500 கோடி அமெரிக்க டாலரை இழந்த அமேசான் நிறுவனம்!
[Thursday 2017-08-17 17:00]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ட்வீட்டால் அமேசான் நிறுவனம் 500 கோடி அமெரிக்க டாலரை இழந்துள்ளது. உலக அளவில் இணையதள வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள அமேசான் நிறுவனம் மற்றும் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை ஆகிய இரு நிறுவனங்களுக்கு எதிராக அவ்வப்போது கருத்துகளை ட்ரம்ப் தெரிவிப்பதுண்டு. அமேசான் நிறுவனத்துக்கு எதிரான போக்கை அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போதே ட்ரம்ப் எடுத்துவிட்டார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய ஹேக்கர்களின் தலையீடு: - வெளியான புதிய ஆதாரம்!
[Thursday 2017-08-17 17:00]

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய ஹேக்கர்களின் தலையீடு இருந்ததற்கான புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரியில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் எதிர்பாராதவகையில் தோல்வியைத் தழுவினார். சர்ச்சைகளின் நாயகன் ட்ரம்ப்பை வீழ்த்தி, பெரும்பான்மை பலத்துடன் ஹிலாரி ஆட்சியமைப்பார் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறின.சகோதரியை கொன்று உடல் உறுப்புகளை குப்பை தொட்டியில் வீசிய அண்ணன்!
[Thursday 2017-08-17 17:00]

இத்தாலி தலைநகர் ரோமில் தெருவோர குப்பை தொட்டியில் இருந்து உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த வழக்கு தொடர்பாக 62 வயதான Maurizio Diotallevi என்பவர் ரோம் நகர பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சுவிஸில் சிகரெட் கொடுக்க மறுத்த வாலிபரை தாக்கிய நபர்: - கோமா நிலை யில் வாலிபர்
[Thursday 2017-08-17 17:00]

சுவிட்சர்லாந்து நாட்டில் சிகரெட் கொடுக்க மறுத்த வாலிபரை பலமாக தாக்கியதை தொடர்ந்து அவர் தற்போது கோமா நிலையை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுவிஸில் உள்ள சூரிச் நகரை சேர்ந்த 21 வயதான வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார்.ஹஜ் பயணிகளுக்காக எல்லைக் கதவுகளைத் திறந்து விடவுள்ள சவுதி அரேபியா!
[Thursday 2017-08-17 08:00]

தொடரும் பகைமையை மறந்து, கத்தாரின் ஹஜ் பயணிகளுக்காக அதன் எல்லைக் கதவுகளைத் திறந்துவிட உள்ளது சவுதி அரேபியா.தீவிரவாதத்துக்குத் துணைபுரிவதாகக் குற்றம் சாட்டப்பட்டு, வளைகுடா நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டது கத்தார். சவுதி, பக்ரைன், ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கத்தாருடனான தங்கள் தூதரக உறவுகள் அனைத்தையும் முறித்தன.வட கொரியாவுடனான உறவைத் துண்டிக்க வேண்டும்: - லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அமெரிக்கா வேண்டுகோள்
[Thursday 2017-08-17 08:00]

அமெரிக்கா - வட கொரியா இடையிலான பிரச்னை தொடர் இழுபறியான நிலையில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அரசு, 'லத்தீன் அமெரிக்க நாடுகள், வட கொரியாவுடனான உறவைத் துண்டிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளது.நாங்கள் அமைதியை காப்பதில் உறுதியோடு இருக்கிறோம்: - சீனா தகவல்
[Thursday 2017-08-17 08:00]

இந்திய - சீன எல்லையில் கடந்த சில வாரங்களாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், 'எல்லையில் நாங்கள் அமைதியை காப்பதில் உறுதியோடு இருக்கிறோம்' என்று சீன அரசு தரப்பு தெரிவித்துள்ளது.பெல்ஜியம் ஆண்டு விழாவில் 10000 முட்டைகளால் உருவான ராட்சத ஆம்லெட்: - மக்கள் கொண்டாட்டம்
[Wednesday 2017-08-16 18:00]

பெல்ஜியம் நாட்டில் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் ஆண்டு விழா கொண்டாடப்படும். இந்த விழாவில் மக்கள் வித்தியாசமாக ஏதாவது செய்து கொண்டாடுவர். இந்த ஆண்டு பெல்ஜியத்தில் உள்ள மால்மேடி கிராமத்தில் உள்ள மக்கள் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் ராட்சத அளவில் ஆம்லெட் செய்து அதனை அனைவருக்கும் பகிர்ந்து வழங்க முடிவு செய்தனர்.வடகொரியாவின் தாக்குதல் மிரட்டலையடுத்து சுற்றுலா பயணிகள் குறைந்து வெறிச்சோடிய குவாம் தீவு!
[Wednesday 2017-08-16 18:00]

வடகொரியாவின் தாக்குதல் மிரட்டலையடுத்து குவாம் தீவில் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்துவிட்டது. அமெரிக்காவின் முக்கிய சுற்றுலா தீவான குவாமில் உள்ள மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்காவின் அடுத்த கட்ட செயல்பாட்டை பொறுத்து தற்காலிகமாக, குவாம் மீதான தாக்குதல் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக வடகொரிய அதிபர் அறிவித்துள்ளார். இந்த அறிவப்பு குவாம் தீவில் வசிக்கும் மக்களுக்கு தற்காலிக நிம்மதியை கொடுத்துள்ளது.கத்தோலிக்க தேவாலய பாவ மன்னிப்பு வழங்கும் கூண்டில் ஆபாசப்படம்? - அதிர்ச்சியில் நிர்வாகம்
[Wednesday 2017-08-16 18:00]

நெதர்லாந்தில் தேவாலயம் ஒன்றில் பாவ மன்னிப்பு வழங்கும் கூண்டில் ஆபாசப்படம் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நெதர்லாந்தின் தில்பர்க் நகரில் அமைந்துள்ள புனித ஜோசப் கத்தோலிக்க தேவாலயத்திலேயே ஆபாச படம் எடுக்கப்பட்டதாக தேவாலயத்தின் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.குறித்த வீடியோ இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆபாசப்பட நடிகையான கிம் ஹாலண்டின் இணையதளத்தில் வெளியானது.நைஜீரியாவில் போகோ ஹரம் பெண் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல்!
[Wednesday 2017-08-16 08:00]

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், ‘போகோ ஹரம்’ பயங்கரவாத அமைப்பு, தனது அடுத்தடுத்த தாக்குதல்களை நடத்திவருகிறது. போகோ ஹரம் அமைப்பைச் சேர்ந்த பெண் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 83 பேர் வரை படுகாயமடைந்து உயிருக்குப் போராடிவருகின்றனர். பள்ளிச் சிறுமிகள் கடத்தல், கிராமங்களைப் பிடித்துவைத்து மிரட்டுவது, தனது எதிர்ப்பாளர்களைக் கொடூரமாகக் கொல்வது என நைஜீரியாவையும் தாண்டி உலகையே அச்சுறுத்திவருகிறது ‘போகோ ஹரம்’ பயங்கரவாத அமைப்பு.கடும் வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகிய சியரா லியோன்: - சர்வதேச உதவியை நாடிய அதிபர்
[Wednesday 2017-08-16 07:00]

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோன், கடும் வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது. தொடர்ச்சியாக அங்கு பெய்துவரும் கன மழையால், அந்த நாட்டின் பல்வேறு இடங்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. அதன் தலைநகரில் ஏற்பட்ட நிலச்சரிவில், சுமார் 2000-க்கும் அதிகமான வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 300 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 600-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.மான்செஸ்டரில் நடந்த குண்டு வெடிப்பில் மக்களை காப்பாற்றிய பிச்சைக்காரர்: - பொலிசாரால் கைது
[Wednesday 2017-08-16 07:00]

பிரித்தானியா மான்செஸ்டரில் நடந்த குண்டு வெடிப்பின் போது உதவிய பிச்சைக்காரர் கிறிஸ் பர்கர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரித்தானியாவின் மான்செஸ்டரில் கடந்த மே மாதம் 22-ஆம் திகதி அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்ட்டின் இசை நிகழ்ச்சியின் போது பயங்கர சத்ததுடன் குண்டு வெடித்தது.சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்களால் தீ மற்றும் மூச்சு திணறல் அபாயம்: - எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா
[Tuesday 2017-08-15 18:00]

அமெரிக்க அரசாங்கத்தை சேர்ந்த குழு ஒன்று, தீப்பிடிக்கும் சம்பவங்களை தொடர்ந்து விளையாட்டுப் பொருளானபேட்டரியால் இயங்கும் ஃபிட்ஜெட் ஸ்பின்னர்களுக்கென பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.சி பி எஸ் சி எனப்படும் அமெரிக்காவின் நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம், இரவு முழுவதும் விளையாட்டு பொருட்களை சார்ஜ் ஏற்றுவதை தவிர்க்குமாறு கூறுகிறது.பொருளாதார தடைகளை தொடர்ந்து விதித்தால் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவோம்: - ஈரான் அதிபர்
[Tuesday 2017-08-15 18:00]

தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா மேலும் பொருளாதார தடைகளை தொடர்ந்து விதித்தால் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய அதிபர் ஹசன் ரவுஹானி, அணு ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா விரும்பினால், அது ஒரு சில மணி நேரங்களிலேயே நிறைவேற்றி விட முடியும் என்றார்.போர்த்துக்கல்லில் பரவிய காட்டுத் தீ காரணமாக 64 பேர் உயிரிழப்பு!
[Tuesday 2017-08-15 18:00]

போர்த்துக்கல்லில் பரவிய காட்டுத் தீ காரணமாக 64 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், அங்கு 100 ஹெக்டேயர் நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இந்நிலையில், அப்பகுதியை அண்டி வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.டூப் போடாமல் சண்டைக்காட்சியில் ஈடுபட்ட நடிகை பலி: - சினிமா படப்பிடிப்பில் பயங்கரம்
[Tuesday 2017-08-15 17:00]

கனடா நாட்டில் சினிமா படப்பிடிப்பு ஒன்றில் டூப் போடாமல் சண்டைக்காட்சியில் ஈடுபட்ட நடிகை ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் நகரில் Deadpool 2 என்ற ஹாலிவுட் படத்தில் படப்பிடிப்பு கடந்த யூன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.டயானாவை முன் மாதிரியாக எடுத்து கொண்ட ஹரியின் காதலி!
[Tuesday 2017-08-15 17:00]

டயானாவை முன் மாதிரியாக எடுத்து கொண்டதோடு அவரின் திருமண வீடியோவை இளவரசர் ஹரியின் காதலி மேகன் அடிக்கடி பார்ப்பார் என தெரியவந்துள்ளது.பிரித்தானியா இளவரசர் ஹரியும், மேகனும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வருகிறார்கள்.மறுசீரமைப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்படவுள்ள லண்டனின் பிக் பென் கடிகாரம்!
[Tuesday 2017-08-15 17:00]

உலக புகழ்பெற்ற லண்டனின் பிக் பென் கடிகாரம், மறுசீரமைப்பு பணிகளுக்காக நிறுத்திவைக்கப்பட உள்ளதாக பிரித்தானியா நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.157 ஆண்டுகளாக தேம்ஸ் நதிக்கரையோரம், வெஸ்ட்மின்ஸ்டெர் அரண்மனையில் அமைந்திருக்கும் பிக் பென் கடிகாரம், தற்போது மிகவும் மோசமான நிலையை எட்டியிருப்பதால், அதற்கான பராமரிப்புப் பணிகளை விரைந்து செய்யவேண்டுமென நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.அமெரிக்காவின் செயல்பாடுகளை பொறுத்து அடுத்தக் கட்ட நடவடிக்கை: - வட கொரியா தலைவர்
[Tuesday 2017-08-15 09:00]

அமெரிக்காவின் செயல்பாடுகளை பொறுத்து அடுத்தக் கட்ட நடவடிக்கையை எடுக்க போவதாக வட கொரியா தலைவர் கிம் ஜாங் கூறியுள்ளார்.வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வருகிறது.


Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா