Untitled Document
June 28, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
வயாவிளான் மத்திய கல்லூரிக்கான தொழில்நுட்ப பீடம் திறப்பும் மூன்று மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும்! Top News
[Friday 2017-03-31 18:00]

பலாலி வயாவிளான் மத்திய கல்லூரிக்கான தொழில்நுட்ப பீடம் திறப்பும் மூன்று மாடி கட்டடத்திற்கான அடிகள் நாட்டும் வைபவத்திற்கு பிரதம அதிதியாக  கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்  அவர்கள் கலந்து  கொண்டார். இவருடன் யாழ் மாவட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை  எஸ்.சேனாதிராஜா¸ ஈ.சரவணபவன்  அவர்களும் கலந்து கொண்டனர்.

பலாலி வயாவிளான் மத்திய கல்லூரிக்கான தொழில்நுட்ப பீடம் திறப்பும் மூன்று மாடி கட்டடத்திற்கான அடிகள் நாட்டும் வைபவத்திற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் கலந்து கொண்டார். இவருடன் யாழ் மாவட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை எஸ்.சேனாதிராஜா¸ ஈ.சரவணபவன் அவர்களும் கலந்து கொண்டனர்.

  

  
   Bookmark and Share Seithy.com



மொன்றியால் கனடா தினக் கொண்டாட்டத்தில் தமிழ் அகதிப்படகு: Top News
[Tuesday 2017-06-27 20:00]

மொன்றியால் நகரில் கடந்த ஜூன் 24, 25 சனி, ஞாயிறு நடந்த கனடா தினக்கொண்டாட்டத்தில், சிறப்பு காட்சிப்பொருளாக 86ம் ஆண்டுத் தமிழ் அகதிப் படகு காட்சிக்கு வைக்கப்பட்டு வந்திருந்த அனைவரையும் பரவசப்படுத்தியது. கனடியத் தமிழர் பேரவையின் நாடு தழுவிய கனடாதினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமைந்த இந்த படகுக் கண்காட்சி மொன்றியால் திருமுருகன் ஆலய முன்றலில் நடைபெற்றது. மொன்றியால் திருமுருகன் ஆலயம் இந் நிகழ்வை அங்கு மிகச் சிறந்த முறையில் ஒழுங்கமைத்திருந்ததது. நிகழ்வில் Dollard-Des Ormeaux மேயரான Ed Janiszewski கலந்து கொண்டு சிறப்பித்தார்.



மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி 2017 யேர்மனி, டுசில்டோர்ப். Top News
[Tuesday 2017-06-27 18:00]

யேர்மனியில் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் 24.6.2017 சனிக்கிழமை டுசில்டோர்ப் நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் யேர்மனி முழுவதிலும் உள்ள தமிழாலயங்களின் மாணவ மாணவிகளும், மற்றும் விளையாட்டுக் கழகங்களும் பங்குகொண்டு சிறப்பித்தனர்.



உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் 5 வது உலகக்கிண்ணப் போட்டி: ரொறன்ரோ – 2017 Top News Top News
[Thursday 2017-06-22 06:00]

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் 5வது உலகக்கிண்ணப் போட்டிகளை கனடா ரொறன்ரோவில் எபிக் பாட்மின்டன் விளையாட்டு அரங்கத்தில் (நுpiஉ டீயனஅiவெழn ளுpழசவள ளுவயனரைஅ) நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. உலகத் தமிழர் பூப்பந்தாட்டப்பேரவையின் கனடாக் கிளை கடந்த வருடம் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் நிர்வாகக் குழுவானது இந்த உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான ஆரம்ப வேலைகளை நுணுக்கமாக செய்து வருகின்றது.



மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி 2017 யேர்மனி வில்லிஸ்ச்: Top News
[Wednesday 2017-06-21 21:00]

யேர்மனியில் அமைந்துள்ள தமிழாலயங்களை இணைத்து தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு நடாத்தும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் 17.6.2017 சனிக்கிழமை அன்று யேர்மனியின் வில்லிச் நகரத்தில் ஆரம்பமாகி உள்ளது. இப்போட்டியில் யேர்மனியின் மத்திய மாநிலத்தில் உள்ள பல தமிழாலயங்களின் மாணவ மாணவிகள் மிக ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள். இந் நிகழ்வு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு பின்பு யேர்மனியக் கொடி மற்றும் தமிழீழத் தேசியக்கொடி அத்தோடு தமிழ்க்கல்விக்கழகத்தின் கொடியும் ஏற்றப்பட்டு ஆரம்பமானது.



நெதர்லாந்தில் நடைபெற்ற தமிழர் விளையாட்டுத் திருவிழா: Top News
[Monday 2017-06-19 23:00]

நெதர்லாந்தில் தமிழர் விளையாட்டுத் திருவிழா 17.06.2017 சனிக்கிழமை உத்திரக்ற் நியூவகெய்ன் என்னும் நகரில் வெகு சிறப்பாக நடை பெற்றது. காலை 09.00மணியளவில் ஆரம்பமாகிய இந் நிகழ்வு முதலில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு பின்னர் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நெதர்லாந்து தேசியக் கொடியும் அடுத்து தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றப்பட்டது. பின் தியாகி சிவகுமாரன் அவர்களுக்கு நெதர்லாந்து இளையோர் அமைப்பு பொறுப்பாளரால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. ஆதனைத் தொடர்ந்து மலர்வணக்கமும் அகவணக்கம் செலுத்தப்பட்டு விளையாட்டு ஆரம்பமாகியது.



இளையநிலா இளைஞர் கழகத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டு விழா. Top News
[Monday 2017-06-19 20:00]

வவுனியா இளையநிலா இளைஞர் கழகமும் நியூ பைட் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்தும் 2017 ஆம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டு விழா கழகத்தின் தலைவர் ஜோன்சன் தலைமையில் நெளுக்குளம் ஊர்மிளா கோட்ட குடியேற்ற நியூ பைட் மைதானத்தில் 18.06.2017 நேற்றைய தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பாரம்பரிய விளையாட்டுகளுடன், மரதன், கிரிக்கெட், உதைபந்து, மற்றும் பல போட்டிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.



முள்ளிவாய்க்காலில் வாழ்வாதார உதவி வழங்கல்: - தமிழ் பெண்கள் அமைப்பு - யேர்மனி Top News
[Saturday 2017-06-17 11:00]

தமிழ் பெண்கள் அமைப்பினரின் ஒழுங்கமைப்பில் பேர்லின் வாழ் தமிழ் மக்களின் பேராதரவில் நடைபெற்ற கலைமாருதம் 2017 நிகழ்வில் பெறப்பட்ட நிதியில் முதற்கட்டமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த வறிய நிலையில் உள்ள 30 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 3 லட்சம் ரூபாய்க்கும் மேலான பெறுமதியான வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.



“ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம்: Top News
[Saturday 2017-06-17 07:00]

சமூகமொன்றின் இயக்கத்துக்கும் நீடித்து நிலைபெறலுக்கும், வரலாறு என்பது அத்தியாவசியமான ஒன்றாக விளங்குகிறது. ஆனால் வரலாற்றைக் கட்டியெழுப்புவதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக, ஒரு ஆய்வாளன் ஆராய்கின்ற வழக்கிழந்த நடைமுறை ஒன்று, புவியியலால் தனித்த வேறொரு பகுதியில் இன்றும் மருவிய நிலையில் வழக்கில் இருக்கலாம். ஆனால், விரிவான தளத்தில் ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ளும் போது அந்த மிகச்சிறு அம்சம் கவனிக்கப்படாமல் போக வாய்ப்புகள் உண்டு.



கண்டி கெங்கல்லை தமிழ் வித்தியாலயத்தின் எட்டு வகுப்பறைகளை கொண்ட புதிய இரண்டுமாடிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
[Friday 2017-06-16 21:00]

இந்த கட்டிடத்திற்கான முழுமையான நிதியினை கண்டி தமிழ் வர்த்தகர் சங்கம் வழங்கியிருந்தது.கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்ம த்திய மாகாண சபை முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மத்திய மாகாண விவசாய மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன்கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார்ம த்திய மாகாண சபைத் தலைவர் மதியுகராஜா மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் கண்டி தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் நாதன் உட்பட உறுப்பினர்களும் கல்வி திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக நல்லூரில் பேரணி! Top News
[Friday 2017-06-16 19:00]

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக, தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று நல்லூர் ஆலய முன்றலில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முதலமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தினை கைவிடுமாறு வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.



வவுனியாவில் சமுர்த்தி வீட்டுத்திட்டம் விசாரணைகள் முற்றாக இடம்பெறவில்லை:-அரசாங்க அதிபருக்கு முறைப்பாடு Top News
[Wednesday 2017-06-14 19:00]

வவுனியாவில் சமுர்த்தி வீட்டுத்திட்டம் விசாரணைகள் முற்றாக இடம்பெறவில்லை: அரசாங்க அதிபருக்கு முறைப்பாடு வவுனியாவில் சமுர்த்தி வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்ற விசாரணைகள் முற்றாக இடம்பெறவில்லை எனவும் இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தும் புளியங்குளம் தெற்கு கிராமசேவையாளர் பிரிவு மக்கள் இன்று வவுனியா மாவட்ட செயலக அரசாங்க அதிபரை சந்திக்க சென்றுள்ளனர்.



“டயஸ்போரா” மேல் அச்சம் கொள்ளாதீர்கள் அவர்களின் உதவியுடன் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களை கட்டியெழுப்புங்கள்: - அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் Top News
[Wednesday 2017-06-14 19:00]

யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெயியேறிய புலம்பெயர்ந்த (டயஸ்போரா) தமிழர்களின் உதவிகளை பெற்று இந்த நாட்டை மாத்திரம் அல்ல வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். இந்த நாட்டில் டயஸ்போரா என்றால் மக்கள் மத்தியில் ஒரு பீதி இருக்கின்றது. அந்த நிலமை மாறி இவர்களை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சரும்¸ மலையக மக்கள் முன்னனியின் தலைவருமம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை தலைவருமான கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்.



இலங்கையில் 8 திருவள்ளுவர் சிலைகளின் திறப்பு விழாக்கள்: Top News
[Tuesday 2017-06-13 09:00]

வைகாசி 29, 2048 (12.06.2017) திங்கள் காலை. சென்னை,மயிலாப்பூர், இராதாகிருட்டிணன் சாலை, கிளாரியன் பிரெசிடென்ரு விடுதி. ஊடகத்தார் சந்திப்பு.

என் வேண்டுகோளை ஏற்று, இலங்கைக்கு ஒவ்வொன்றும் 8 அடி உயரமான 16 திருவள்ளுவர் சிலைகளைச் சென்னையில் வடித்து, அன்போடு நன்கொடுத்தவர் செவாலியர் டாக்டர் வி. ஜி. சந்தோசம் அண்ணாச்சி.



கனடா வன்னி தமிழ்சமூக கலாச்சார அமையத்தினால் உயிரிழை அமைப்பிற்கு கட்டில்கள் மெத்தைகள் அன்பளிப்பு: Top News
[Monday 2017-06-12 07:00]

உயிரிழை அமைப்பின் வேண்டுகோளுக்கமைய உயிரிழை உறுப்ப்பினர்களின் நலன் கருதி 05 கட்டில்கள் மெத்தைகள் மற்றும் தலகணை பெட்சீற்றுகள் என்பன அன்பளிப்பாக 30.05.2017 இன்று அலுவலகத்தில் திரு இந்திரன் அவர்களுடன் பராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீறீஸ்கந்தராசாஅவர்களும் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.



நளினி முன்பள்ளி சிறார்களுக்கு ஒருதொகுதி பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார் பாராளுமன்ற உறுப்பினர். Top News
[Saturday 2017-06-10 18:00]

நளினி முன்பள்ளி நிர்வாகத்தினரின் அழைப்பை ஏற்று இன்று நடைபெற்ற வருடார்ந்த விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் இளைஞனர் அணியினரின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்ததுடன் வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார் இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எதிர்கால தூண்களாக திகழப்போகும் இந்த சிறார்களை வாழ்த்துவதுடன் என்னாலான கல்விக்கான உதவிகளையும் எதிர்காலத்தில் செய்வதகாவும் உறுதியளித்தார்.



கல்விக்கு கரங்கொடுக்கும் உன்னத பணியில் திரு சத்யா - கனடா Top News
[Tuesday 2017-06-06 19:00]

கல்விக்கு கரங்கொடுக்கும் உன்னத பணியில் திரு சத்யா அண்ணா கனடா .. ஔிரும் வாழ்வின் கோரிக்கைக்கு அமைய ஔிரும் வாழ்வின்அங்கத்தவர்களின் பிள்ளைகள் எட்டுப்பேருக்கு பாடசாலைக் கல்வியைதொடர்வதற்கு வசதியாக துவிச்சக்கர வண்டிகளை வங்கிவைத்துள்ளார்.



பிரான்சில் தமிழர் விளையாட்டுக்கழகம் 95 நடாத்திய இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்! Top News
[Monday 2017-06-05 22:00]

தமிழர் விளையாட்டுக்கழகம் 95 வருடாந்தம் நடாத்தும் இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த (04.06.2017) ஞாயிற்றுக்கிழமை Garges Les Gonesse பகுதியில் காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை சார்சல் தமிழ்ச்சங்க தலைவர் திரு.டக்ளஸ் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை உதவிப்பொறுப்பாளர் திரு.செல்வா அவர்கள் ஏற்றிவைத்தார். மாவீரர் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 27.07.1987 அன்று இந்திய இராணுவத்துடனான மோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை தனேந்திரனின் சகோதரி அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செய்தார்.



அனைத்துலக தமிழ்மொழி எழுத்துத்தேர்வு டென்மார்க்: Top News
[Sunday 2017-06-04 18:00]

தமிழர் தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பல்வேறுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகின்றனர். தமிழின ஒற்றுமையை வலியுறுத்தும் அனைத்துச் செயற்பாடுகளும் எமது அடுத்த தலைமுறையினரை வழிநடத்தும் நோக்கையே கொண்டுள்ளன. தமிழ்ச்சிறார்கள் தங்கள் அடையாளத்தை இனங்காண்பதோடு மட்டுமல்லாமல், காலாகாலத்திற்கும் அது பேணப்பட வேண்டுமென்ற பொறுப்பையும் உணர வேண்டும். அதற்கு அவர்கள் தாய்நாடு, தாய்மொழிப் பற்றுள்ளவர்களாகவும் குமுகாயப் பொறுப்புள்ளவர்களாகவும் வாழ வழிசெய்ய வேண்டும்.



பிரான்சில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்மொழி பொதுத்தேர்வு 2017 Top News
[Saturday 2017-06-03 19:00]

தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தினால் பிரான்சில் நடாத்தப்படும் தமிழ்மொழி பொதுத்தேர்வு 2017 பிரான்சின் அரச தேர்வு மண்டபத்தில் (ஆயளைழn னநள நஒயஅநளெ 7 சுரந நுசநௌவ சுநயெn, 94110 யுசஉரநடை ) நேற்று 03.06.2017 சனிக்கிழமை பகல் 13.30 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுமுடிந்தது. ஏற்பாட்டாளர்கள் முன்னிலையில் அகவணக்கத்தைத் தொடர்ந்து, தேர்வு நடத்துநர்கள் மற்றும் மாணவர்களால் கையொப்பமிடப்பட்டு தேர்வு வினாத்தாள்கள் திறக்கப்பட்டன.



யா.உயரப்புலம் மெதடிஸ் மிசன் வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற அமர்வு: Top News
[Thursday 2017-06-01 09:00]

யாழ். உயரப்புலம் மெதடிஸ் மிசன் வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற அமர்வு இன்று வியாழக்கிழமை (01.06.2017) காலை 9.30மணியளவில் பாடசாலையின் அதிபர் கா.ரவீந்திரராஜா அவர்களின் தலைமையில் பாடசாலை கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. அ.அகிலதாஸ்(பிரதிக் கல்விப்பணிப்பாளர், யாழ் வலயம்) அவர்களும், கௌரவ விருந்தினராக திருமதி ம.திரேசா(பொறுப்பதிகாரி மாணவர் பாராளுமன்றம் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா