Untitled Document
March 28, 2024 [GMT]
விஜயன் இலங்கைக்கு விசா வாங்கிக்கொண்டு ஸ்ரீலங்கன் விமானத்திலா வந்தார்? - -பாராளுமன்றத்தில் அமைச்சர் மனோ கணேசன்
[Friday 2016-12-02 18:00]

விஜய இளவரசன், தனது நண்பர்களுடன் இலங்கை தீவின் மேற்கு கரையில் வந்து குடியேறியதாக மகாவம்சம் கூறுகிறது. அவர்கள் வெளியில் இருந்து இந்த நாட்டுக்கு படகில் வந்து குடியேறியவர்கள். அவர்கள் என்ன விசா வாங்கிக்கொண்டா வந்தார்கள்? படகில் வராமல், அவர்கள் என்ன, ஸ்ரீலங்கன் விமானத்திலா வந்தார்கள்? அவர்கள் வெளியில் இருந்து வந்தார்கள் என்று மஹாவம்சம் சொல்லுகிறது. விஜயனின், குவேணியுடனான திருமணம் பற்றியும், பின்னர் பாண்டிய நாட்டு இளவரசியுடனான திருமணம் பற்றியும் மகாவம்சம் கூறுகிறது.

விஜய இளவரசன், தனது நண்பர்களுடன் இலங்கை தீவின் மேற்கு கரையில் வந்து குடியேறியதாக மகாவம்சம் கூறுகிறது. அவர்கள் வெளியில் இருந்து இந்த நாட்டுக்கு படகில் வந்து குடியேறியவர்கள். அவர்கள் என்ன விசா வாங்கிக்கொண்டா வந்தார்கள்? படகில் வராமல், அவர்கள் என்ன, ஸ்ரீலங்கன் விமானத்திலா வந்தார்கள்? அவர்கள் வெளியில் இருந்து வந்தார்கள் என்று மஹாவம்சம் சொல்லுகிறது. விஜயனின், குவேணியுடனான திருமணம் பற்றியும், பின்னர் பாண்டிய நாட்டு இளவரசியுடனான திருமணம் பற்றியும் மகாவம்சம் கூறுகிறது.

  

விஜயனின் வருகையை நினைவுகூர்ந்து இலங்கை அரசாங்க தபால் திணைக்களம் ஒரு முத்திரையை வெளியிட்டது. அந்த முத்திரையின் பெறுமதி மூன்று சதம். அந்த முத்திரை, பத்து வருடங்களுக்கு பிறகு திடீரென அது வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது. ஒருபுறம் மகாவம்சத்தை புகழ்கிறீர்கள். மறுபுறத்தில் அதையே மறுக்கிறீர்கள்.

நாங்கள் மட்டுமே இங்கே ஆதிமுதல் இருந்தோம். நீங்கள் எல்லோரும் வெளியில் இருந்து வந்தீர்கள் என தமிழ், முஸ்லிம் இன மக்களை பார்த்து எடுத்ததுக்கெல்லாம், சிங்கள மக்களை சார்ந்த ஒரு சிறு பிரிவினர் கூறுகிறார்கள். குறிப்பாக பொதுபல சேனா பொது செயலர் ஞானசார தேரர் தமிழர்களை இந்தியாவுக்கு போக சொல்கிறார். மட்டக்களப்பில் ஒரு தேரரும், இங்கே கொழும்பு மாவட்ட இரத்மலானையில் ஒரு தேரரும் தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசி, தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். இது அடிப்படைவாத சிந்தனையாகும். தமிழரை இந்தியாவுக்கும், முஸ்லிம்களை அராபியாவுக்கும் போக சொல்லுகிறார்கள். இது இந்நாட்டிலே தேசிய சகவாழ்வுக்கு தடையாக இருக்கும் பிரதானமான ஒருபக்க காரணமாக அமைந்துள்ளது. நாங்கள் ஓட மாட்டோம். போக மாட்டோம். இது எங்கள் நாடு.

அடுத்த பக்க பிரதான காரணங்களும் உள்ளன. பல இனங்கள் வாழும் இந்நாட்டில் இன்று முடிவுக்கு வந்துவிட்ட தமிழீழ வாதத்தையும், ஆயுத போராட்டத்தையும், இன்னமும் வலியுறுத்தியபடியே வாழ முனையும் ஒரு சிறு பிரிவு தமிழர்களிடையே நிலவும் அடிப்படைவாதமும், மத்திய கிழக்கு அரபு நாடுகளில் நிலவும் பழமைவாத சட்ட திட்டங்களுடன், பல இனங்கள் வாழும் இந்நாட்டிலும் வாழ முனையும் ஒரு சிறு பிரிவு முஸ்லிம்களிடையே இருக்கும் அடிப்படைவாதமும் தேசிய சகவாழ்வுக்கு தடையாக இருக்கின்ற அடுத்த பக்க பிரதான காரணங்கள். இந்த நாட்டிலே இனங்கள் மத்தியில் சகவாழ்வு நிலை பெற வேண்டுமானால், இந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் அடிப்படைவாத சிந்தனைகள் மாறவேண்டும் என்பதை தேசிய சகவாழ்வு அமைச்சர் என்ற முறையில் இந்த சபையிலே, நான் மிகவும் பொறுப்புடன் கூறி வைக்க விரும்புகிறேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் வரவு செலவு திட்ட ஒதுக்கீடு குழுநிலை விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் கூறினார்.

அமைச்சர் மனோ கணேசன் தனது உரையில் மேலும் கூறியதாவது, நாட்டில் வாழும் இனங்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினர் இடையே சகவாழ்வை உறுதி படுத்துவதும், இந்நாட்டின் மும்மொழி கொள்கையை அமுல் செய்வதும், ஜனாதிபதி அவர்களால் எனது அமைச்சுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் ஆகும். இந்நோக்கங்களை நிறைவேற்ற எனது அமைச்சில் இன்று, அரசகரும மொழிகள் திணைக்களம், அரச கரும மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிகள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், அரசு சார்பற்ற அமைப்புகளின் செயலகம் ஆகிய நிறுவனங்களையும், தேசிய சகவாழ்வு பிரிவு, மொழிக்கொள்கை தெளிவுப்படுத்தல் பிரிவு ஆகிய உள்ளக பிரிவுகளையும் கொண்டுள்ளது.

இந்த ஆறு நிறுவனங்களை கொண்ட பெரிய ஒரு அமைச்சு இது. இங்கே எனது அமைச்சுக்கு நிதி ஒதுக்கீடு போதுமானது அல்ல என கூறப்பட்டது. அது உண்மைதான் இதை நான் பகிரங்கமாக கூறியுள்ளேன். அது சரி வரும் என்ற உறுதி எனக்கு வழங்கப்பட்டுள்ளது. பார்ப்போம். சரி வராவிட்டால் நான் பிச்சை எடுத்தாவது என் கொள்கைகளை முன்னெடுப்பேன்.

நான் என் அமைச்சை, இன்றிலிருந்து ஒரு வருடமும், மூன்று மாதங்களுக்கும் முன் பொறுப்பேற்ற போது இந்த அமைச்சுக்கு அரசியல் வழிகாட்டி இருக்கவில்லை. எமது நூறு நாள் ஆட்சியில் இந்த அமைச்சு அரச நிர்வாக முகாமைத்துவ அமைச்சுடன் இணைக்கப்பட்டு இருந்தது. இதற்கு ஒரு அமைச்சர் தனியாக இருக்கவில்லை. எனவே எல்லாவற்றையும் ஆரம்பத்தில் இருந்து கட்டி எழுப்ப வேண்டிய சவாலை நான் சந்தித்தேன். அமைச்சின் உள்ளக அதிகாரிகளையும், வெளிக்கள அதிகாரிகளையும் எனது அமைச்சின் நோக்கை புரிந்துகொள்ளும் வண்ணம் மாற்றி அமைப்பதில் இன்று நான் வெற்றி கண்டுள்ளதாக நினைக்கின்றேன். இந்த நாட்டின் மொழிப்பிரச்சினைக்கு 60 வருட வரலாறும், இனப்பிரச்சினைக்கு சுதந்திரம் கிடைத்த நாள் முதல் கடந்த 68 வருட வரலாறும் உள்ளது. எனவே இவற்றை ஒரே வருடத்தில் தீர்த்திட முடியாது.

இன்று நான் எனது பொறுப்பை நிறைவேற்றுவதற்கான அமைச்சின் நோக்கங்களை நாம் தீர்மானித்துள்ளோம். இதை செய்வதற்கு இந்த நாட்டில் நிலவும் இனவாத நோயை நாம் சரியாக அடையாளம் கண்டுள்ளோம். இனி அந்த நோயுக்கு மருந்து தேடுவதுதான் எஞ்சி இருகிறது. இது ஒரு முன்னேற்றகரமான வளர்ச்சி என நினைக்கின்றேன்.

  
   Bookmark and Share Seithy.com



ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறைத்தண்டனை! Top News
[Thursday 2024-03-28 16:00]

குரகல விகாரையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது!
[Thursday 2024-03-28 16:00]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் வவுனியாவைச் சேர்ந்த அரவிந்தன் என்ற முன்னாள் போராளி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



இலங்கை நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 54 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 33 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.



இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் வேண்டும்!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு இலங்கையின் ஆட்சி முறையில் மாற்றங்கள் இடம்பெறவேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.



சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் விபத்தில் பலி!
[Thursday 2024-03-28 16:00]

மட்டக்களப்பு - பெரியகல்லாறு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில், இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.



அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
[Thursday 2024-03-28 16:00]

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



புன்னாலைக்கட்டுவன் விபத்தில் முதியவர் பலி!
[Thursday 2024-03-28 16:00]

யாழ்ப்பாணம் -புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று மாலை இடம் பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறிய ரக உழவு இயந்திரமொன்றில் புல் ஏற்றுக் கொண்டிருந்த போது லொறி ஒன்று மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



ஜனாதிபதி ரணிலுக்கு மக்களாணை இல்லை!
[Thursday 2024-03-28 16:00]

நாடாளுமன்றத்தின் ஊடாக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



பணவீக்கம் சடுதியாக குறைந்தது!
[Thursday 2024-03-28 16:00]

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 0.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 5.9 சதவீதமாக பதிவாகியிருந்தது.



வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி!
[Thursday 2024-03-28 16:00]

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.



தனிநபரின் மாதாந்த செலவு அதிகரிப்பு!
[Thursday 2024-03-28 16:00]

தனிநபர் ஒருவரின் மாதாந்த செலவு அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.



பசிலின் பதவி நாமல் வசமானது!
[Thursday 2024-03-28 16:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் நிறைவேற்று சபை கூட்டம் நேற்று பிற்பகல் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க இதை தெரிவித்தார்.



முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் விபத்தில் பலி!
[Thursday 2024-03-28 16:00]

வவுனியா, ஓமந்தையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் மரணமடைந்துள்ளார்.



அரிசி, பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி குறைப்பு!
[Thursday 2024-03-28 16:00]

அரிசி மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி நேற்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.



இந்திய மீனவர்கள் மூவருக்கு சிறைத்தண்டனை!
[Thursday 2024-03-28 16:00]

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 36 தமிழக கடற்தொழிலாளர்ககளில் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , ஏனைய 33 பேருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.



வட, கிழக்கில் வழிபாட்டுத்தலங்களை இலக்கு வைத்த காணி அபகரிப்புகளால் பதற்றம் அதிகரிப்பு!
[Tuesday 2024-03-26 18:00]

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்ந்தும் கரிசனைக்குரியதாகவே காணப்படுகின்றது. நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் காணி அபகரிப்புக்கள் அதிகரித்து வருவதுடன், சிலவேளைகளில் அவை மத வழிபாட்டுத்தலங்களை இலக்கு வைத்தவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளன என்று பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.



கீரிமலையில் காணி அபகரிப்பு முயற்சி - உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அளவீடு இடைநிறுத்தம்! Top News
[Tuesday 2024-03-26 18:00]

யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர்.



இலங்கை நோக்கி புறப்பட்ட “டாலி“யே அமெரிக்க பாலத்தை தகர்த்தது!
[Tuesday 2024-03-26 18:00]

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் ஒன்று ​மோதியதில் குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த சரக்கு கப்பல் இலங்கை நோக்கிச் சென்ற கப்பல் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.



அக்குபஞ்சர் சிகிச்சை பெற்றவர் கிருமித் தொற்று ஏற்பட்டு மரணம்!
[Tuesday 2024-03-26 18:00]

அக்குபஞ்சர் சிகிச்சை பெற்றுக்கொண்ட யாழ் அச்சுவேலி கிழக்கு பகுதியை சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா (வயது 64) என்பவர் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.



மைத்திரியின் வாக்குமூலம் - பொய்த்தகவல்கள் பரவுவதாக சுதந்திரக் கட்சி குற்றச்சாட்டு!
[Tuesday 2024-03-26 18:00]

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பொய்யான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி வருவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. இது போன்ற தவறான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட அறிக்கைகளை கண்டிப்பதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா