Untitled Document
April 24, 2024 [GMT]
அமெரிக்காவின் கண்காணிப்பு பட்டியலில் இலங்கை!
[Friday 2016-07-01 07:00]

வெளிநாடுகளுக்கு மனித கடத்தலை மேற்கொள்ளும் நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் பட்டியலில் இலங்கையும்  உள்ளடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இலங்கையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொழிலாளர்களாக பலவந்தமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வேலை செய்விக்கப்படுகின்றனர். அத்துடன் பாலியல் கடத்தல்களும் இடம்பெறுகின்றன.

வெளிநாடுகளுக்கு மனித கடத்தலை மேற்கொள்ளும் நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இலங்கையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொழிலாளர்களாக பலவந்தமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வேலை செய்விக்கப்படுகின்றனர். அத்துடன் பாலியல் கடத்தல்களும் இடம்பெறுகின்றன.

  

இலங்கையின் ஆண்கள் பெண்கள், சிறுவர்கள் மத்திய கிழக்குக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நிர்மாணப்பணிகளுக்காகவும் ஆடை தொழிற்சாலைகளுக்காகவும், வீட்டுப்பணியாளர்களாகவும் அனுப்பப்படுகின்றனர். இதன்போது வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன்னர் இலங்கையர்கள் வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு பெருந்தொகை பணத்தை செலுத்த வேண்டியேற்படுகிறது. இந்நிலையில் அனுமதிப்பெற்ற முகவர் நிறுவனங்களும் அனுமதிப்பெறாத உபமுகவர் நிலையங்களும் இயங்குகின்றன.

இதனால் அவர்கள் பாரிய கடன்களுக்கு ஆளாகவேண்டியுள்ளது. சில முகவர் நிறுவனங்களும் முறைக்கேடான விதத்தில் செயற்படுகின்றன. இதன்காரணமாக பலருக்கு உரிய வேதனங்கள் கிடைப்பதில்லை. ஜோர்தான், மாலைத்தீவுகள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சில இலங்கைப்பெண்கள் பாலியல் தொழிலுக்கு பலவந்தப்படுத்தப்படுகின்றனர். இலங்கையின் உள்நாட்டிலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடசெய்யப்படுகின்றனர்.

கரையோர சிறுவர்களும் சிறுமிகளும் பலவந்தமாக பாலியல் தொழிலுக்கு உந்தப்படுகின்றனர். சிலர் பிச்சை எடுப்பதற்கும் அல்லது குற்றச்செயல்களை செய்வதற்கும் இதன் காரணமாக தூண்டப்படுகின்றனர். கொழும்பிலும், இலங்கையின் பெரிய நகரங்களிலும் பெருந்தோட்டப்புறங்களை சேர்ந்த தமிழ் சிறுவர்களும் பெண்களுமே வேலையாட்களாக சேர்க்கப்படுகின்றனர். இதன்போது அவர்கள் மனரீதியாகவும், உரிய வேதனம் கிடைக்காமலும், நடமாட்ட சுதந்திரம் அற்றவர்களாகவும் நடத்தப்படுகின்றனர்

இதேவேளை மத்திய ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆகிய இடங்களில் உள்ள சில பெண்கள், இலங்கையில் அண்மைய வருடங்களாக பாலியல் தொழிலுக்கு பலவந்தப்படுகின்றனர். பொலிஸார் கப்பம் பெற்றுக்கொண்டு விபச்சார விடுதிகளை அனுமதிக்கின்றனர். இந்நிலையில் மனித கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க இலங்கை அரசாங்கம் ஆகக்குறைந்த தரத்தைக்கொண்ட தவிர்ப்பு நடவடிக்கைகளை கூட எடுக்கவில்லை என்று அமெரிக்க தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதன்காரணமாக நான்காவது தொடர் வருடமாகவும் டயர் 2 (Tier 2) கண்காணிப்பு பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



சீன அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக்குழு அனுரவுடன் சந்திப்பு!
[Wednesday 2024-04-24 05:00]

சர்வதேசத் திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு நேற்று ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தது.



ஈரானிய ஜனாதிபதிக்கு விசேட பாதுகாப்பு!
[Wednesday 2024-04-24 05:00]

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.



கனேடியத் தமிழர் பேரவையின் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ரவீனா ராஜசிங்கம்!
[Wednesday 2024-04-24 05:00]

கனேடியத் தமிழர் பேரவை'யின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரவீனா ராஜசிங்கம் அறிவித்துள்ளார். முழு நேர அரசியல் செயற்பாடுகளில் கவனம் செலுத்தும் முகமாக இம்முடிவை எடுத்ததாக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.



ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று மீண்டும் விவாதம்!
[Wednesday 2024-04-24 05:00]

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் மூன்று நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது.



சுதந்திரக் கட்சியை 100 மில்லியன் ரூபாவுக்கு பேரம் பேசிய மைத்திரி!
[Wednesday 2024-04-24 05:00]

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ள பிரபல வர்த்தகர் ஒருவரிடம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஏலம் விடுவதற்கு 100 மில்லியன் ரூபா பேரம் பேசியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றஞ்சுமத்தினார்.



அனுரவுடன் விவாதம் - மாற்றுத் திகதிகளை முன்மொழித்த சஜித்!
[Wednesday 2024-04-24 05:00]

அரசியல் விவாதம் ஒன்றுக்காக தேசிய மக்கள் சக்தி முன்மொழிந்துள்ள நாட்களில் சஜித் பிரேமதாசவுக்கு வேறு அலுவல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து தவறான செயற்பாட்டில் ஈடுபடுத்திய கும்பல்!
[Wednesday 2024-04-24 05:00]

யாழ்ப்பாணத்தில் போதை ஊசி செலுத்தி பெண்ணொருவரை கும்பல் ஒன்று தவறான செயற்பாட்டில் ஈடுபடுத்தியுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



அரகலயவின் அமைப்பு மாற்றத்தை கட்சியில் இருந்து தொடங்கும் நாமல்!
[Wednesday 2024-04-24 05:00]

அரகலய போராட்டத்தின் போது கோஷமாக மாறிய அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துதலை எமது கட்சியில் இருந்தே ஆரம்பிக்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்!
[Wednesday 2024-04-24 05:00]

2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளதோடு மே 06 ஆம் திகதி முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.



ஆர்ப்பாட்டம் நடத்த தடை!
[Wednesday 2024-04-24 05:00]

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (24) நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வெலிக்கடை பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னர் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



தையிட்டியில் தொடரும் திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்! Top News
[Tuesday 2024-04-23 16:00]

யாழ்ப்பாணம் - தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று ஆரம்பமாகி இன்றும் நடைபெறுகிறது.



பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க முயன்ற முதியவர் மாரடைப்பால் மரணம்!
[Tuesday 2024-04-23 16:00]

பாக்கு நீரிணையை கடக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.



வலம்புரி ஆசிரியரிடம் விசாரணை- யாழ்.ஊடக அமையம் கண்டனம்!
[Tuesday 2024-04-23 16:00]

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் முன்னணி நாளிதழ்களுள் ஒன்றான வலம்புரி நாளிதழது பிரதம ஆசிரியர் ந.விஜயசுந்தரம் வடக்கு ஆளுநரின் முறைப்பாட்டின் பேரில் இன்று திங்கட்கிழமை இலங்கை காவல்துறையின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்.ஊடக அமையம் தனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்துகொள்கின்றது.



சஜித் - அனுர விவாதம் - நாள் குறித்தது தேசிய மக்கள் சக்தி!
[Tuesday 2024-04-23 16:00]

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.



தியத்தலாவ கார் பந்தய விபத்து - இராணுவ விசாரணைக்கு உத்தரவு!
[Tuesday 2024-04-23 16:00]

தியத்தலாவ ஃபொக்ஸ் ஹில் கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது. மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாக மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.



பதவி விலகுகிறார் மைத்திரி?
[Tuesday 2024-04-23 16:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.



ஆறுகால்மடத்தில் பட்டா வாகனம் மோதி முச்சக்கரவண்டி சேதம்! - சாரதி படுகாயம்.
[Tuesday 2024-04-23 16:00]

யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் சந்தியில் இன்று முச்சக்கர வண்டி பட்டாரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.



புங்குடுதீவு கண்ணகியம்மனின் சேவை 16 இலட்சம் ரூபாவுக்கு ஏலம்!
[Tuesday 2024-04-23 16:00]

புங்குடுதீவு கண்ணகியம்மன் ஆலய தேர்த்திருவிழாவில், அம்மனின் சேலை 16 இலட்சம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.



நிறுத்தாமல் சென்ற முச்சக்கரவண்டி மீது சூடு - இருவர் பலி!
[Tuesday 2024-04-23 16:00]

மொரகஹஹேன- மிரிஸ்வத்த பிரதேசத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஒத்திவைப்பு!
[Tuesday 2024-04-23 05:00]

இன்று நடைபெறவிருந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா