Untitled Document
April 18, 2024 [GMT]
தமிழகத்தில் இருந்து 43 அகதிகள் இன்று இலங்கை திரும்புகின்றனர்!
[Tuesday 2016-02-09 07:00]

இந்தியாவில் இருந்து 43 இலங்கை அகதிகள் இன்று விமானம் மூலம் நாடு திரும்புகின்றனர். திருச்சி, சென்னை மற்றும் மதுரை ஆகிய விமான நிலையங்களிலிருந்து மூன்று விமானங்களில் இவர்கள் நாடு திரும்பவுள்ளனர். 2016ஆம் ஆண்டில் மாத்திரம் இதுவரை 61 பேர் இவ்வாறு நாடு திரும்பியிருக்கும் நிலையில், இன்று நாடு திரும்பும் 43 பேரில் 24 ஆண்களும், 19 பெண்களும் அடங்குவதுடன், இவர்கள் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மன்றும் மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து 43 இலங்கை அகதிகள் இன்று விமானம் மூலம் நாடு திரும்புகின்றனர். திருச்சி, சென்னை மற்றும் மதுரை ஆகிய விமான நிலையங்களிலிருந்து மூன்று விமானங்களில் இவர்கள் நாடு திரும்பவுள்ளனர். 2016ஆம் ஆண்டில் மாத்திரம் இதுவரை 61 பேர் இவ்வாறு நாடு திரும்பியிருக்கும் நிலையில், இன்று நாடு திரும்பும் 43 பேரில் 24 ஆண்களும், 19 பெண்களும் அடங்குவதுடன், இவர்கள் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மன்றும் மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.

  

யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் ஏற்பட்ட அமைதி நிலையைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை 4589 இலங்கை அகதிகள் தமிழகத்திலிருந்து நாடு திரும்பியுள்ளனர். அவ்வாறு நாடு திரும்ப விரும்புபவர்கள் குறித்த பட்டியல்களை வழங்கினால் அதற்கு உதவிசெய்ய முடியும் என இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எஸ்.சி.சந்திரஹாசன் தலைமையில் தமிழகத்தில் செயற்பட்டுவரும் ஈழத் தமிழர் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்துக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்குமிடையில் சந்திப்பொன்று சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. வான் மார்க்கமாகவன்றி கடல்மார்க்கமாகச் செல்வதற்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தால் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளில் பலர் நாடு திரும்புவார்கள் என்ற விடயத்தை சந்திரஹாசன் சுட்டிக்காட்டியிருந்தார்.

அப்படியாயின் நாடு திரும்ப விரும்புவர்களின் விபரங்களை வழங்கினால் அதற்கு அமைய இந்திய மத்திய அரசாங்கத்தால் உதவ முடியும் என்பதை அவருக்கு எடுத்துக் கூறியிருந்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வர்ப் தெரிவித்துள்ளார். கப்பலொன்றில் செல்லக்கூடிய எண்ணிக்கையானவர்கள் இருந்தால் அதற்கான ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆராய முடியும். எனினும், இவர்களின் வெளியேற்றமானது தாமாக முன்வந்ததாக இருக்க வேண்டும். பலவந்தப்படுத்தி அனுப்பிவைக்கப்பட்டதாக அமையக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆகாய மார்க்கமாக தமிழ்நாட்டிலிருந்து அகதிகள் நாடுதிரும்புவதாயின் பயணப்பொதிகள் தொடர்பான சிக்கல் காணப்படுகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் விமானத்தின் மூலம் நாடு திரும்ப விரும்புவதில்லையென இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், இன்று தமிழ்நாட்டின் திருச்சியிலிருந்து இலங்கை விமானசேவை ஊடாகவும், சென்னையிலிருந்து மிஹின்லங்கா விமான சேவை ஊடாகவும், மதுரையிலிருந்து மிஹின்லங்கா விமான சேவை ஊடாகவும் கொழும்பு திரும்புகின்றனர். அமைச்சர் சுவாமிநாதனின் முயற்சியால் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சும் இலங்கை விமானசேவை நிறுவனமும், இவ்வாறு இலங்கை திரும்பும் அகதிகளின் பயணப் பொதியின் அளவை 40 கிலோவிலிருந்து 60 கிலோவாக அதிகரிக்க இணங்கியது.

இவர்கள் இலங்கை வருவதற்கு இலவசமாக விமானபயணச்சீட்டு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்படும். அத்துடன் மீள் சமூக ஒருங்கிணைப்பிற்கான நன்கொடையாக ஒவ்வொருவருக்கும் 75 அமெரிக்க டொலர்களும், போக்குவரத்து நன்கொடையாக ஒவ்வொருவருக்கும் 19 அமெரிக்க டொலர்களும், உணவு அல்லாத பண நன்கொடையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 75 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி குறிப்பிட்டார்.

இந்தியாவில் 64,000 பேர் 109 முகாம்களில் தங்கியுள்ளனர். மொத்தமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை அகதிகள் இந்தியாவில் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன், மீள்குடியமர்த்தப்படும் மக்களுக்கு வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதி உதவிகளை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.தற்பொழுது தேசிய திட்டமிடல் திணைக்களத்திடம் விரிவான கருத்திட்டமுன்மொழிகளை அனுமதிப்பது தொடர்பான முன்னெடுப்புக்கள் நடைபெற்றுவருகின்றது.

மீள்குடியமரும் மக்களுக்கு 6 மாதகாலத்திற்கு உலர் உணவுகளை வழங்குவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.இவ் அமைச்சானது, வீடுகள் மற்றம் தமது உறவினர்களை இழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நட்டஈடுகளை வழங்குமாறு, ஆட்களையும் ஆதனங்களையும் கைத்தொழில்களையும் புனரமைப்புச் செய்யும் அதிகாரசபைக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளது. வீடுகளை இழந்தவர்களுக்கு அமை ச்சினால் மேற்கொள்ளப்படும் 65,000 வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படவிருப்பதாக அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி மேலும் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



கனடா 400 கிலோ தங்க கொள்ளை - பிரசாத் பரமலிங்கம் உள்ளிட்ட 6 பேர் கைது!
[Thursday 2024-04-18 16:00]

கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஏர் கனடா விமான சேவையின் இரண்டு பணியாளர்களும், பிரசாத் பரமலிங்கம் என்ற தமிழரும் அடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு எமது ஆட்சியில் தண்டனை! - தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி.
[Thursday 2024-04-18 16:00]

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் சூத்திரதாரிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் எமது ஆட்சியில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.



அதிகளவு உயிரிழப்புகளுக்கு மாரடைப்பே பிரதான காரணம்!
[Thursday 2024-04-18 16:00]

கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அத்தோடு, 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமும் மாரடைப்பு என்று சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.



மைத்திரிக்கு தடை உத்தரவு நீடிப்பு!
[Thursday 2024-04-18 16:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.



உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - ஞாயிறன்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி!
[Thursday 2024-04-18 16:00]

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஐந்தாண்டுகளை நினைவுகூரும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 8.45 மணியளவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனைவரையும் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் கேட்டுக் கொண்டார்.



நயினாதீவில் பெண்ணுக்கு நடுக்கடலில் பிரசவம்!
[Thursday 2024-04-18 16:00]

யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.



வாக்குறுதி கொடுத்து ஏமாற்றினார் கோட்டா!
[Thursday 2024-04-18 16:00]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் தான் ஏமாற்றப்பட்டதாக, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



தேவிபுரத்தில் கட்டுத்துவக்கு வெடித்து குடும்பஸ்தர் காயம்!
[Thursday 2024-04-18 16:00]

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் இன்று பிற்பகல் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



ஆரையம்பதியில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்!
[Thursday 2024-04-18 16:00]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் இன்று கரை ஒதுங்கியதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் . குறித்த சடலம் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணுடைய சடலம் எனவும் இது வரை சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் எனவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .



ரஷ்ய இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு - இராணுவ மேஜர் கைது!
[Thursday 2024-04-18 16:00]

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்ற அனுப்புவதாக கூறி பணம் பெற்ற இருவர் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் என தெரிவிக்கப்படுகின்றது.



ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் - 21 இலங்கை மாலுமிகள் மீட்பு!
[Thursday 2024-04-18 05:00]

ஓமான் வளைகுடாவில், கடும் புயலில் சிக்கி கவிழ்ந்த கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்களை ஈரானிய அவசர சேவைகள் பிரிவு காப்பாற்றியுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.



ஜனாதிபதி தேர்தல் நடத்துவதை தவிர்ப்பதற்கு வியூகமா?
[Thursday 2024-04-18 05:00]

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாமல் தொடர்ந்தும் ரணில் பதவியில் இருப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படுகின்றவா என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



மைத்திரிக்கு எழுந்து மரியாதை செலுத்தாத நிமல்!
[Thursday 2024-04-18 05:00]

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 108 ஆவது ஜனன தினம் கொழும்பு பண்டாநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.



அருட்தந்தை சிறில் காமினிக்கு சிஐடி அழைப்பாணை!
[Thursday 2024-04-18 05:00]

கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் தொடர்பாடல் குழு உறுப்பினர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாளை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.



சுதந்திர கட்சியை ஐதேகவுடன் இணைக்க அனுமதியேன்!
[Thursday 2024-04-18 05:00]

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கொள்கைகளைப் பின்பற்றிய எம்மால், சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.



வடக்கிற்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!
[Thursday 2024-04-18 05:00]

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, இ வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.



பேராயருக்கு ஐக்கிய மக்கள் சக்தி எழுத்து மூலம் உறுதிமொழி!
[Thursday 2024-04-18 05:00]

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் தொடர்பான தமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து எழுத்து மூலம் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.



அராலியில் கணவன் தாக்கி மனைவி படுகாயம்!
[Thursday 2024-04-18 05:00]

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, அராலி பகுதியில் நேற்று மாலை கணவன் ஒருவர் மனைவியை, கூரிய ஆயுதத்தால் வெட்டி தாக்கியுள்ளார். படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த தாக்குதலை மேற்கொண்ட கணவன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



கொத்துக்கு 1900 ரூபா விலை கூறிய கடைக்காரருக்கு பிணை!
[Thursday 2024-04-18 05:00]

கொழும்பு புதுக்கடை பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாழைத்தோட்ட பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.



சாவகச்சேரியில் தப்பியோடிய கைதிகள்- 30 நமிடங்களில் துரத்திப் பிடித்த பொலிஸ்!
[Thursday 2024-04-18 05:00]

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதிகள் சுமார் 30 நிமிட இடைவெளியில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா