Untitled Document
May 24, 2026 [GMT]
  
   Bookmark and Share Seithy.com



இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் இல்லை!
[Sunday 2026-05-24 16:00]

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, அனர்த்த நிவாரணப் பணிகளுக்காகச் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.



அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பதவியில் இருந்து விலகினார் மஹிந்த சமரசிங்க!
[Sunday 2026-05-24 16:00]

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிற்கான இலங்கைத் தூதுவரும், முன்னாள் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க, பதவியிலிருந்து விலகுவதாக அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.



மீண்டும் வங்குரோத்து அடையும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும்!- சஜித் எச்சரிக்கை
[Sunday 2026-05-24 16:00]

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடையும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.



தேர்தலை நடத்த நாங்கள் தயார்!
[Sunday 2026-05-24 16:00]

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தாம் அனைத்து வழிகளிலும் தயாராக இருப்பதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.



முறையான திட்டமிடல் இல்லாததும் பொருளாதார பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம்!
[Sunday 2026-05-24 16:00]

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நான் நாட்டைப் பொறுப்பேற்ற போது இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது உண்மைதான் என்றும், ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு வகையில் அந்த வீழ்ச்சி தொடர்ந்து கொண்டேதான் இருந்தது என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.



முடிந்தால் பசிலை நாட்டிற்கு அழையுங்கள்!- நாமலுக்கு பிரதி அமைச்சர் சவால்.
[Sunday 2026-05-24 16:00]

முடிந்தால் பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு வரவழையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன சவால் விடுத்துள்ளார்.



கொழும்பில் ஒருவரைக் கடத்தி 2 கிலோ தங்கம் கொள்ளை- பொலிஸ் அதிகாரி கைது!
[Sunday 2026-05-24 16:00]

கொழும்பில் நபர் ஒருவரைத் கடத்தி, அவரிடமிருந்து 2 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.



ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்த பல தகவல்கள் அம்பலம்!
[Sunday 2026-05-24 16:00]

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் விசாரணைகளில் பல தகவல்கள் அம்பலமாகி வருகின்றன. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் நெருங்கிய சகாவாக முன்னதாக செயற்பட்ட, அசத் மௌலானா வழங்கிய 95 பக்கங்கள் அடங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.



வட்டமடுவில் யானை தாக்கி ஒருவர் பலி!
[Sunday 2026-05-24 16:00]

திருக்கோவில், வட்டமடு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கால்நடைகளுக்குத் தீவனம் வெட்டிக்கொண்டிருந்த போதே குறித்த நபர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கானதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 63 வயதுடைய, உனாவக்காடு பகுதியைச் சேர்ந்தவராவார்.



13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த சஜித் வாக்குறுதி!
[Sunday 2026-05-24 08:00]

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்தின் இன்றியமையாத அங்கமாகும் என்று குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான தனது உறுதியான அரசியல் அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.



ரொரன்டோவில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு!
[Sunday 2026-05-24 08:00]

செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும் என்ற தலைப்பிலான இந்த உலகத் தமிழ் ஆய்வு மாநாடு, நடப்பு ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் ஒக்டோபர் 18ஆம் திகதி வரை கனடாவின் ரொரன்டோவில் நடைபெறவுள்ளது.



திசை மாறிய தமிழக மீனவர் நெடுந்தீவில் மீட்பு!
[Sunday 2026-05-24 08:00]

தற்போது நிலவும் பலத்த காற்று காரணமாக திசைமாறி வந்து, நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



சீரற்ற வானிலையால் 27 ஆயிரம் பேர் பாதிப்பு!
[Sunday 2026-05-24 08:00]

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 27,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்த நிலையம் நேற்றுபிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 6,907 குடும்பங்களைச் சேர்ந்த 27,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



'இந்துக்களின் போர்' சமநிலையில்!
[Sunday 2026-05-24 08:00]

மானிப்பாய் இந்து கல்லூரிக்கும், சாவகச்சேரி இந்து கல்லூரிக்கும் இடையிலான 'இந்துக்களின் போர்' துடுப்பாட்டப் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.



வீரவன்சவுக்கு பொலிஸ் அழைப்பாணை!
[Sunday 2026-05-24 08:00]

பத்தரமுல்ல போர் வீரர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய வாக்குமூலத்தை வழங்குவதற்காக, தமக்கு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.



226 பேரை கைது செய்வதற்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்!
[Sunday 2026-05-24 08:00]

வௌிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 226 பேரை கைது செய்வதற்காக சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் (Red Notices) விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



முதிய தம்பதியை கொலை செய்தவர் நகைகளுடன் கைது!
[Sunday 2026-05-24 08:00]

டிக்கோயா நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர், பொகவந்தலாவை - பெற்றசோ பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.



மத்தலவை பிராந்திய விமான போக்குவரத்து மையமாக மாற்ற திட்டம்!
[Sunday 2026-05-24 08:00]

இலங்கையின் மூலோபாய அமைவிடம் காரணமாக மத்தல சர்வதேச விமான நிலையத்தை பிராந்திய விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கான அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.



ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு மரணதண்டனை!
[Saturday 2026-05-23 19:00]

19 வருடங்களுக்கு முன்னர் நபரொருவரை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.



எவ்பிஐ அதிகாரிகள் வரவில்லை- என்கிறது அமெரிக்க தூதரகம்!
[Saturday 2026-05-23 19:00]

இலங்கையில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு ஆதரவளிக்க அமெரிக்க கூட்டாட்சி புலனாய்வு அமைப்பான FBI-யின் விசேட “குழு” ஒன்று இலங்கைக்கு வந்துள்ளதாக வெளியாகியிருந்த தகவல்கள் தவறானவை என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா