Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 20, 2013 [GMT]

  • Welcome
  • Welcome
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழர் தரப்பின் வெற்றியானது எதிர்கால நலன்களை பாதுகாப்பதற்கான காவல் அரண்:
[Friday, 2012-07-13 12:43:57]

இலங்கை அரசாங்கம் வடக்கில் நில அபகரிப்பை திட்டம்pட்;ட வகையில் நடத்திய வண்ணம் கிழக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது. இலங்கை அரசின் மேற்படி இரண்டு நடவடிக்கைகளும் ஒரு நாடு சார்ந்த அல்லது ஜனநாயகம் சார்ந்த முன்னெடுப்பு என்று ஒருவரும் கருதி விடக்கூடாது. மாறாக வடக்கில் இடம்பெறும் நில அபகரிப்பு தமிழ் மக்களை ஓரங்கட்டும் ஒரு அநியாயச் செயல் என்று நாம் கருதினால் மட்டும் போதாது. நமது சிந்தனைகளை கிழக்கு நோக்கி பரவ விடவேண்டும்.


  

மிகவிரைவில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கூட ஒரு தமிழர் விரோத நடவடிக்கைக்கு அத்திவாரம் இடுகின்ற ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கையாகவே நாம் கருதுகின்றோம். வடக்கிலும் கிழக்கிலும் இவ்வாறான திட்டமிட்ட வகையில் ஜனாநாயக விரோதச் செயல்களை அரங்கேற்றிவரும் மகிந்த ராஜபச்சாவின் நாசகார எதிர்காலத் திட்டங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணம் என்ற தனித்துவத்தை ஓட விரட்டி விரட்டுவத அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தல் தமிழர் தரப்பைச் சார்ந்திருக்காத ஒருவரை முதலமைச்சரா முடி சூட்ட வேண்டும் என்று கனவு காண்கின்றார்கள்.

யாரோ ஒருவரை கிழக்கின் முதலமைச்சராக தேர்ந்தெடுத்துவிட்டு அவர் தலைமையில் அந்த மாகாணத்தின் நிர்வாகத்தை நடத்துவதுதான் இந்த தேர்தலின் நோக்கமாக தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடாது என்பதை உணர்த்துவதில் நாலா பக்கங்களிலிருந்தும் குரல்கள் ஒலித்த வண்ணம் உள்ளன.

வடக்கையும் கிழக்கையும் இணைத்து வைத்திரு;நத வடக்கு கிழக்கு மாகாண சபையை கலைத்ததும் பின்னர் இணைந்திருந்த வடக்கையும் கிழக்கையும் பிரித்ததும் தற்போதைய மகிந்தாவின் கபடத்தனம் நிறைந்த செயல் என்று கூறுவதில் எந்தத் தயக்கமும் இருக்க முடியாது.

வடக்கையும் கிழக்கையும் இணைத்திருந்த ஆணையை நீத்p மன்றத்தின் தீர்ப்பு ஒன்றின் மூலம் வெட்டியெறிந்த அவரது திட்டம் இன்னும் ஆபத்துக்கள் நிறைந்த ஒன்றாகவே எதிர்காலத்தில் அமையப் போகின்றது என்ற பயங்கரத்தையும் நாம் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றோம் எனவே மகிந்தாவின் மேற்படி சதித் திட்டங்களை வெற்றி கொண்டு முன்னரைப் போல எமது தாயகத்தை இணைப்பதே கிழக்கு தேர்தலில் எம் முன் உள்ள பாரிய சவால் என்பதையும் நாங்கள் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் இதை விடுத்து எம் இனம் பலவீனப் படுத்தப்படுவதை நமது கண்களாலே நேரே பார்ப்பதை தவிர்ப்பதற்காகவும் நாம் போராட வேண்டியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தமிழர் தரப்பு தோற்கடிக்கப்படுவதன் மூலம் தமக்கு சாதகமான பல எதிர்காலத் திட்டங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு அது உதவியாக அமைந்து விடும். அவற்றுள் முக்கியமான ஒரு விடயம் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பாகும். ஆந்த மாகாணத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் எழுந்து நிற்கும் "முஸ்லிம் முதலமைச்சர்" என்னும் சிந்தனை கூட மகிந்த ராஜபக்சாவின் ஆலோசனையின் பேரில் எழுந்ததே என்றும் கூறப்படுகின்றது. இவ்வாறு ஒரு முஸ்லிம் அல்லது ஒரு பெரும்பான்மை இனத்தின் பிரதிநிதி கிழக்கு மாகாண முதலமைச்சராக வந்தால் தற்போதைய அரசாங்கத்தின் திட்டங்கள் நிதர்சனமாகவதற்கு கால்கோளாக அமையும் என்பஐது உண்மை.

நாம் இதுவரை தெரிவித்த கருத்துக்களை மீளாய்வு செய்வோமானால் மொத்தத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றியும் வட-கிழக்கு இணைப்பும் எம் தமிழர் தரப்பின் கனவு என்பதையும் இவைகளை நனவாக்கும் பரிய கடமை சகல அரசியல் தலைவர்களையும் சாரும் தமது கடமையை உணர்ந்து எம் இனத்தின் விடுதலையின் தேவையினை அறிந்து இத் தேர்தலை சகல அரசியல் தலைவர்களும் செயலாற்றி வெற்றியினை உறுதிப்படுத்துவதுதான் சிறந்தது என்று நாம் தெளிவுபடுத்த விரும்புகின்றோம். இதன் மூலம் நமது தமிழர்கள் சார்ந்த எதிர்கால நலனை நாம் பாதுகாக்கும் அரண் ஒன்றை நிறுவியவர்களாக நாம் தலை நிம்மிர்ந்து நிற்கலாம்.

கதிரோட்டம் 13-07-2012

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
வட மகாணசபைத் தேர்தல் மகிந்தாவோடான தமிழ்மக்களின் கணக்கைத் தீர்க்கப் பயன்பட வேண்டும். - நக்கீரன்
[Tuesday, 2013-06-18 10:25:35]

வட மாகாணத் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற நீண்ட நாள் கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. எதிர் வரும் செப்தெம்பர் 07 ஆம் நாளன்று தேர்தல் இடம்பெறும் என்று ஆங்கில ஏடுகளில் செய்தி வந்துள்ளது. போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் வட மாகாண சபைக்கு இதுவரை தேர்தல் நடை பெறவில்லை. கண்ணிவெடி அகற்றுவதில் தாமதம், மக்களை மீள்குடியமர்வு செய்வதில் தடங்கல், வாக்காளர் இடாப்பை நிறைவு செய்வதில் சுணக்கம், அபிவிருத்தித் திட்டங்களை நிறைவு செய்வதற்குக் கால அவகாசம் தேவை என அரசு நொண்டிச் சாட்டுக்களைச் சொல்லிவந்தது. ஆனால் இப்போது தேர்தலைப் பிற்போட அரசிடம் காரணங்கள் இல்லாது போய்விட்டன. அதுதான் உண்மை.

தமிழ் இன உணா்வாளர் மணிவண்ணனுக்கு அவரது இறுதி ஆசைப்படி போர்த்தப்பட்டது தேசியக்கொடியா ! நாம் தமிழர் கொடியா!
[Monday, 2013-06-17 21:53:35]

தமிழின உணர்வாளர், இயக்குனர், நடிகர் எனப் பல பரிமாணங்களை கொண்ட மனிதர்களுள் ஒருவரான மணிவண்ணனின் மறைவு ஒட்டு மொத்த தமிழினத்தையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. மறைந்த தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மணிவண்ணனின் உடல் நேற்று மாலை சென்னை போரூரில் தகனம் செய்யப்பட்டது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகளும் , திரையுலகினரும் , தமிழார்வலர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பல தரப்பட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

13 திருத்தத்துக்கான திருத்தம் தமிழருக்கென ஒரு முண்டம் - பனங்காட்டான
[Sunday, 2013-06-16 22:31:39]

'படைத்தவன் படி அளப்பான்' என்ற நம்பிக்கையில் இந்தியத் தலைமையைச் சந்திக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆயத்தமாகின்றது. இது இந்தியாவின் அழைப்பல்ல. கூட்டமைப்பு கேட்டுப் பெறும் ஒரு வாய்ப்பு.
கடந்த வாரக் கட்டுரையின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் பார்க்கலாம். இது, 'ஓநாய் வருகிறது. ஓநாய் வருகிறது' என்ற கதை போன்ற சமாசாரம்.

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! - நக்கீரன் (பாகம் 2)
[Sunday, 2013-06-16 06:47:29]

அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் இராசரத்தினா, மேத்தானந்தா, சிறில் மத்தியூ, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்கா போன்ற அரசியல்வாதிகள் ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடென்றும் நாடும் மக்களும் ஒன்றென்றும் எழுதியும் பேசியும் வந்தார்கள். இன்றும் பேசி வருகிறார்கள். இவர்களில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஜே.ஆர். ஜெயவர்த்தனா போன்றோர் கிறித்தவர்களாக இருந்து பின்னர் பவுத்தர்களாக மதம் மாறிக் கொண்ட அரசியல் பவுத்தர்களாவர்.

நெல்சன் மண்டேலா - (மரணத்தின் அழைப்பிதழ்-4) பூநகரான்
[Tuesday, 2013-06-11 22:28:59]

இந்த உலகத்தில் இன்று இரண்டு பேர் உலக கவனத்தை ஈர்ப்பவர்களாக உள்ளனர் - ஒருவர் ஒபாமா மற்றவர் நெல்சன் மண்டேலா இருவருமே வெள்ளை இனத்தவராலும் மதிக்கவும் நேசிக்கவும் படுகிறவர்கள்.. ஆம் , நோய் வாய்ப்பட்டுள்ள 94 வயதான நெல்சன் மண்டேலா என்ற மனிதனிற்காக உலகமே கரிசனை காட்டுகிறது . ஒபாமா நோய் வாய்ப்பட்டாலும் இவ்வளவு கரிசனை எழுமா என்பது கேள்விக்குரியது.

மகிந்தரின் கைகளில் மந்திரக்கோல் - இதயச்சந்திரன்
[Tuesday, 2013-06-11 22:25:30]

இலங்கையின் கடன் நிலைமைகள் குறித்து எழுதினால், அச்செய்திகள், தமிழ் மக்களுக்கு போதையூட்டும் விடயமாகச் சிலருக்குத் தென்படுகிறது. சிங்களத்தின் பொருளாதார வீழ்ச்சி, தமிழ் மக்களை போதையூட்டும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிடும் என்பது தவறு. வெளிநாட்டு நேரடி முதலீடுகள் எங்கே குவிக்கப்படுகிறது என்பது குறித்தான தெளிவான செய்திகளை ஈழத்தமிழ் மக்களிடையே கொண்டு செல்வதும், அக்கடன்கள் பிரசவிக்கும் சுமைகள், நலிவடைந்துள்ள சமுதாயத்தை மென்மேலும் கீழிறக்கிவிடும் என்பதை ஊடகப்பரப்பில் முன்வைப்பதும், தேவையற்ற விவகாரமாகக் கருத முடியாது.

கடன் பொறிக்குள் சிக்கியுள்ள இலங்கை: - இதயச்சந்திரன்
[Sunday, 2013-06-09 20:27:33]

2005 இல் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் , யுத்த வெற்றியை வைத்து எத்தனை காலத்திற்கு ஆட்சியை நடாத்தும் என்கிற கேள்வி பல முனைகளிலும் இருந்து எழுப்பப்படுகிறது. புதிது புதிதாக முறிகளை (bond) விற்பதும், வெளிநாட்டு நிதிச் சந்தையில் கடன் வாங்குவதுமாக இலங்கை திறைசேரியின் பொருளியல் வாழ்வு கழிகிறது. மகிந்த ராஜபக்சவின் எட்டு ஆண்டுகால ஆட்சிக்காலத்தில், உள்நாட்டு வெளிநாட்டு கடன்கள், அபிவிருத்தி என்கிற சந்தோசம் தரும் வார்த்தையால் திரையிடப்பட்டுள்ளன.

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! - நக்கீரன்
[Saturday, 2013-06-08 11:53:39]

'இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு' என்ற கூக்குரல் தென்னிலங்கை சிங்கள - பவுத்த பேரினவாதிகளால் உரத்த குரலில் ஒலிக்கப்படுகிறது. ஏற்கனவே சிங்கள பேரினவாதத்தை கக்கிக் கொண்டிருக்கும் ஜாதிக ஹெல உறுமய, சுதந்திரத்துக்கான தேசிய இயக்கம் போன்ற கடும்போக்கு அமைப்புக்கள் மட்டும் அல்லாது அண்மையில் முளைத்திருக்கும் பொது பல சேனா, சிகல ராவய, இராவண பலய போன்ற அமைப்புக்களும் களத்தில் இறங்கியுள்ளன. இந்தப் பேரினவாத சக்திகளின் போர்க்கோலம் அய்ம்பதுகளில் தனிச் சிங்களத்துக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த வரலாற்றுக் காட்சிகளை நினைவு படுத்துகிறது.

இந்திய இயலாமை பார்த்திருக்க பறிபோகிறது 13வது திருத்தம்! பனங்காட்டன்
[Friday, 2013-06-07 22:29:38]

இலங்கையின் தலைநகரான கொழும்பில் ஒன்றோடொன்று தொடர்புற்ற மூன்று விடயங்கள் சமகாலத்தில் நடைபெறுகின்றன. வெளித்தோற்றத்தில் இவை ஒவ்வொன்றும் வெவ்வேறுதுறை சார்ந்தவைகளாகக் காணப்பட்டாலும் அரசாங்கத்தின் நகர்வில் இவை ஒன்றுடனொன்று நெருக்கமான தொடர்புடைய சட்ட மாற்றங்கள். இன்னும் குறிப்பாகச் சுட்டுவதானால், செப்டெம்பரில் நடைபெறப்போவதாகக் கூறப்படும் வடமாகாண சபைத் தேர்தலை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்.

சீனமயமாகும் இலங்கையின் பொருளாதாரம் - இதயச்சந்திரன்
[Tuesday, 2013-06-04 21:34:14]

மாற்றுச் சிந்தனைகளையும் அதற்கான செயற்பாட்டு வழிமுறைகளையும் இலங்கை அரசு ஏராளமாக வைத்துள்ளது. விடுதலைப்புலிகள் உடனான யுத்தம் முடியும் வரை, 'பயங்கரவாதத்திற்கெதிரான போர்' என்கிற அமெரிக்கப்பொது மொழி ஊடாக எல்லா நாடுகளையும் முரண்பாடுகளின்றி தன் பின்னால் அணிதிரள வைத்தது. யுத்தம் முடிந்தவுடன் பிரச்சினைகள் ஆரம்பமாகின. அமெரிக்கத் தீர்மானம், 'சீபா' ஒப்பந்தச் சிக்கல் என்று பல கோணங்களில் இன்று பிரச்சினைகளை இலங்கை எதிர்கொள்கிறது.

RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
Ramans2011
Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
INNSYS-20120930
TamilsGuid-191012-2013
AJRwindows22.05.13
TDE_Computers2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com