Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 24, 2013 [GMT]

  • Welcome
  • Welcome
சிறீலங்கா இராணுவத்தின் கொடுமைகள் - போரினால் ஏற்பட்ட புண்ணில் வேலை நுழைப்பதாகத் தமிழ்ப் பெண்கள் சொல்கிறார்கள்: Washington Post..
[Sunday, 2012-07-08 09:14:27]

(தமிழர்களுக்குச் சொந்தமான நாட்டில் சிங்கள இராணுவ ஆட்சி நீக்கமற நிறைந்துள்ளதாகத் தெரிவிக்கும் வோஷிங்டன் போஸ்ட் செய்தியாளர் சைமன் டெனியர் (Simon Denyer of Washington Post) யாழ்ப்பாணத்தில் இருந்து அண்மையில் அனுப்பி வைத்த செய்தியில் "நாட்டின் வடபகுதியில் தோட்டம் மற்றும் காய்கறி வின்பனை, கோட்டல்களை நடத்தல், உணவகங்களை நடத்தல், ஏன் முடிதிருத்தும் கடைகளை நடத்துதல் போன்ற பொருளியல் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்" என்கிறார். அவர் அனுப்பிய செய்தியின் முழு வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)


  

சிறீலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கும் போது பல்லாயிரம் பொதுமக்கள் இருபக்கச் சூட்டில் அகப்பட்டு பயப்பீதியில் உறைந்து போனார்கள்.

"பசி காரணமாகக் குழந்தைகள் அழுதன. அப்ப யாரோ தேங்காய்ப்பால் கஞ்சி கொடுப்பதாகச் சொன்னார்கள். உடனே பதுங்கு குழியில் ஒளித்திருந்த நாம் வெளியே வந்தோம்" என வட மாவட்டம் துணுக்காயைச் சேர்ந்த 35 அகவை பெண் ஒருவர் நினைவு கூர்ந்தார். "அப்போது இராணுவம் அந்த இடத்தில் குண்டு போட்டது. எனது குழந்தை உட்படப் பெரும்பாலான குழந்தைகள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்."

போர் முடிந்து 3 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் வட இலங்கைத் தமிழ் சிறுபான்மை மக்களுக்கு - இவர்கள் மூன்று பத்து ஆண்டுகள் நடந்த மோதலில் அதிகளவு இறந்து பட்டதோடு புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதியில் பயத்தோடும் ஒடுக்கப்பட்டும் வாழ்ந்தார்கள் - அமைதி என்பது வலி நிறைந்த ஏமாற்றமாகிவிட்டது.

முற்றிலும் சிங்கள - பவுத்தர்களைக் கொண்ட சிறீலங்கா இராணுவத்தின் கீழ் நாளாந்தம் தாம்பட்ட அவமானத்தைப் பல பெண்கள் நினைவு கூர்ந்தார்கள். அதற்காக அவர்கள் நினைப்பில் பேசுவதற்குப் பாதுகாப்பான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்.

ஒரு மாதத்தில் இருமுறை இராணுவத்தினர் வீடுகளுக்கு வந்து படம் பிடிப்பதாக அந்தப் பெண்கள் சொன்னார்கள். ஒரு சிறிய சந்திப்புக்கும் - அருகிலுள்ள காட்டில் விறகு வெட்ட என்றாலும் - இராணுவத்திடம் அனுமதி தேவைப்படுகிறது.

"எனது வீட்டில் எனது பிள்ளையின் பிறந்த நாள் விழா நடத்துவதென்றாலும் இராணுவத்திடம் அனுமதி பெற வேண்டியுள்ளது" எனக் கண்டாவெளியைச் சேர்ந்த 46 அகவை நிறைந்த தாயார் சொன்னார். பெயர்களை வெளியிட்டால் அது தங்களது உயிருக்கு ஆபத்தென்பதால் மற்றவர்களைப் போல் பெயர் குறிப்பிடப்பட மாட்டாது என்ற நிபந்தனையில் பேசினார். "அவர்கள் (இராணுவம்) இல்லை என்று மறுத்தால் எனது 8 அகவை நிறைந்த மகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்தைக் கொண்டாட முடியாது."

பெண்கள் எப்படி அரசாங்கத்தை ஆதரித்தும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு அரசைக் கண்டிப்பவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் அல்லது ஏமாற்றி அழைத்து வரப்படுகிறார்கள் என்பதை விபரித்தார்கள். கிராம மக்கள் பிரார்த்தனையின் போது தேவாலயத்தில் ஒரு மெழுகுவர்த்தியைத் தானும் கொளுத்த இராணுவம் அனுமதிப்பதில்லை. காரணம் அருகில் புதைப்பட்டிருக்கும் இறந்த தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளுக்கு மதிப்பளிக்க முனைகிறார்கள் என இராணுவம் அய்யப்படுகிறது.

இன்னொரு பெண், இராணுவத்தினர் தங்கள் அடுக்களைக்குள் நுழைந்து ஒரு கோப்பை கோப்பி தருமாறு கேட்பதையிட்டு முறைப்பட்டார். "எங்களுக்குப் பேய்ப் பயம்" என்கிறார் 6 அகவை குழந்தையின் தாயார். "அதற்கு மேலாக எனக்கு விரக்தியாக இருக்கிறது. எனக்குக் கோபமாக இருக்கிறது. இந்த உணர்வை என்னால் வார்த்தையில் விபரிக்க முடியாது."

'இராணுவம் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது'

சிறீலங்காவின் இந்துக்கள் மற்றும் தமிழ்க் கிறித்தவர்களது உரிமைகளைப் பாதுகாக்கவே தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை 1976 ஆம் ஆண்டு தொடக்கினார்கள். அவர்கள் சிறீலங்காவின் வட கிழக்குப் பகுதியில் பெருமளவு நிலத்தைக் கைப்பற்றி இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டார்கள். வன்முறை மற்றும் பயம் மூலம் சிறார்களைப் படையில் கட்டாயப்படுத்திச் சேர்த்தார்கள். எதிராளிகளைக் கொன்றார்கள். பயங்கரவாதத்தின் ஒரு கூறாகத் தற்கொலைக் குண்டுதாரிகளைப் பயன்படுத்தினார்கள்.

அய்க்கிய நாடுகள் அவை உள்நாட்டுப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த கொலைகள் பற்றிய விசாரணையைக் கோரியுள்ளது. அய்க்கிய நாடுகள் விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயமாகப் பயன்படுத்தினார்கள் எனக் குற்றம்சாட்டுகிறது. அதே போல் இராணுவம் கண்மூடித்தனமான செல் தாக்குதல் நடத்தியதையும் பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைப்பதைத் தடுத்ததாகவும் குற்றம் சாட்டுகிறது. அண்ணளவாக 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இன்று, சண்டை பிடிக்கத் தேவையில்லாத நிலையில், இராணுவத்தினர் இந்துக் கோயில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் தொடக்கப் பள்ளிகளில் நடைபெறும் வைபவங்களுக்கும் போகிறார்கள். "நாட்டின் வடபகுதியில் தோட்டம் மற்றும் காய்கறி வின்பனை, கோட்டல்களை நடத்தல், உணவகங்களை நடத்தல், ஏன் முடிதிருத்தும் கடைகளை நடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார்கள். பொருளியல் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்."
(http://www.washingtonpost.com/world/asia_pacific/abuse-by-sri-lankas-army-rubs-salt-in-wounds-of-war-tamil-women-say/2012/07/06/gJQADaSiRW_story.html)

தமிழாக்கம் நக்கீரன்(கனடா)

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
மரணத்தின் அழைப்பிதழ் - பூநகரான்
[Friday, 2013-05-24 20:56:19]

'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரன்மனையை விட்டு வெளியேறி அதிசய மெய்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெய்ஞானிகளும் கூட இதே நிகழ்சசிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள் . ஆனால் யாரும் சரியாகப் பார்க்கவில்லை. கருத்தூன்றி அவதானிக்கவில்லை. துறை சார்ந்த தேடலுடன் அவர்களுடைய பார்வைகள் ஆராயவில்லை எனபதே உண்மை. அவ்வாறே எத்தனை இறுதிச் சடங்குகளிற்கு போனாலும் எங்களது துள்ளல்களை நாங்கள் எள்ளளவும் குறைக்காத பிறவிகளாகவே உள்ளோம்.

கார்பரேட் உலகில் தமிழினம் எதிர்கொள்ளும் சவால்கள்: - இதயச்சந்திரன்
[Tuesday, 2013-05-21 19:47:23]

கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சிகுன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப்பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது. நிதியியல் முதலாளித்துவ முறைமையும், கட்டமைப்பு ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் கார்பரேட் முதலாளித்துவமும் இதனால் பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றது.

முள்ளிவாய்க்காலின் மூச்சாகி வலியை விஞ்சி எழும் வலிமை: - பனங்காட்டன்
[Thursday, 2013-05-16 21:29:38]

நெஞ்சுக்குள் குவிந்திருக்கும் வலியை விஞ்சியதாக புலம்பெயர் தமிழர் சமூகம் இன்று வலிமை பெற்று உயிர்ப்புடன் செயற்படுவதால், சர்வதேசத்தின் கண்களை கொஞ்சமாவது திறக்கக்கூடியதாக இருந்தது என்பதே நிதர்சனம்.

நாங்கள் நடக்கிற பாதை தந்தை செல்வாவின் பாதை என்று சொல்லிலும் செய்கையிலும் காட்டினால் சர்வதேசம் நாங்கள் சொல்லுவதை நம்பும்!
[Wednesday, 2013-05-15 20:46:54]

தமிழரசுக்கட்சியின் தொடக்கநரும் தமிழ்மக்களின் தந்தை எனவும் வாஞ்சையோடு போற்றப்படும் தந்தை செல்வாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் விழா தமிழரசுக் கட்சியால் அனுட்டிக்கப்பட்டது. வந்தாறுமூலை சித்திவிநாயகர் ஆலய முன்றிலில் நடந்த இந்த விழாவுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி. துரைராஜசிங்கம் தலைமை வகித்தார்.

முள்ளிவாய்க்கால் ஒரு தொடர்கதை
[Sunday, 2013-05-12 18:31:15]

முள்ளிவாய்க்கால் அது தமிழினத்தால் மறக்க முடியாத துயரங்களும் துன்பங்களும் நிகழ்ந்தேறிய நாள்.அது உரிமைக்காக போராட ஆயுதம் ஏந்தியவர்களின் உடைகள் உருவப்பட்ட நாள்.கழுத்தில் நகைகள் மட்டும் மல்ல நாங்கள் குப்பிகளும் அணிவோம் என இந்த உலகுக்கு எடுத்து காட்டிய வீரத்தமிழிச்சிகளின் உடல்கள் சிதைக்கப்ட்டநாள்.பிள்ளை தந்தையை இழந்த நாள்,தாய் பிள்ளையை இழந்த நாள்,மனைவி கணவனை இழந்த நாள்.மொத்தமாக தமிழன் தன் மண்ணை முற்றாக இழந்த நாள்.

தேர்தல்களில் விற்று வாங்க தேசியம் நுகர்வுப் பொருளல்ல - பனங்காட்டன்
[Saturday, 2013-05-11 11:28:07]

தேர்தல்கள் வரும், போகும். தேர்தல்களில் விற்கவும் வாங்கவும் தமிழ் தேசியம் ஒரு நுகர்வுப்பொருள் அல்ல என்பதை கூட்டமைப்பின் தலைமை புரிந்து நிதானமாக செயற்பட வேண்டும். சர்வதேச அரங்கில் இப்பொழுது அதிகளவில் பேசப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம், தமிழினப் படுகொலை, பொறுப்புக் கூறுல் மறுப்பு என்று இதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.

தமிழ்நாட்டில் வேலைக்காரியோடு பேசுமொழி எந்த மொழி? - நக்கீரன்
[Monday, 2013-05-06 21:30:34]

புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட நாள்களாக பட்டிமன்றத்துக்கு உரிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
இதற்குக் காரணம் இருக்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் கூலித் தொழிலாளர்களாக வேற்று நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் தங்களது தாய்மொழியான தமிழை இழந்து தங்கள் அடையாளத்தைத் தொலைத்து விட்டார்கள். அவர்களது பெயர்கள் கூட சிதைந்துவிட்டன. இந்த நிலைமை பியூஜி, மொறேஷியஸ், தென் ஆபிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், மடகஸ்கார், றீயூனியன் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. பியூஜி தீவில் வாழும் தமிழர்கள் தாய்மொழி தமிழுக்குப் பதில் இந்தி படிக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள். இந்த முயற்சியில் இந்திய நடுவண் அரசு மும்மரமாக ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? - இதயச்சந்திரன்
[Sunday, 2013-05-05 21:07:06]

ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் , 80 களின் முற்பகுதியைவிட அக்டோபர் 1997 இலிருந்து பார்ப்பது பொருத்தமாகவிருக்கும். 97 இல், வெளிநாட்டு பயங்கவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடை செய்த ஒருதுருவ நாயகன் அமெரிக்கா ( உலக நாயகன் என்று இப்போது சொல்ல முடியாது), 2001 நவம்பரில் பூகோளப் பயங்கரவாதிகள் என்கிற பெயரை அவர்களுக்குச் சூட்டியது. அது மட்டுமல்லாது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் வெண்புறா போன்ற தொண்டர் நிறுவனங்களைத் தடை செய்தது. அன்றைய அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரிச்சார்ட் ஆமிரெஜ் தொடக்கம் இன்றைய மேற்குலக இராஜதந்திர கருத்துருவாக்கிகளின் மையமான அனைத்துலக நெருக்கடிக்குழு வரை, 'ஆயுதப்போராட்டத்தைக் கைவிடுங்கள்',' வெளியக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை மறந்திடுங்கள் 'என்றுதான் விடுதலைப்புலிகளின் காதுகளில் ஓதிக்கொண்டிருந்தார்கள்.

பூநகரான் பார்வையில் - தமிழரின் நம்பிக்கை நட்சத்திரம் ராதிகா சிற்சபைஈசனுடன் ஒரு உரையாடல்:
[Saturday, 2013-05-04 07:31:23]

"ராதிகா" - கனடாப் புலம் பெயர் தமிழரின் சமகால நம்பிக்கை நம்பிக்கை நட்சத்திரம் அரசியல் அங்கீகாரம். குறிப்பாக தலைவர் பிரபாகரனின் வன்னி யுகத்தின் முள்ளிவாய்க்கால் முடிவிற்கு பின், மேற்குலகில் மின்னும் ஜனநாயக விடிவெள்ளி ராதிகா. புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திலிருந்து வெளிநாடொன்றின் , தேசியப் பாராளுமன்றத்திற்கு தெரிவான முதலாவது ஈழத் தமிழ் நங்கை நம் தங்கை ராதிகா.

கூட்டைக் கலைப்பது சுலபம் அதனைக் கட்டுவது சிரமம் - பனங்காட்டன்
[Friday, 2013-05-03 22:33:31]

கூட்டைக் கட்டியவர்களுக்குத்தான் அதன் அருமை பெருமை தெரியும். அவர்களுக்குத்தான் அதன் அத்தியவசியமும் புரியும். அதன் ஆழமும் அகலமும் அறியாமல் வெறும் பதவிகளுக்காக அதற்குள் குடியேறியவர்களுக்கு அது வெறும் கூடாகத் தெரிவதால்தான் இன்னொரு கூட்டைக் கட்டலாமென நினைக்கிறார்கள் போலும்.

Suresh-remax-2013-01-01
Ramans2011
RoyaShades-l2011(04-12-11)
Canada Kanthasamy Kovil
NIRO-DANCE-100213
TamilsGuid-191012-2013
INNSYS-20120930
TDE_Computers2011
Mahesan supramaniyam 031109
AJRwindows22.05.13
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com