Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 20, 2013 [GMT]

  • Welcome
  • Welcome
மக்களின் ஆணையைப் பெறுமா சர்வதேசப் பிரகடனம்? - இதயச்சந்திரன்
[Saturday, 2012-07-07 18:00:43]

கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக்கடுமையான வீழ்ச்சியை இந்த வாரம் இலங்கையின் பங்குச் சந்தை எதிர்கொண்டுள்ளது. 2011 நவம்பரிலிருந்து இற்றைவரை 17.5 சதவீதம் தனது ரூபாய் நாணயத்தின் பெறுமதியை இலங்கை இழந்துள்ளது. இறக்குமதியாகும் அத்தியாவசிய எரிபொருளான மசகு எண்ணெய்க்கு செலுத்த வேண்டிய டொலர் நாணயப் பற்றாக்குறையால், அனைத்துலக நாணய நிதியத்திடமிருந்து 500 மில்லியன் டொலர்களை கடன் வாங்க வேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது பி.பீ.ஜெயசுந்தராவின் திறைசேரி.


  

மகிந்தர் பெருமைப்டும் 7.2 சதவீத பொருளாதார வளர்ச்சி வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கொண்டு வர இயலாத நிலையில் ஊடகங்களில் சொல்லப்படும் சுயதம்பட்டங்கள் போலியானவை என்பதை தெரிந்து கொள்வது சுலபம்.

அத்தியாவசியப் பொருட்களின் செயற்கையான விலை அதிகரிப்பினால் நாட்டின் பணவீக்கம் கடந்த ஜுன் மாதத்தில் என்றுமில்லாதவாறு உச்சத்தைத் தொட்டுள்ளது. பணவீக்கத்திற்கு ஏற்றவாறு தமது சம்பளத்தை உயர்த்துமாறு தொழிலாளர்கள் போராட ஆரம்பித்துள்ளனர். தேசிய இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட முடியாத நிலைபோன்று மத்திய வங்கிக்கும் திறைசேரிக்குமிடையே முறுகல் நிலை அதிகரிப்பதைக் காணலாம்.

வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்க முடியாத அளவிற்கு அதன் திரவப் பணம் வற்றிச் செல்கிறது. அதனை நிவர்த்தி செய்ய ரூபாய் நாணயத்தை மேலதிகமாக அச்சடித்தால் பணவீக்கம் அதிகரிப்பதை தடுக்க முடியாமல் போய்விடும். இப்பிரச்சினையானது இலங்கையில் மட்டுமல்லாது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் விரிவடைவதைக் காணலாம். வங்கிகளுக்கிடையே நிகழும் பரிவர்த்தனையில் வட்டி வீதத்தில் ஏற்பட்ட லைபோர் [LIBOR] குளறுபடிகளால், பிரித்தானியாவின் மிகப்பெரிய வங்கியான பார்க்ளேயில் [Barclays] பெரும் நெருக்கடி ஏற்பட்டு அதன் தலைவர் பொப் டயமன்ட் பதவி விலகியுள்ளார்.

நிதிநெறியாள்கை அதிகார சபையின் கவனம், இவ்விவகாரத்தில் குவிவதால், மேலும் பல வங்கிகள் சிக்கல்களை எதிர்கொள்ளப் போவதைக் காணலாம்.

இலங்கையிலும் இத்தகைய நாணயப் பரிவர்த்தனை குளறுபடிகள் வெளியில் பெரிதாகக் தெரியாதளவிற்கு உருவாகிக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கிறது.

ஆடை மற்றும் தேயிலை ஏற்றுமதித் துறையில் மேலதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென்று பல தென்னிலங்கை பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டினாலும், இலங்கையின் பொருளாதாரத்தை சுற்றுலாப் பயணத்துறையை மையமாகக் கொண்டு உருவாக்க வேண்டுமென மகிந்த சிந்தனை அடம்பிடிப்பதைக் கவனிக்கலாம்.

நுவரெலியா உட்பட நாடெங்கும் உள்ளூர்; விமான நிலையங்களை நிர்மாணிப்பதும், சீன, இந்திய முதலீட்டில் அதிவேக விரைவுப் பாதைகளை அமைப்பதும், எயர்லங்கா, மிகின் லங்கா விமானச் சேவைகள் நட்டத்தில் இயங்கினாலும் மேலதிக பயணிகள் விமானங்களை வாடகைக்கு வாங்குவதும், மகிந்தருக்கு உல்லாசப் பயணத்துறைப் பொருளாதாரத்தில் இருக்கும் அதீத நம்பிக்கையையும், ஈடுபாட்டையும் காட்டுகிறது.

இதேவேளை உல்லாசப் பயணத்துறையில் முதலீடு செய்வதற்கு பல ஆசிய நாடுகள் முண்டியடிப்பதைக் கவனிக்கலாம். அத்தோடு மேற்குலகு உட்பட பல வல்லரசுகள், திருமலைத் துறைமுகத்தில் கனரக தொழிற்சாலைகளை நிர்மாணிக்க கூட்டாகச் செயற்படும் செய்தியையும் பார்க்கலாம்.

~நல்லிணக்கம்~ என்கிற பாதை ஊடாக தமது முதலீடுகளை இலங்கைக்குள் கொண்டு செல்ல விரும்பும் அமெரிக்காவும், இந்தியாவும் வௌ;வேறான நகர்வுகளை மேற்கொள்கின்றன.

ஊடக அடக்குமறையைக் கண்டித்து அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் அறிக்கை விடும் அதேவேளை முதலீடுகள் குறித்தான இணக்கப்பாட்டு அரசியலை முன்னகர்த்த அவை தவறவில்லை என்கிற செய்தியும் கவனிக்கத்தக்கது.

இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் ஐP.எஸ்.பி. சலுகையை மீளாய்வு செய்வதற்கு அதன் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களிற்கான வர்த்தகப் பிரதிநிதி மைக்கல் டெலேனி, கடந்த மாதம் 13ஆம் திகதி இலங்கை சென்றிருந்தார்;.

இம்மீளாய்வின் வெளிப்பாடாக, இச்சலுகையானது எதுவித மாற்றமுமின்றத் தொடரும் என்கிற வகையில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி றொன்கேர்க் அவர்கள் 29ஆம் திகதியன்று தெரிவித்த செய்தியினை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிச்சாத் பதியுதீன் வரவேற்றிருந்தார்.

ஆகவே இச்சலுகை நீடிக்குமா அல்லது நிறுத்தப்படுமாவென்று பதட்டத்தில் இருந்த அரசிற்கு, றொன் கேர்க்கின் ஆறுதல் செய்தி மகிழ்வைக் கொடுத்திருக்கும்.

இவை தவிர பியகமவில் அமைந்திருக்கும் கொக்ககோலா தொழிற்சாலைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட தூதுவர் பற்றீசியா ஏ.புரெனிஸ் பசுமைத்தரம் காண விரும்பியதாகவும் செய்திகள் வந்தன. ஆகவே அமெரிக்க நகர்வுகள் யாவும், சீனாவின் முதலீட்டு மற்றும் கேந்திர நலன்களை இலங்கையில் எவ்வாறு மட்டுப்படுத்துவது என்கிற வகையில் அமைவதைக் காணலாம்.

இந்நிலையில் மனித உரிமை மீறல் என்கிற சர்வதேசப்பிரம்பை உயர்த்தியவாறு, தனது நலனைச் சாதிக்க முனையும் அதேவேளை சிங்களத்தோடு குறைந்தபட்ச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நல்லிணக்கமொன்றினை எவ்வாறு ஏற்படுத்தலாமென்கிற அறிவுரைகளை கூட்டமைப்பிற்கும் உலகத் தமிழர் பேரவைக்கும் கூற அமெரிக்கா முற்படுவது போல் தெரிகிறது.

தென்னாபிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்க திட்டங்களையும் அதன் அனுபவங்களையும் இலங்கைப் பிரச்சினையோடு பொருத்திப் பார்த்து, ஒரு விதமான சமரசத்தினை ஏற்படுத்தி விடலாமென சிலர் கற்பிதம் கொள்கிறார்கள்.

ஆனாலும் சீனா என்கிற ஆசியாவின் பெருஞ்சக்தியை தனது நிரந்தர நண்பனாக வைத்திருக்கும் பௌத்த சிங்களப் பேரினவாதம் காணி, காவல்துறை அதிகாரம் கொண்;ட மாகாணசபைத் தீர்வினைக் கூட தமிழ்பேசும் மக்களுக்கு வழங்கப்போவதில்லை என்பதை அவர்களின் அண்மைக்கால வாக்குமூலங்கள் உணர்த்துகின்றன.

இதில் வேடிக்கை என்னவென்றால், 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள காணி, காவல்துறை மற்றும் நிதி குறித்தான அதிகாரங்களின் தலைமையாளராக அதனைக் கட்டுப்படுத்தும் சக்தியாக 13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக எல்லாம் வல்ல மகிந்த இராஐபக்சவே இருக்கிறார் என்பதை நல்லிணக்கம் பற்றி பேசும் புலம்பெயர் அமைப்புகளின் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே அமெரிக்காவை விட்டால் வேறு வழியென்ன? என்று அரசியல் மேதாவிகள் போல் கேள்வி எழுப்புபவர்கள் நிலத்திற்காக இன்னும் போராடும் தாயக மக்களிடமிருந்து இக்கேள்விக்கான பதிலைப் பெற்றுக் கொள்ளலாம்.

அண்மையில் நிகழ்ந்த தொலைக்காட்சி நேர்காணலொன்றில் உலகத் தமிழர் பேரவையானது, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்கள் பேரவை மற்றும் கூட்டமைப்போடு பேசிக் கொண்டிருப்பதாகவும், அவர்களோடு பொதுக் கருத்தொன்று எட்டப்பட்டவுடன் சர்வதேச பிரகடனம் ஒன்று விரைவில் வெளியிடப்படுமென்று இமானுவல் அடிகளார் கூறியிருந்தார்.

இருப்பினும், முதற்படியாக அதிகாரமற்ற மாகாணசபையை ஏற்றுக்கொண்டு அமெரிக்க-இந்திய உதவியோடு மேலும் பல படிகளில் ஏறிச் செல்லலாம் என்கிற கதையாடல்களை விடுத்து, தாயக தமிழ் பேசும் மக்கள், தமிழ் நாட்டில் வாழும் இலட்சக் கணக்கான ஈழ ஏதிலிகள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் ஈழமக்கள் அனைவரையும் இணைத்து அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வு என்ன என்பதற்கான பொதுஐன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமென்கிற சர்வதேச பிரகடனத்தை முன் வைத்தால் சிறப்பாக இருக்கும்.

புலம்பெயர் நாடுகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பில், மக்கள் அளித்த தீர்ப்பினை உலகத் தமிழர் பேரவை கருத்தில் கொள்ள வேண்டும். புலம் பெயர் அமைப்புக்கள் முன் வைக்கும் எந்த அரசியல் தீர்வும் மக்கள் ஆணையைப் பெற்றிருக்க வேண்டும் என்பதனை மறுதலிக்காமல் இவ்வமைப்புகள் செயற்படுதல் நன்று.

-இதயச்சந்திரன்-

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
நாங்கள் நடக்கிற பாதை தந்தை செல்வாவின் பாதை என்று சொல்லிலும் செய்கையிலும் காட்டினால் சர்வதேசம் நாங்கள் சொல்லுவதை நம்பும்!
[Wednesday, 2013-05-15 20:46:54]

தமிழரசுக்கட்சியின் தொடக்கநரும் தமிழ்மக்களின் தந்தை எனவும் வாஞ்சையோடு போற்றப்படும் தந்தை செல்வாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் விழா தமிழரசுக் கட்சியால் அனுட்டிக்கப்பட்டது. வந்தாறுமூலை சித்திவிநாயகர் ஆலய முன்றிலில் நடந்த இந்த விழாவுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி. துரைராஜசிங்கம் தலைமை வகித்தார்.

முள்ளிவாய்க்கால் ஒரு தொடர்கதை
[Sunday, 2013-05-12 18:31:15]

முள்ளிவாய்க்கால் அது தமிழினத்தால் மறக்க முடியாத துயரங்களும் துன்பங்களும் நிகழ்ந்தேறிய நாள்.அது உரிமைக்காக போராட ஆயுதம் ஏந்தியவர்களின் உடைகள் உருவப்பட்ட நாள்.கழுத்தில் நகைகள் மட்டும் மல்ல நாங்கள் குப்பிகளும் அணிவோம் என இந்த உலகுக்கு எடுத்து காட்டிய வீரத்தமிழிச்சிகளின் உடல்கள் சிதைக்கப்ட்டநாள்.பிள்ளை தந்தையை இழந்த நாள்,தாய் பிள்ளையை இழந்த நாள்,மனைவி கணவனை இழந்த நாள்.மொத்தமாக தமிழன் தன் மண்ணை முற்றாக இழந்த நாள்.

தேர்தல்களில் விற்று வாங்க தேசியம் நுகர்வுப் பொருளல்ல - பனங்காட்டன்
[Saturday, 2013-05-11 11:28:07]

தேர்தல்கள் வரும், போகும். தேர்தல்களில் விற்கவும் வாங்கவும் தமிழ் தேசியம் ஒரு நுகர்வுப்பொருள் அல்ல என்பதை கூட்டமைப்பின் தலைமை புரிந்து நிதானமாக செயற்பட வேண்டும். சர்வதேச அரங்கில் இப்பொழுது அதிகளவில் பேசப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம், தமிழினப் படுகொலை, பொறுப்புக் கூறுல் மறுப்பு என்று இதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.

தமிழ்நாட்டில் வேலைக்காரியோடு பேசுமொழி எந்த மொழி? - நக்கீரன்
[Monday, 2013-05-06 21:30:34]

புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட நாள்களாக பட்டிமன்றத்துக்கு உரிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
இதற்குக் காரணம் இருக்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் கூலித் தொழிலாளர்களாக வேற்று நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் தங்களது தாய்மொழியான தமிழை இழந்து தங்கள் அடையாளத்தைத் தொலைத்து விட்டார்கள். அவர்களது பெயர்கள் கூட சிதைந்துவிட்டன. இந்த நிலைமை பியூஜி, மொறேஷியஸ், தென் ஆபிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், மடகஸ்கார், றீயூனியன் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. பியூஜி தீவில் வாழும் தமிழர்கள் தாய்மொழி தமிழுக்குப் பதில் இந்தி படிக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள். இந்த முயற்சியில் இந்திய நடுவண் அரசு மும்மரமாக ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? - இதயச்சந்திரன்
[Sunday, 2013-05-05 21:07:06]

ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் , 80 களின் முற்பகுதியைவிட அக்டோபர் 1997 இலிருந்து பார்ப்பது பொருத்தமாகவிருக்கும். 97 இல், வெளிநாட்டு பயங்கவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடை செய்த ஒருதுருவ நாயகன் அமெரிக்கா ( உலக நாயகன் என்று இப்போது சொல்ல முடியாது), 2001 நவம்பரில் பூகோளப் பயங்கரவாதிகள் என்கிற பெயரை அவர்களுக்குச் சூட்டியது. அது மட்டுமல்லாது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் வெண்புறா போன்ற தொண்டர் நிறுவனங்களைத் தடை செய்தது. அன்றைய அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரிச்சார்ட் ஆமிரெஜ் தொடக்கம் இன்றைய மேற்குலக இராஜதந்திர கருத்துருவாக்கிகளின் மையமான அனைத்துலக நெருக்கடிக்குழு வரை, 'ஆயுதப்போராட்டத்தைக் கைவிடுங்கள்',' வெளியக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை மறந்திடுங்கள் 'என்றுதான் விடுதலைப்புலிகளின் காதுகளில் ஓதிக்கொண்டிருந்தார்கள்.

பூநகரான் பார்வையில் - தமிழரின் நம்பிக்கை நட்சத்திரம் ராதிகா சிற்சபைஈசனுடன் ஒரு உரையாடல்:
[Saturday, 2013-05-04 07:31:23]

"ராதிகா" - கனடாப் புலம் பெயர் தமிழரின் சமகால நம்பிக்கை நம்பிக்கை நட்சத்திரம் அரசியல் அங்கீகாரம். குறிப்பாக தலைவர் பிரபாகரனின் வன்னி யுகத்தின் முள்ளிவாய்க்கால் முடிவிற்கு பின், மேற்குலகில் மின்னும் ஜனநாயக விடிவெள்ளி ராதிகா. புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திலிருந்து வெளிநாடொன்றின் , தேசியப் பாராளுமன்றத்திற்கு தெரிவான முதலாவது ஈழத் தமிழ் நங்கை நம் தங்கை ராதிகா.

கூட்டைக் கலைப்பது சுலபம் அதனைக் கட்டுவது சிரமம் - பனங்காட்டன்
[Friday, 2013-05-03 22:33:31]

கூட்டைக் கட்டியவர்களுக்குத்தான் அதன் அருமை பெருமை தெரியும். அவர்களுக்குத்தான் அதன் அத்தியவசியமும் புரியும். அதன் ஆழமும் அகலமும் அறியாமல் வெறும் பதவிகளுக்காக அதற்குள் குடியேறியவர்களுக்கு அது வெறும் கூடாகத் தெரிவதால்தான் இன்னொரு கூட்டைக் கட்டலாமென நினைக்கிறார்கள் போலும்.

வடக்கில் தீவிரமடையும் நில அபகரிப்பு! - இதயச்சந்திரன்
[Tuesday, 2013-04-30 23:28:47]

மே 2009 இற்குப் பின்னர் வட -கிழக்கிலுள்ள 7000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் படையினர் நிலை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. ஏறத்தாள 2500 சைவக் கோவில்களும் 400 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும் அழிக்கப்பட்ட அதேவேளை ,அவற்றை மறுபடியும் நிர்மாணிப்பதற்கு படைத்தரப்பு அனுமதியளிக்க மறுப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆனாலும் வடக்கில் வீசும் வசந்தம் ,புத்தர் சிலைகளையும், பௌத்த கோபுரங்களையும் அரசின் அனுமதியோடு அழைத்து வருகிறது. கனகராயன் குளத்தில் பௌத்த தூபிகளும், கிளிநொச்சியில் தியானத்தில் ஆழ்ந்துள்ள பிரமாண்டமான புத்தர் சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் மகாதோட்ட ரஜ மகா விகாரையும் தோன்றியுள்ளன. மூதூரில் காளிக்கும் இடமில்லை. கோணேசர் கோட்டை வாசலில் காவலுக்கு இருந்த பிள்ளையாரை கடலில் வீசிய பழைய நினைவுகள்தான் மீண்டெழுந்து வருகின்றது.

எல்லைகளும் சுதந்திமும் கொசோவோ மற்றும் தென் சூடான் இரண்டினதும் பட்டறிவு: - எச். காஸ்நோபிஸ்
[Saturday, 2013-04-27 22:01:41]

(கொசோவோ மற்றும் தென் சூடான் இரண்டினது சுதந்திரம் குடியேற்ற நாடுகள் வரைந்த எல்லைக் கோடுகள் புதினதத்தன்மை வாய்ந்தவை அல்லவென்பதைக் காட்டுகின்றது. இது தமிழீழத்துக்கும் பொருந்தும். சிங்களத்துக்கும் தமிழீழகத்துக்கும் இடையில் இருந்த எல்லைக்கோடுகளைப் பிரித்தானிய ஒருதலைப் பட்சமாக அழித்ததே இன்றைய இனச் சிக்கலுக்கும் அமைதியின்மைக்கும் காரணியாகும். கொசோவோ மற்றும் தென் சூடானில் நடைபெற்றது போல் தமிழ்மக்களுக்கும் சுயநிருணய அடிப்படையின் கீழ் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த அய்யன்னா முன்வர வேண்டும்)

நிலத்தைப் பறிகொடுத்த பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வு யாருக்கு? - பனங்காட்டன்
[Friday, 2013-04-26 22:40:06]

ஒரு வேலிக்காகவும் ஓர் அங்குல காணிக்காவும் எத்தனை குடும்பச் சண்டைகளும் எத்தனை கொலைகளும் நடைபெற்றன என்பதை ஒரு தடவை எண்ணிப் பார்க்கையில், இப்போது ஒட்டுமொத்த அடிப்படையில் பல்லாயிரம் ஏக்கர் காணிகள் பறிபோகும்போது சமூகம் ஒட்டுமொத்தமாக என்ன செய்கின்றது என்ற கேள்வி எழுகின்றது.

TDE_Computers2011
RoyaShades-l2011(04-12-11)
Ramans2011
TamilsGuid-191012-2013
Suresh-remax-2013-01-01
NIRO-DANCE-100213
Canada Kanthasamy Kovil
INNSYS-20120930
Mahesan supramaniyam 031109
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com