Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 19, 2013 [GMT]

  • Welcome
  • Welcome
பலமடையும் அமெரிக்க - இலங்கை வர்த்தக உறவுகள்: -இதயச்சந்திரன்
[Saturday, 2012-06-16 12:14:38]

இலங்கை உடனான வர்த்தகம், அடுத்த வருடத்தில் மூன்று மடங்காக அதிகரிக்குமென்கிறார் கொழும்பிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் வர்த்தகபிரிவின் உயரதிகாரி மைக்கல்.ஜே.டெலானி. ஜி.எஸ்.பி [GSP ] வரிச்சலுகை நீடிப்பு குறித்து மீளாய்வு செய்வதற்காக இவரின் விஜயம் அமைந்துள்ளது.


  

கடந்த வருடம் இவ் வரிச்சலுகை ஊடாக அமெரிக்கச் சந்தைக்கான ஆடை ஏற்றுமதி 1590 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.

வேண்டத்தகாத மனித உரிமை விவாகரம் பற்றிப் பேசி , ஐரோப்பா ஒன்றியமானது ஜி.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தியது போன்று ,அமெரிக்காவும் நிறுத்திவிடுமோவென இலங்கை அரசு அச்சமடைந்திருந்த நிலையில், டெலானியின் நம்பிக்கைதரும் பேச்சு அரசுக்கு ஆறுதல் அளித்திருக்கும்.

வழமை போன்று, அமெரிக்க தொழில் சங்கங்கள் ,இலங்கையிலுள்ள தொழிலாளர் சட்டம் பற்றி கவலை கொள்கின்றன என்கிற தகவலையும் அவர் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகை இழக்கப்பட்டதால், சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள பல ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அமெரிக்காவும் இதை நிறுத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தொழில் வாய்ப்பை இழப்பர்.

ஆகவே போர்க்குற்றச்சாட்டையும், ஏற்றுமதி வர்த்தகத்தையும் தனது துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தும் அமெரிக்கா, மார்ச்சில் மேற்கொண்ட ஐ.நா.தீர்மானத்தின் பின்னர் சிறிதளவு நெகிழ்வுப் போக்கினை இலங்கை விவகாரத்தில் மேற்கொள்வதைக் காணலாம்.

இலங்கையை தனது பிராந்திய நட்பு வட்டத்துள் கொண்டுவர ,சகல விதமான அழுத்தங்களையும் பிரயோகிக்குமே தவிர, ஈரானில் மேற்கொள்வது போன்று, கடும்போக்கு தடை நகர்வினை அமெரிக்கா கடைப் பிடிக்காது.

உலகளாவிய ரீதியில் நிலைகொண்டுள்ள தமது படைபலத்தின் 60 சதவீதமானவற்றை ஆசியா-பசிபிக் பிராந்தியத்தை நோக்கி நகர்த்தப்போவதாக அண்மையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியிருந்தார். அதனை அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லியோன் பனேட்டாவும் சங்கரிலா மாநாட்டில் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், சீனாவின் கடலாதிக்கம், இந்துசமுத்திரப் பிராந்தியம் வரை விரிவடையாமல் தடுக்கும் வகையில் தனது வியூகங்களை அமைக்கும் பணியில் அமெரிக்கா ஈடுபடுவதை காணலாம். சரத் பொன்சேகாவின் ஊடாக ஆட்சி மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தமுடியாவிட்டால், போர்க்குற்ற அழுத்தங்களினூடாக இணக்கப்பாட்டினை ஏற்படுத்தலாமென்கிற அடுத்த நகர்வின் முதற்படியாக மைக்கல் ஜே.டெலானியின் விஜயம் அமைவதைக் காணலாம்.

அவமானகரமான நாடுகள் பட்டியலில் இருந்து இலங்கையை பாண் கி மூன் நீக்கிய விவகாரத்தின் பின்னணியில் மேற்குலகின் வகிபாகம் நிற்சயம் இருக்கும். அத்தோடு ஈரானோடு எண்ணெய் வர்த்தகம் செய்யலாம் என்கிற 'சலுகை' அறிவிப்பும், இலங்கை குறித்தான அமெரிக்காவின் மென்போக்கு நகர்வினை உறுதிப்படுத்துகின்றன.

இவைதவிர, திருமலைத் துறைமுகத்தைச் சூழவுள்ள பகுதியில், சிறிலங்கா கேற்வே இன்டஸ் ரீஸ் பிரைவேட் லிமிடட் என்கிற நிறுவனம் ,கனரக கைத்தொழில் மையமொன்றினை நிறுவ, 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்கிறது. இந்த வணிகக் கூட்டமைப்பில் பிரேசில்,அவுஸ்திரேலியா , ஜப்பான், சீனா இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் பல்தேசிய நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன.

போரில் இணைந்த கூட்டு, முதலீட்டிலும் இணைகின்றன. இதற்கான ஒப்பந்தம் நேற்று [வியாழன்] கைச்சாத்திடப்பட்டது.

ஆகவே வல்லரசாளர்களின் நலன் வேறு பாதையில் இருக்க, சில புலம் பெயர் அமைப்புக்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மேற்குலகின் ஆதரவோடு சுயநிர்ணய உரிமையை வென்று விடலாமென காத்திருக்கின்றன.

நவதாராண்மைவாத உலகமயமாக்களில் , சந்தைகளை பங்கிடுதலும், கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த மையங்களை ஆக்கிரமிப்பதுமே முக்கிய இடத்தை பிடிக்கின்றது.

விடுதலைப்புலிகளுக்கும் ,ரணில் அரசுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டவுடன் , இந்தியா செய்த முதல் வேலை, திருமலை சீனன்குடா எண்ணெய் சேமிப்புக் குதங்களை 33 வருடக் குத்தகைக்கு எடுத்தது. போர் முடிவடைந்ததும் இவர்கள் ஓடிவருவது புதிய வர்த்தக மற்றும் உட்கட்டுமான நிர்மாண ஒப்பந்தங்களை பெறுவதற்கே.

யாழ்.குடாவில் நடைபெறும் இராணுவத்தின் நில ஆக்கிரமிப்புப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை.

அதற்கெதிராக அவர்கள் போராட மாட்டார்கள். ராபர்ட் பிளேக்குடன் பேசினாலும் அது நிறுத்தப்படமாட்டாது. மக்கள்தான் அதற்காகப் போராட வேண்டும். கடிதம் அனுப்புவது, எம்பிமாரை அணுகுவது ,நாடாளுமன்றத்தில் பேசுவது எல்லாம் ஓட்டைக் குடத்தில் நீர் ஊற்றுவது போலாகும்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
வட மகாணசபைத் தேர்தல் மகிந்தாவோடான தமிழ்மக்களின் கணக்கைத் தீர்க்கப் பயன்பட வேண்டும். - நக்கீரன்
[Tuesday, 2013-06-18 10:25:35]

வட மாகாணத் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற நீண்ட நாள் கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. எதிர் வரும் செப்தெம்பர் 07 ஆம் நாளன்று தேர்தல் இடம்பெறும் என்று ஆங்கில ஏடுகளில் செய்தி வந்துள்ளது. போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் வட மாகாண சபைக்கு இதுவரை தேர்தல் நடை பெறவில்லை. கண்ணிவெடி அகற்றுவதில் தாமதம், மக்களை மீள்குடியமர்வு செய்வதில் தடங்கல், வாக்காளர் இடாப்பை நிறைவு செய்வதில் சுணக்கம், அபிவிருத்தித் திட்டங்களை நிறைவு செய்வதற்குக் கால அவகாசம் தேவை என அரசு நொண்டிச் சாட்டுக்களைச் சொல்லிவந்தது. ஆனால் இப்போது தேர்தலைப் பிற்போட அரசிடம் காரணங்கள் இல்லாது போய்விட்டன. அதுதான் உண்மை.

தமிழ் இன உணா்வாளர் மணிவண்ணனுக்கு அவரது இறுதி ஆசைப்படி போர்த்தப்பட்டது தேசியக்கொடியா ! நாம் தமிழர் கொடியா!
[Monday, 2013-06-17 21:53:35]

தமிழின உணர்வாளர், இயக்குனர், நடிகர் எனப் பல பரிமாணங்களை கொண்ட மனிதர்களுள் ஒருவரான மணிவண்ணனின் மறைவு ஒட்டு மொத்த தமிழினத்தையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. மறைந்த தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மணிவண்ணனின் உடல் நேற்று மாலை சென்னை போரூரில் தகனம் செய்யப்பட்டது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகளும் , திரையுலகினரும் , தமிழார்வலர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பல தரப்பட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

13 திருத்தத்துக்கான திருத்தம் தமிழருக்கென ஒரு முண்டம் - பனங்காட்டான
[Sunday, 2013-06-16 22:31:39]

'படைத்தவன் படி அளப்பான்' என்ற நம்பிக்கையில் இந்தியத் தலைமையைச் சந்திக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆயத்தமாகின்றது. இது இந்தியாவின் அழைப்பல்ல. கூட்டமைப்பு கேட்டுப் பெறும் ஒரு வாய்ப்பு.
கடந்த வாரக் கட்டுரையின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் பார்க்கலாம். இது, 'ஓநாய் வருகிறது. ஓநாய் வருகிறது' என்ற கதை போன்ற சமாசாரம்.

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! - நக்கீரன் (பாகம் 2)
[Sunday, 2013-06-16 06:47:29]

அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் இராசரத்தினா, மேத்தானந்தா, சிறில் மத்தியூ, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்கா போன்ற அரசியல்வாதிகள் ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடென்றும் நாடும் மக்களும் ஒன்றென்றும் எழுதியும் பேசியும் வந்தார்கள். இன்றும் பேசி வருகிறார்கள். இவர்களில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஜே.ஆர். ஜெயவர்த்தனா போன்றோர் கிறித்தவர்களாக இருந்து பின்னர் பவுத்தர்களாக மதம் மாறிக் கொண்ட அரசியல் பவுத்தர்களாவர்.

நெல்சன் மண்டேலா - (மரணத்தின் அழைப்பிதழ்-4) பூநகரான்
[Tuesday, 2013-06-11 22:28:59]

இந்த உலகத்தில் இன்று இரண்டு பேர் உலக கவனத்தை ஈர்ப்பவர்களாக உள்ளனர் - ஒருவர் ஒபாமா மற்றவர் நெல்சன் மண்டேலா இருவருமே வெள்ளை இனத்தவராலும் மதிக்கவும் நேசிக்கவும் படுகிறவர்கள்.. ஆம் , நோய் வாய்ப்பட்டுள்ள 94 வயதான நெல்சன் மண்டேலா என்ற மனிதனிற்காக உலகமே கரிசனை காட்டுகிறது . ஒபாமா நோய் வாய்ப்பட்டாலும் இவ்வளவு கரிசனை எழுமா என்பது கேள்விக்குரியது.

மகிந்தரின் கைகளில் மந்திரக்கோல் - இதயச்சந்திரன்
[Tuesday, 2013-06-11 22:25:30]

இலங்கையின் கடன் நிலைமைகள் குறித்து எழுதினால், அச்செய்திகள், தமிழ் மக்களுக்கு போதையூட்டும் விடயமாகச் சிலருக்குத் தென்படுகிறது. சிங்களத்தின் பொருளாதார வீழ்ச்சி, தமிழ் மக்களை போதையூட்டும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிடும் என்பது தவறு. வெளிநாட்டு நேரடி முதலீடுகள் எங்கே குவிக்கப்படுகிறது என்பது குறித்தான தெளிவான செய்திகளை ஈழத்தமிழ் மக்களிடையே கொண்டு செல்வதும், அக்கடன்கள் பிரசவிக்கும் சுமைகள், நலிவடைந்துள்ள சமுதாயத்தை மென்மேலும் கீழிறக்கிவிடும் என்பதை ஊடகப்பரப்பில் முன்வைப்பதும், தேவையற்ற விவகாரமாகக் கருத முடியாது.

கடன் பொறிக்குள் சிக்கியுள்ள இலங்கை: - இதயச்சந்திரன்
[Sunday, 2013-06-09 20:27:33]

2005 இல் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் , யுத்த வெற்றியை வைத்து எத்தனை காலத்திற்கு ஆட்சியை நடாத்தும் என்கிற கேள்வி பல முனைகளிலும் இருந்து எழுப்பப்படுகிறது. புதிது புதிதாக முறிகளை (bond) விற்பதும், வெளிநாட்டு நிதிச் சந்தையில் கடன் வாங்குவதுமாக இலங்கை திறைசேரியின் பொருளியல் வாழ்வு கழிகிறது. மகிந்த ராஜபக்சவின் எட்டு ஆண்டுகால ஆட்சிக்காலத்தில், உள்நாட்டு வெளிநாட்டு கடன்கள், அபிவிருத்தி என்கிற சந்தோசம் தரும் வார்த்தையால் திரையிடப்பட்டுள்ளன.

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! - நக்கீரன்
[Saturday, 2013-06-08 11:53:39]

'இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு' என்ற கூக்குரல் தென்னிலங்கை சிங்கள - பவுத்த பேரினவாதிகளால் உரத்த குரலில் ஒலிக்கப்படுகிறது. ஏற்கனவே சிங்கள பேரினவாதத்தை கக்கிக் கொண்டிருக்கும் ஜாதிக ஹெல உறுமய, சுதந்திரத்துக்கான தேசிய இயக்கம் போன்ற கடும்போக்கு அமைப்புக்கள் மட்டும் அல்லாது அண்மையில் முளைத்திருக்கும் பொது பல சேனா, சிகல ராவய, இராவண பலய போன்ற அமைப்புக்களும் களத்தில் இறங்கியுள்ளன. இந்தப் பேரினவாத சக்திகளின் போர்க்கோலம் அய்ம்பதுகளில் தனிச் சிங்களத்துக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த வரலாற்றுக் காட்சிகளை நினைவு படுத்துகிறது.

இந்திய இயலாமை பார்த்திருக்க பறிபோகிறது 13வது திருத்தம்! பனங்காட்டன்
[Friday, 2013-06-07 22:29:38]

இலங்கையின் தலைநகரான கொழும்பில் ஒன்றோடொன்று தொடர்புற்ற மூன்று விடயங்கள் சமகாலத்தில் நடைபெறுகின்றன. வெளித்தோற்றத்தில் இவை ஒவ்வொன்றும் வெவ்வேறுதுறை சார்ந்தவைகளாகக் காணப்பட்டாலும் அரசாங்கத்தின் நகர்வில் இவை ஒன்றுடனொன்று நெருக்கமான தொடர்புடைய சட்ட மாற்றங்கள். இன்னும் குறிப்பாகச் சுட்டுவதானால், செப்டெம்பரில் நடைபெறப்போவதாகக் கூறப்படும் வடமாகாண சபைத் தேர்தலை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்.

சீனமயமாகும் இலங்கையின் பொருளாதாரம் - இதயச்சந்திரன்
[Tuesday, 2013-06-04 21:34:14]

மாற்றுச் சிந்தனைகளையும் அதற்கான செயற்பாட்டு வழிமுறைகளையும் இலங்கை அரசு ஏராளமாக வைத்துள்ளது. விடுதலைப்புலிகள் உடனான யுத்தம் முடியும் வரை, 'பயங்கரவாதத்திற்கெதிரான போர்' என்கிற அமெரிக்கப்பொது மொழி ஊடாக எல்லா நாடுகளையும் முரண்பாடுகளின்றி தன் பின்னால் அணிதிரள வைத்தது. யுத்தம் முடிந்தவுடன் பிரச்சினைகள் ஆரம்பமாகின. அமெரிக்கத் தீர்மானம், 'சீபா' ஒப்பந்தச் சிக்கல் என்று பல கோணங்களில் இன்று பிரச்சினைகளை இலங்கை எதிர்கொள்கிறது.

TamilsGuid-191012-2013
Suresh-remax-2013-01-01
INNSYS-20120930
Mahesan supramaniyam 031109
TDE_Computers2011
NIRO-DANCE-100213
RoyaShades-l2011(04-12-11)
AJRwindows22.05.13
Ramans2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com