Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 19, 2013 [GMT]

  • Welcome
  • Welcome
தெற்கிலிருந்து தெளிவானதும் துணிவுடையதுமான ஒரு குரல்: -கதிரோட்டம்-
[Friday, 2012-06-15 13:50:58]

"இலங்கை இனப்பிரச்சினை இன்று இலங்கைக் கரைகளைக் கடந்து நீண்ட நாளாகி விட்டது. இதை இங்குள்ள இனவாத முட்டாள்கள் உணரவேண்டும். உண்மையில் இவர்கள் இங்கே தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தினால் இலங்கைக் கரைகளுக்கு அப்பால் நடைபெறும் இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தானாகவே நின்று போய்விடும்"


  

மிகவும் தெளிவானதும் துணிவுடையதுமான இந்தக் குரல் இலங்கைக்கு அப்பால் இருந்து கேட்கவில்லை. இலங்கையிலிருந்துதான் அது ஒலித்துள்ளது. அதுவும் நாட்டின் தலைநகராம் கொழும்பிலிருந்துதான் இந்த கம்பீரக் குரல் எழுந்துள்ளது. இந்தக் குரலுக்குரியவர் வேறு யாருமல்ல. இலங்கையில் அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு அரசியல் இயக்கமாகத் திகழும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனே மேற்படி கருத்துக்களை தெளிவாகக் கூறியுள்ளார்.

இவை யாருக்காக தெரிவிக்கப்பட்ட கூற்றுக்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆமாம்! இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தமிழ் மக்களுக்கு எதிரான அரசினதும் இராணுவத்தினதும் நடவடிக்கைகளை கண்டும் காணாதது போல் இருந்து கொண்டு இலங்கை அரசிற்கு எதிராகவும் இலங்கையின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக இந்தியாவிலும் ஏனைய மேற்குலக நாடுகளிலும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் மீது குற்றச்சாட்டுக்களை கூறிவரும் பொறுப்பான இலங்கை அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்குக்காகவே திரு மனோ கணேசன் இந்த கருத்துக்களைக் கூறி உண்மையை புரிய வைக்க முயற்சி செய்கின்றார்.

மனோ கணேசனின் கருத்துக்கள் அவரது வார்த்தையில் அந்த "முட்டாள்களுக்கு" புரிகின்றதோ இல்லையோ எமக்கு நன்கு புரிகின்றது. இலங்கையில் மகிந்தா அரசினதும் அவரது காவல்காரர்களான இராணுவத்தினதும் அநியாயங்களை இன்னும் நியாயப்படுத்தி வரும் டக்ளஸ் கருணா பிள்ளையான் போன்றவர்களும் இதை புரிந்து கொள்ளாதவர்கள் போல நடிப்பதும் நமக்கு நன்கு தெரிகின்றது.

திரு மனோ கணேசன் மேலும் அழுத்தமாகக் கூறுகின்றார் இலங்கை அமைச்சர்களுக்கு இந்திய தமிழக அரசுகள் பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் தமிழகக் கட்சிகளை வன்முறையாளர்கள் என்றும் குறை கூறி ஜாதிக ஹெல உறுமய உட்பட சில இலங்கைக் கட்சிகளும் அரசியல்வாதிகளும் பொங்கி எழுந்துள்ளார்கள்.

ஹெல உறுமய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் மற்றும் விமல் வீரவன்ஸ கட்சி ஆகியவை தாம் ஏதோ நாகரிகம்மிக்க கண்ணியமான அரசியல் செய்கின்ற கட்சிகள் போல் கருத்துகள் தெரிவிப்பதைப் பார்த்து உலகமே கைகொட்டி சிரிக்கின்றது"

கொழும்பில் இருந்து கொண்டு இவ்வாறு அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் எதிராக குரல் கொடுக்கும் மனோ கணேசன் பஞ்சு மெத்தை துயில் கொண்ட வண்ணம் இவ்வாறு பேசவில்லை. எப்போதும் அவர் வீதியில் தான் நிற்கின்றார். யாழ்ப்பாணமா?, காலியா?, கண்டியா?, மட்டக்களப்பா?, மலையகமா?, எங்கேயென்றாலும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் பிரசன்னமாகி அநீதிகளுக்கும அக்கிரமங்களுக்கும் எதிராக அவர் குரல் கொடுத்து வருகின்றார். யாருக்கு எதிராக என்றால் அந்த நாட்டில் மேற்குறிப்பிட்ட அநியாயங்களையும் அக்கிரமங்களையும் அரசாங்கத்தின் நியாயமான அரசியல் வேலைத் திட்டம் என்று நியாயப்படுத்தும் ஹெல உறுமய தேசப்பற்றுள்ள இயக்கம் மற்றும் மகிந்தாவின் அரச அமைச்சரான விமல் வீரவன்ச ஆகியோருக்கும் எதிராக தனியாக நின்று போர்க்கொடி பிடிக்கும் இந்த மனோ கணேசனை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் வாழ்த்தவும் போற்றவும் வேண்டும்.

-கனடா உதயன்-

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
வட மகாணசபைத் தேர்தல் மகிந்தாவோடான தமிழ்மக்களின் கணக்கைத் தீர்க்கப் பயன்பட வேண்டும். - நக்கீரன்
[Tuesday, 2013-06-18 10:25:35]

வட மாகாணத் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற நீண்ட நாள் கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. எதிர் வரும் செப்தெம்பர் 07 ஆம் நாளன்று தேர்தல் இடம்பெறும் என்று ஆங்கில ஏடுகளில் செய்தி வந்துள்ளது. போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் வட மாகாண சபைக்கு இதுவரை தேர்தல் நடை பெறவில்லை. கண்ணிவெடி அகற்றுவதில் தாமதம், மக்களை மீள்குடியமர்வு செய்வதில் தடங்கல், வாக்காளர் இடாப்பை நிறைவு செய்வதில் சுணக்கம், அபிவிருத்தித் திட்டங்களை நிறைவு செய்வதற்குக் கால அவகாசம் தேவை என அரசு நொண்டிச் சாட்டுக்களைச் சொல்லிவந்தது. ஆனால் இப்போது தேர்தலைப் பிற்போட அரசிடம் காரணங்கள் இல்லாது போய்விட்டன. அதுதான் உண்மை.

தமிழ் இன உணா்வாளர் மணிவண்ணனுக்கு அவரது இறுதி ஆசைப்படி போர்த்தப்பட்டது தேசியக்கொடியா ! நாம் தமிழர் கொடியா!
[Monday, 2013-06-17 21:53:35]

தமிழின உணர்வாளர், இயக்குனர், நடிகர் எனப் பல பரிமாணங்களை கொண்ட மனிதர்களுள் ஒருவரான மணிவண்ணனின் மறைவு ஒட்டு மொத்த தமிழினத்தையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. மறைந்த தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மணிவண்ணனின் உடல் நேற்று மாலை சென்னை போரூரில் தகனம் செய்யப்பட்டது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகளும் , திரையுலகினரும் , தமிழார்வலர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பல தரப்பட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

13 திருத்தத்துக்கான திருத்தம் தமிழருக்கென ஒரு முண்டம் - பனங்காட்டான
[Sunday, 2013-06-16 22:31:39]

'படைத்தவன் படி அளப்பான்' என்ற நம்பிக்கையில் இந்தியத் தலைமையைச் சந்திக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆயத்தமாகின்றது. இது இந்தியாவின் அழைப்பல்ல. கூட்டமைப்பு கேட்டுப் பெறும் ஒரு வாய்ப்பு.
கடந்த வாரக் கட்டுரையின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் பார்க்கலாம். இது, 'ஓநாய் வருகிறது. ஓநாய் வருகிறது' என்ற கதை போன்ற சமாசாரம்.

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! - நக்கீரன் (பாகம் 2)
[Sunday, 2013-06-16 06:47:29]

அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் இராசரத்தினா, மேத்தானந்தா, சிறில் மத்தியூ, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்கா போன்ற அரசியல்வாதிகள் ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடென்றும் நாடும் மக்களும் ஒன்றென்றும் எழுதியும் பேசியும் வந்தார்கள். இன்றும் பேசி வருகிறார்கள். இவர்களில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஜே.ஆர். ஜெயவர்த்தனா போன்றோர் கிறித்தவர்களாக இருந்து பின்னர் பவுத்தர்களாக மதம் மாறிக் கொண்ட அரசியல் பவுத்தர்களாவர்.

நெல்சன் மண்டேலா - (மரணத்தின் அழைப்பிதழ்-4) பூநகரான்
[Tuesday, 2013-06-11 22:28:59]

இந்த உலகத்தில் இன்று இரண்டு பேர் உலக கவனத்தை ஈர்ப்பவர்களாக உள்ளனர் - ஒருவர் ஒபாமா மற்றவர் நெல்சன் மண்டேலா இருவருமே வெள்ளை இனத்தவராலும் மதிக்கவும் நேசிக்கவும் படுகிறவர்கள்.. ஆம் , நோய் வாய்ப்பட்டுள்ள 94 வயதான நெல்சன் மண்டேலா என்ற மனிதனிற்காக உலகமே கரிசனை காட்டுகிறது . ஒபாமா நோய் வாய்ப்பட்டாலும் இவ்வளவு கரிசனை எழுமா என்பது கேள்விக்குரியது.

மகிந்தரின் கைகளில் மந்திரக்கோல் - இதயச்சந்திரன்
[Tuesday, 2013-06-11 22:25:30]

இலங்கையின் கடன் நிலைமைகள் குறித்து எழுதினால், அச்செய்திகள், தமிழ் மக்களுக்கு போதையூட்டும் விடயமாகச் சிலருக்குத் தென்படுகிறது. சிங்களத்தின் பொருளாதார வீழ்ச்சி, தமிழ் மக்களை போதையூட்டும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிடும் என்பது தவறு. வெளிநாட்டு நேரடி முதலீடுகள் எங்கே குவிக்கப்படுகிறது என்பது குறித்தான தெளிவான செய்திகளை ஈழத்தமிழ் மக்களிடையே கொண்டு செல்வதும், அக்கடன்கள் பிரசவிக்கும் சுமைகள், நலிவடைந்துள்ள சமுதாயத்தை மென்மேலும் கீழிறக்கிவிடும் என்பதை ஊடகப்பரப்பில் முன்வைப்பதும், தேவையற்ற விவகாரமாகக் கருத முடியாது.

கடன் பொறிக்குள் சிக்கியுள்ள இலங்கை: - இதயச்சந்திரன்
[Sunday, 2013-06-09 20:27:33]

2005 இல் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் , யுத்த வெற்றியை வைத்து எத்தனை காலத்திற்கு ஆட்சியை நடாத்தும் என்கிற கேள்வி பல முனைகளிலும் இருந்து எழுப்பப்படுகிறது. புதிது புதிதாக முறிகளை (bond) விற்பதும், வெளிநாட்டு நிதிச் சந்தையில் கடன் வாங்குவதுமாக இலங்கை திறைசேரியின் பொருளியல் வாழ்வு கழிகிறது. மகிந்த ராஜபக்சவின் எட்டு ஆண்டுகால ஆட்சிக்காலத்தில், உள்நாட்டு வெளிநாட்டு கடன்கள், அபிவிருத்தி என்கிற சந்தோசம் தரும் வார்த்தையால் திரையிடப்பட்டுள்ளன.

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! - நக்கீரன்
[Saturday, 2013-06-08 11:53:39]

'இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு' என்ற கூக்குரல் தென்னிலங்கை சிங்கள - பவுத்த பேரினவாதிகளால் உரத்த குரலில் ஒலிக்கப்படுகிறது. ஏற்கனவே சிங்கள பேரினவாதத்தை கக்கிக் கொண்டிருக்கும் ஜாதிக ஹெல உறுமய, சுதந்திரத்துக்கான தேசிய இயக்கம் போன்ற கடும்போக்கு அமைப்புக்கள் மட்டும் அல்லாது அண்மையில் முளைத்திருக்கும் பொது பல சேனா, சிகல ராவய, இராவண பலய போன்ற அமைப்புக்களும் களத்தில் இறங்கியுள்ளன. இந்தப் பேரினவாத சக்திகளின் போர்க்கோலம் அய்ம்பதுகளில் தனிச் சிங்களத்துக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த வரலாற்றுக் காட்சிகளை நினைவு படுத்துகிறது.

இந்திய இயலாமை பார்த்திருக்க பறிபோகிறது 13வது திருத்தம்! பனங்காட்டன்
[Friday, 2013-06-07 22:29:38]

இலங்கையின் தலைநகரான கொழும்பில் ஒன்றோடொன்று தொடர்புற்ற மூன்று விடயங்கள் சமகாலத்தில் நடைபெறுகின்றன. வெளித்தோற்றத்தில் இவை ஒவ்வொன்றும் வெவ்வேறுதுறை சார்ந்தவைகளாகக் காணப்பட்டாலும் அரசாங்கத்தின் நகர்வில் இவை ஒன்றுடனொன்று நெருக்கமான தொடர்புடைய சட்ட மாற்றங்கள். இன்னும் குறிப்பாகச் சுட்டுவதானால், செப்டெம்பரில் நடைபெறப்போவதாகக் கூறப்படும் வடமாகாண சபைத் தேர்தலை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்.

சீனமயமாகும் இலங்கையின் பொருளாதாரம் - இதயச்சந்திரன்
[Tuesday, 2013-06-04 21:34:14]

மாற்றுச் சிந்தனைகளையும் அதற்கான செயற்பாட்டு வழிமுறைகளையும் இலங்கை அரசு ஏராளமாக வைத்துள்ளது. விடுதலைப்புலிகள் உடனான யுத்தம் முடியும் வரை, 'பயங்கரவாதத்திற்கெதிரான போர்' என்கிற அமெரிக்கப்பொது மொழி ஊடாக எல்லா நாடுகளையும் முரண்பாடுகளின்றி தன் பின்னால் அணிதிரள வைத்தது. யுத்தம் முடிந்தவுடன் பிரச்சினைகள் ஆரம்பமாகின. அமெரிக்கத் தீர்மானம், 'சீபா' ஒப்பந்தச் சிக்கல் என்று பல கோணங்களில் இன்று பிரச்சினைகளை இலங்கை எதிர்கொள்கிறது.

TDE_Computers2011
AJRwindows22.05.13
RoyaShades-l2011(04-12-11)
Ramans2011
Suresh-remax-2013-01-01
TamilsGuid-191012-2013
Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
INNSYS-20120930
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com