மலேசியாவில் மகளை பாலியல் தொல்லை செய்த தந்தைக்கு 12 ஆயிரம் வருடம் சிறை: | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
April 24, 2024 [GMT]

மலேசியாவில் மகளை பாலியல் தொல்லை செய்த தந்தைக்கு 12 ஆயிரம் வருடம் சிறை:
[Friday 2017-08-11 18:00]

மலேசியாவில் தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த 36 வயது தந்தையை கைது செய்த போலீஸ் நீதிமன்றம் அவருக்கு 12 ஆயிரம் வருடங்கள் வரை சிறைத் தண்டனை கொடுக்க வேண்டும் என கோரியது. மலேசியாவை சேர்ந்த 36 வயதுடைய ஆண் ஒருவர் அவருடைய மனைவியை விவாகரத்து செய்து 15 வயது மகளும் வசித்து வந்தார். இவருடன் மனைவி இல்லாமலிருந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை வரையிலான இடைப்பட்ட அந்த நபர் மகளை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.


  

இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை அவரது அம்மாவிடம் சொல்லியதால் அச்சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் அந்த மோசமான தந்தையை கடந்த 26ம் தேதி மலேசிய போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது.

தற்போது ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தவரின் வழக்கினை நீதிமன்றம் விசாரித்தது. அந்த நபர் மீது 600க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை படிக்கவே 2 நாள் ஆகிவிட்டதாக இந்த வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும் இந்த குற்றச்சாட்டுகளின்படி குற்றவாளிக்கு தண்டனை கொடுத்தால் ஒரு குற்றச்சாட்டுக்கு 20 வருடம் தண்டனை என வைத்துக் கொண்டால் அவர் 12 ஆயிரம் ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று தெரிவித்தார்.

இதனால் இவரது ஜாமீன் மனுவை நிராகரித்து விட்டது மலேசிய நீதிமன்றம். மலேசியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் இந்த வழக்கு முக்கிய வழக்காக பார்க்கப்பட்டு வருகிறது.

  
   Bookmark and Share Seithy.com


சோகமாக இருந்தால் 10 நாள் விடுமுறை: நிறுவன அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி!
[Friday 2024-04-19 16:00]

சீனாவைச் சேர்ந்த Fat Dong Lai தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சோகமாக இருக்கும் நாள்களில் வருடத்தில் 10 நாட்கள் வரை கூடுதலாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளமை அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Fat Dong Lai நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் வேலை . ஊழியர்க்ளுக்கு 30 முதல் 40 நாள்கள் வரை வருடாந்திர விடுப்பு வழங்கப்படுகிறது.


டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமாக இருந்த பனிப்பாறை: ஒரு அபூர்வ புகைப்படம்! Top News
[Saturday 2024-04-13 18:00]

மூழ்கடிக்க முடியாத கப்பல் என பெயர் பெற்ற டைட்டானிக் கப்பல் இரண்டு துண்டாக உடைந்து கடலில் மூழ்கிய சம்பவம், டைட்டானிக் திரைப்படம் வந்த பிறகு அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் என்றே கூறலாம். அந்த துயர சம்பவத்தில் 1,522 பேர் பலியானார்கள். தற்போது, அந்த கப்பல் மூழ்க காரணமாக இருந்த பனிப்பாறையின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.


சூரிய கிரகணத்தின்போது கனேடியர்கள் நிகழ்த்திய கின்னஸ் சாதனை!
[Tuesday 2024-04-09 18:00]

உலக நாடுகள் பல, முழு சூரிய கிரகணம் என்னும் அபூர்வ நிகழ்வைக் காண ஆங்காங்கே கூடியிருந்த அதே நேரத்தில், கனேடியர்கள் சிலர், கின்னஸ் சாதனை ஒன்றை முறியடிக்கத் திட்டமிட்டார்கள். ஆம், 2020ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது, சீனாவின் Guangdong மாகாணத்தில், 287 பேர், சூரியனைப்போல உடையணிந்து ஒன்று திரண்டு கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்தார்கள்.


பெரு குகையில் வேற்று கிரகத்தின் மம்மிகள்?
[Sunday 2024-04-07 16:00]

பெரு நாட்டின் நாஸ்கா பகுதியில் உள்ள குகை ஒன்றில் நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் நாஸ்கா(Nazca) பகுதியில் குகை ஒன்றில், நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


சுவிட்சர்லாந்தில் மஞ்சளாக மாறிய வானம்!
[Monday 2024-04-01 18:00]

சுவிட்சர்லாந்தில் வாழும் மக்கள், சனிக்கிழமை, வானம் மஞ்சள் நிறமாக மாறியதைக் கண்டார்கள். இப்படி வானம் மஞ்சள் நிறமாக மாறுவதற்குக் காரணம், ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்திலிருந்து அடித்துவரப்படும் தூசிதான் காரணம்.


பூமியில் இருக்கும் பாம்பு இனம் அழிந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
[Saturday 2024-03-30 18:00]

பாம்புகள் என்றால் நாம் எல்லோருக்கும் தெரிந்தது நிலத்தில் ஊர்ந்து செல்பவை மாத்திரம் தான். ஆனால் 11 கோடி ஆண்டுகளுக்கு முன் நான்கு கால்கள் கொண்ட பாம்புகள் உலகில் வாழ்ந்துள்ளன. இந்த இனம் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து வாழ்கின்றன. இவற்றிற்கு கால்கள் இருப்பதற்கான காரணம் இரைகளை பிடிப்பதற்காகும்.


ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்: எங்கு தெரியுமா?
[Sunday 2024-03-10 17:00]

உலகில் பல அழகான தீவுகள் உள்ளன. அங்கு மக்கள் சுற்றுலா செல்கின்றனர். அதற்காக அவர்கள் பல லட்சம் ரூபாய் பணம் செலவிடுகின்றனர். ஆனால் ஒரு அழகான தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி அங்கு வசிப்பவர்களுக்கு ரூ.1.5 கோடி வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றிற்குள் நீங்கள் பொருந்தினால் மட்டுமே உங்களுக்கு ரூ.1.5 கோடி கிடைக்கும்.


கனடாவில் 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும் காணித்துண்டு?
[Wednesday 2024-03-06 19:00]

கனடாவில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய மக்கள் கூடுதல் நாட்டம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கோச்ரென்ஸ் நகரின் மேயர் பீற்றர் பொலிடிஸ் இது குறித்து அறிவித்துள்ளார்.


பிரித்தானிய கடலில் கண்டறியப்பட்ட புதிய கடல் வாழ் உயிரினம்!
[Friday 2024-03-01 18:00]

பிரித்தானியாவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் "ப்ளூரோப்ராங்கியா பிரிட்டானிகா" (Pleurobranchaea britannica) என்ற தனித்துவமான உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரித்தானியாவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் இதுவரை அறியப்படாத, தனித்துவமான ஓர் கடல் நத்தை (sea slug) இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


"பேய்களின் சமையலறை" - கொடைக்கானலில் உள்ள குணா குகை பற்றிய உண்மை தகவல்!
[Wednesday 2024-02-28 18:00]

கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குணா குகை பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அது பேய்களின் சமையலறை என்பது குறித்து தெரியுமா?கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குணா குகையை முந்தைய காலத்தில் ‘டெவில்ஸ் கிச்சன்’ என்று தான் அழைத்துள்ளனர். அதாவது ‘பேய்களின் சமையல் அறை’ என அழைக்கப்பட்டது.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா