Untitled Document
May 14, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மாபெரும் வெற்றிப்படத்திற்காக சிவாஜி கணேசன் வாங்கி சம்பளம்!
[Sunday 2024-04-28 08:00]

நடிப்பின் இலக்கம் என கூறப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் ஹீரோவாக நடித்து வந்த சிவாஜி ஒரு கட்டத்தில் இனிமேல் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கவேண்டுமென முடிவு செய்கிறார். ஹீரோவாக எப்படி முத்திரை பதித்தாரோ, அதே போல் தான் ஏற்று நடித்த ஒவ்வொரு குணச்சித்திர கதாபாத்திரங்களையும் மக்கள் மனதில் பதியவைத்தார். ஆனால், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கியபின், தயாரிப்பாளர்களிடம் சம்பளம் குறித்து எதுவுமே பேசமாட்டாராம் சிவாஜி.

தன்னை படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்கும் தயாரிப்பாளர்களிடம், இந்த கதாபாத்திரத்திற்கு எவ்வளவு தரவேண்டும் என நினைக்கிறாயோ, அதை மட்டும் கொடு போதும் என கூறிவிடுவாராம்.

அப்படி அவர் நடித்த ஒன்ஸ் மோர் திரைப்படத்திற்காக முதலில் ரூ. 100 மட்டுமே சம்பளமாக வாங்கி இருக்கிறார். பின் படத்தின் வியாபாரம் முடிந்த நிலையில், சிவாஜி கணேசனுக்கு ரூ. 10 லட்சம் சம்பளமாக கொடுத்தாராம் எஸ்.ஏ. சந்திரசேகர்.

இதனை தொடர்ந்து கமல் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் திரைப்படத்திற்காக, நடிகர் சிவாஜி கணேசனுக்கு ரூ. 20 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்பின் ரஜினியுடன் இணைந்து சிவாஜி கணேசன் நடித்த படம் தான் படையப்பா. இப்படத்தில் ரஜினியின் தந்தை கதாபாத்திரத்தில் சிவாஜி நடித்திருப்பார். மக்கள் மனதில் இருந்து இன்று வரை நீங்கா இடத்தை இவருடைய கதாபாத்திரம் பிடித்துள்ளது.

இப்படம் வியாபாரம் முடிந்தபின், தயாரிப்பாளரிடம் இருந்து சிவாஜி கணேசனுக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது. இதை தனது மகன் ராம்குமாரிடம் கொடுத்துள்ளார். காசோலையை பார்த்த ராம்குமார், அப்பா இதில் ரூ. 1 கோடி என்று போடப்பட்டுள்ளது என கூறியுள்ளார். தயாரிப்பு தரப்பில் ஒரு பூஜ்யத்தை அதிகமாக போட்டிருப்பார்கள். ரூ. 10 லட்சம் தான் சம்பளமாக இருக்கும் என சிவாஜி கூறியுள்ளார்.

பின் தயாரிப்பாளருக்கு போன் கால் செய்து பேசிய சிவாஜி கணேசன், காசோலையில் ரூ. 1 கோடி என தவறாக சம்பளம் போடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதற்கு தயாரிப்பாளர் தரப்பு, இல்ல சார் சரியாக தான் போட்டிருக்கும், ரஜினிகாந்த் சார் தான் உங்களுக்கு ரூ. 1 கோடி சம்பளம் கொடுக்க சொன்னார் என கூறினார்களாம்.

இந்த விஷயம் நடந்த பிறகு, ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்து சிவாஜி கணேசன் கடிதம் கூட எழுதினாராம். நாம் எவ்வளவு பெரிய இடத்திற்கு சென்றாலும், நம்முடைய மூத்த கலைஞரை எப்படி மதிக்க வேண்டும் என்று ரஜினிகாந்தை பார்த்து தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

  
  
   Bookmark and Share Seithy.com



பெயர் போனதால் மலையாள ஹீரோவிடம் சரணடைந்த கௌதம் மேனன்!
[Tuesday 2024-05-14 16:00]

கௌதம் வாசுதேவ் மேனன் தமிழில் ஹிட் கொடுத்து பல வருடங்கள் ஆகி உள்ளது. கடைசியாக அஜித்தை வைத்து எடுத்த படம் என்னை அறிந்தால் அதுவும் 2015 ஆம் ஆண்டு தான். அதற்கு அடுத்த ஆண்டு சிம்புவை வைத்து எடுத்த படம் “அச்சம் என்பது மடமையடா” . இந்த படத்திற்கு பின்னர் கௌதமிற்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் அமையவில்லை.



பாகுபலி 3 எடுக்க முடிவு செய்த ராஜமௌலி!
[Tuesday 2024-05-14 16:00]

இந்தியளவில் மட்டுமின்றி உலகளவில் தற்போது பிரபலமான இயக்குனராக மாறிவிட்டார் எஸ்.எஸ். ராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்கள் உலகளவில் ரீச் பெற்றது. ஆர்.ஆர்.ஆர் படத்தின் பாடல் ஆக்ஸர் விருது பெற்ற இந்திய சினிமாவிற்கு பெருமையும் சேர்த்து. அடுத்ததாக ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.



2 முறை அந்த வெற்றி இயக்குனரை ரகசியமாக சந்தித்த ரஜினி!
[Tuesday 2024-05-14 06:00]

ரஜினி இப்போது வேட்டையன் பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். அவ்வப்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகும் போட்டோக்கள் ரசிகர்களை ஆரவாரப்படுத்தி வருகிறது. அதேபோல் லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் கூலி படத்தின் டைட்டில் டீசரும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எப்போது இந்த ஷூட்டிங் தொடங்கும், அடுத்த அப்டேட் என்ன என்பதையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர்.



யாஷிகா ஆனந்த் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட்! Top News
[Tuesday 2024-05-14 06:00]

தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு பெயர்பெற்றவர் யாஷிகா ஆனந்த். படங்களில் கிளாமராக நடிப்பது மட்டுமின்றி இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.



கார் விபத்தில் சிக்கி சீரியல் நடிகை பவித்ரா மரணம்!
[Monday 2024-05-13 06:00]

சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் என்பவர் இன்று நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்திருக்கும் செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடகத்தை சேர்ந்த நடிகை பவித்ரா ஜெயராம் தற்போது தெலுங்கில் Trinayani என்ற தொடரில் நடித்து வருகிறார். தமிழில் வரும் மாரி என்ற தொடரின் தெலுங்கு ரீமேக் தான் அது.



மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய அஜித்!
[Monday 2024-05-13 06:00]

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குக் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கவுள்ளது.



அஜித் சம்பளத்தில் கை வைக்கும் லைக்கா!
[Sunday 2024-05-12 16:00]

சோலியான் குடுமி சும்மா ஆடாதுன்னு பழமொழி இருக்கு. அது நடிகர் அஜித்குமார் விஷயத்தில் தான் சரியாக பொருந்தி இருக்கிறது. அஜித் இப்படித்தான் என்று ஒரு குறிப்பிட்ட காலமாகவே நமக்குள் ஒரு எண்ணம் இருக்கிறது. அதை மீறி அவர் ஒரு சில விஷயம் செய்யும் போது இவரு இப்படி எல்லாம் பண்ண மாட்டாரே என ஒரு நிமிடம் நம் மனசுக்குள் ஒரு சந்தேகம் வந்துட்டு போகும். அஜித் தரப்பிலிருந்து அவரை சுற்றி என்ன நடக்குதுன்னு வெளியே தெரிய வாய்ப்பில்லை.



அள்ள அள்ள குறையாத அரண்மனை 4 வசூல்!
[Sunday 2024-05-12 16:00]

சுந்தர் சி இயக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பாக அரண்மனை 4 படம் வெளியானது. இதில் சுந்தர் சி, ராசி கன்னா மற்றும் தமன்னா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு திரையரங்குகளில் இப்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை கவின் நடிப்பில் ஸ்டார் மற்றும் அர்ஜுன் தாஸின் ரசவாதி ஆகிய படங்கள் வெளியாகி இருந்தது. இந்த படங்களின் வருகையால் அரண்மனை 4 படத்தின் வசூல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.



விஜய்யை பின்பற்றும் சூர்யா?
[Sunday 2024-05-12 16:00]

நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார். 2026 தேர்தலில் போட்டியிட இருப்பதால் அதற்குள் சினிமாவில் இருந்து விலக இருக்கிறார். அரசியல் கட்சி தொடங்குமுன் விஜய் அவரது ரசிகர் மன்றத்தை வலிமையாக மாற்ற பல விஷயங்களை செய்தார்.



பிரம்மாண்டமாக நடக்கப்போகும் விஜய்யின் கோட் இசை வெளியீட்டு விழா!
[Sunday 2024-05-12 06:00]

அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டரில் விஜய் நடிக்க படு மாஸாக தயாராகி வரும் படம் தான் கோட், Greatest Of All Time. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு படப்பிடிப்புகளை சரியான திட்டமிடுதலுடன் நடத்தி வருகிறார். படத்திற்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் வகையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார், சமீபத்தில் முதல் சிங்கிள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.



சூர்யா 44ல் இணைந்த பிரபல மலையாள நடிகர்!
[Sunday 2024-05-12 06:00]

சூர்யா ஏற்கனவே கங்குவா படத்தை முடித்துவிட்ட நிலையில் அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அந்த படம் ட்ராப் ஆகிவிட்டதால் அடுத்து கார்த்திக் சுப்பாராஜ் உடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்.



அஜித்தின் குட் பேட் அக்லி டீம் திடீரென சென்னைக்கு திரும்பியது ஏன்?
[Saturday 2024-05-11 18:00]

அஜித் நடித்துவந்த விடாமுயற்சி படம் பல்வேறு சிக்கல்களால் நிறுத்தப்பட்டு இருக்கிறது. அடுத்தகட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில் அஜித் தனது அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் சமீபத்தில் தொடங்கியது.



ஸ்டார் படத்திற்கு கவின் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
[Saturday 2024-05-11 18:00]

நடிகர் கவின் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர். அதன் பின் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு மேலும் பாப்புலர் ஆனார். அதன் பிறகு ஹீரோவாக அறிமுகம் ஆன அவர் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்து வருகிறார்.



சுந்தர் சி -யின் அரண்மனை 4 இவ்ளோ வசூல் செய்துள்ளதா?
[Saturday 2024-05-11 18:00]

சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 பாகம் கடந்த மே 6 -ம் தேதி வெளியானது. இப்படத்தில் தமன்னா, ராசி கண்ணா ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்திருந்தனர். மேலும் கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், டெல்லி கணேஷ், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



பெரிய கைகளுடன் மோத தயாரான சூரி!
[Saturday 2024-05-11 06:00]

சூரி இப்போது காமெடியை விட்டுவிட்டு முழு நேர ஹீரோவாக மாறிவிட்டார். விடுதலை அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்த நிலையில் அடுத்தடுத்த படங்களிலும் ஹீரோவாக கமிட்டாகி வருகிறார். அதில் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோருடன் இணைந்து இவர் நடித்திருக்கும் கருடன் இப்போது ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. அதன் போஸ்டரை சூரி தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.


Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா