Untitled Document
May 23, 2024 [GMT]
ஈராக் டிக்டோக் பிரபலம் மர்ம நபரால் சுட்டுக்கொலை!
[Sunday 2024-04-28 18:00]

ஈராக்கில் பெண் டிக்டோக் பிரபலம் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈராக் நாட்டில் குஃப்ரான் மஹ்தி சவாதி எனும் பெண் டிக்டோக்கில் பிரபலமானவர். ''ஓம் பஹத்'' என்று சமூக வலைத்தளங்களில் அழைக்கப்பட்ட இவர், நாட்டின் கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வீடியோக்களை டிக்டோக்கில் பதிவேற்றிய குற்றத்திற்காக கடந்த ஆண்டு 6 மாதம் சிறைத்தண்டனை பெற்றார்.

ஈராக்கில் பெண் டிக்டோக் பிரபலம் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈராக் நாட்டில் குஃப்ரான் மஹ்தி சவாதி எனும் பெண் டிக்டோக்கில் பிரபலமானவர். ''ஓம் பஹத்'' என்று சமூக வலைத்தளங்களில் அழைக்கப்பட்ட இவர், நாட்டின் கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வீடியோக்களை டிக்டோக்கில் பதிவேற்றிய குற்றத்திற்காக கடந்த ஆண்டு 6 மாதம் சிறைத்தண்டனை பெற்றார்.

  

இந்த நிலையில் ஓம் பஹத் தனது காரில் அமர்ந்திருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார்.

இதில் ஓம் பஹத் ரத்த வெள்ளத்தில் சரிந்து காரிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.

உணவு விநியோகம் செய்பவர் போல் வந்து குறித்த மர்ம நபர் இந்தக் கொலைச்சம்பவத்தை அரங்கேற்றியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இச்சம்பவத்தில் மற்றொரு பெண் காயமடைந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் குஃப்ரான் மஹ்தி சவாதியின் மரணம் குறித்து விசாரிக்க சிறப்புக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் குஃப்ரான் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  
   Bookmark and Share Seithy.com



கனடாவில் சில சந்தேக நபர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
[Thursday 2024-05-23 18:00]

கனடாவில் சில சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். ஆயுத முனையில் விடொன்றிற்குள் புகுந்து கொள்ளையிட்டதாக குறித்த ஐந்து சந்தேக நபர்கள் மீதும் முன்னதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.



மீண்டும் தாய்வானுக்கு பீதியை கிளப்பும் சீனாவின் செயல்!
[Thursday 2024-05-23 18:00]

தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தைவானை மிரட்டுவதற்காக சீனா போர் பயிற்சியில் ஈடுபடுகிறது. தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் சமீபத்தில் பதவியேற்ற நிலையில் அந்நாட்டை சுற்றி சீனா இன்று காலை திடீரென்று இரண்டு நாள் போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளது.



இப்ராஹிம் ரைசி இறுதிப்பயணம்: அலைகடலென திரண்டு அஞ்சலி செலுத்திய மக்கள்!
[Thursday 2024-05-23 18:00]

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உள்ளிட்ட 9 பேரின் இறுதி சடங்குகள் தலைநகர் டெஹ்ரானில் நேற்று (22) இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து குறித்த ஒன்பது பேரினதும் பூதவுடல்கள் டெஹ்ரானின் டவுன்டவுன் வழியாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு ஆசாதி சதுக்கத்தை சென்றடைந்தது.



மெக்சிகோவில் ஜனாதிபதி பிரச்சார மேடை சரிந்து விழுந்ததில் 9 பேர் பலி!
[Thursday 2024-05-23 18:00]

வட அமெரிக்கா மெக்சிகோவில் நடைபெறவிருந்த ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சார கூட்டத்தில், மேடை சரிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துடன் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அந்நாட்டின் வடக்கு மாகாணமான, நியூவோ லியோன் மாநிலத்தில், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



சொர்க்கம் என கொண்டாடப்பட்ட தீவு நாட்டில் இருந்து பிரித்தானியர்கள் அவசரமாக வெளியேற்றம்!
[Thursday 2024-05-23 06:00]

மிக மோசமான வன்முறை சம்பவங்களை அடுத்து சொர்க்கம் என கொண்டாடப்பட்டு வந்த தீவு நாட்டில் இருந்து பிரித்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பிரான்சின் கடல்கடந்த பிராந்தியமான நியூ கலிடோனியா தீவு நாட்டில் கடந்த 9 நாட்களாக நீடிக்கும் பெரும் வன்முறை சம்பவங்களில் இதுவரை 6 பேர்கள் மரணமடைந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.



கனடாவில் சடலமாக மீட்கப்பட்ட பெண்!
[Thursday 2024-05-23 06:00]

ஒன்ராறியோ ஏரியில் கடந்த 2017ல் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் மரபணு சோதனையின் மூலமாக ரொறன்ரோ பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகாள முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் இந்த வழக்கு தொடர்பில் அறிவித்துள்ளனர். கடந்த 2017 ஆகஸ்டு மாதம் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்தனர்.



பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு!
[Thursday 2024-05-23 06:00]

பிரித்தானியாவில் அடுத்த பொதுத் தேர்தல் ஜூலை 4ம் திகதி முன்னெடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை பிரதமர் ரிஷி சுனக் இன்று மதியத்திற்கு மேல் அறிவிப்பார் என்றே கூறப்படுகிறது. மேலும், அனைத்து அமைச்சர்களும் இன்றைய அமைச்சரவை கூட்டத்திற்கு கலந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



கனடா வாழ் இருவர் யாழ்ப்பாணத்தில் அட்டகாசம்: அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிஸார்!
[Wednesday 2024-05-22 18:00]

யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவிலிருந்து விடுமுறைக்கு சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன் தினம் (20) அத்துமீறி நுழைந்த இருவர் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.



உக்ரேன் மீது அணு ஆயுதத் தாக்குதல் ஒத்திகை!
[Wednesday 2024-05-22 18:00]

உக்ரேன் மீது அணு ஆயுதத் தாக்குதல் ஒத்திகை நடத்தப்படுமென ரஷ்யா அறிவித்துள்ளமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சிலநாட்களாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் இறையாண்மையை காக்க உக்ரேன் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டேன் எனத் தெரிவித்து வந்தார்.



சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்து கனடா விமர்சனம்!
[Wednesday 2024-05-22 18:00]

சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நடவடிக்கை குறித்து கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ விமர்சனம் செய்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸிற்கு எதிராக தண்டனை விதிப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக அண்மையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்திருந்தது.



பிரேசிலில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு!
[Wednesday 2024-05-22 18:00]

பிரேசிலில் இதுவரை இல்லாத வகையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து காணப்படுவதாக அந்நாட்டு காதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டில் இதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 இலட்சத்தை தாண்டியுள்ளது. அதன்படி சமீபத்திய தரவுகளின்படி, பிரேசிலில் 51 இலட்சத்து 45 ஆயிரத்து 295 டெங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் இதுவரை டெங்குவால் 2,899 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இளவரசர் ஹரி - மேகன் தம்பதிக்கு தடையாக இருக்கும் அரச குடும்பத்தில் இருவர்!
[Wednesday 2024-05-22 06:00]

மூத்த அரச குடும்ப உறுப்பினர்களுடனான இளவரசர் ஹரியின் உறவில் விரிசல் நீடிக்கிறது என்றே சமீபத்திய நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இருப்பினும், அவரது சமீபத்திய லண்டன் விஜயம் நல்லிணக்கத்திற்கான சிறிய நம்பிக்கையை அளிக்கிறது என்றே கூறப்படுகிறது. சமீபத்தில் லண்டன் திரும்பியிருந்த ஹரி தனித்துவிடப்பட்டார் என்றே கூறுகின்றனர்.



பிரித்தானியாவை அச்சுறுத்தும் புடினின் பயங்கர ஏவுகணை!
[Wednesday 2024-05-22 06:00]

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தற்போது உக்ரைன் மீது பயன்படுத்தும் ஏவுகணைகளை பிரிட்டிஷ் தீவுகளை நோக்கி திருப்பிவிட முடியும் என்றும், அவைகளை தடுக்க வாய்ப்பிலலை எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்யாவில் இருந்து இதுபோன்ற ஏவுகணைகளை ஏவினால் பிரித்தானியாவை அடைய சுமார் 90 நிமிடங்கள் ஆகும் என குறிப்பிடும் நிபுணர்கள் அவை எல்லா திசைகளிலிருந்தும் தாக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.



நாகரிக நாடுகள் புறக்கணிக்க வேண்டும்: நெதன்யாகு கைதாணைக்கு எதிராக இஸ்ரேல் அழைப்பு!
[Wednesday 2024-05-22 06:00]

இஸ்ரேல் தலைவர்கள் மீதான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைதாணையை நாகரிக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என அந்த நாடு அழைப்பு விடுத்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்டத்தரணி கரீம் கான், தமது அலுவலகம் மூன்று மூத்த ஹமாஸ் அதிகாரிகள், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்கள் மீது போர் குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் கைது வாரண்டுக்கு முன் விசாரணைக் குழுவிடம் விண்ணப்பித்துள்ளதாக அறிவித்தார்.



கனடாவில் பிரபல தொடர் கொலையாளி மீது சிறையில் தாக்குதல்!
[Tuesday 2024-05-21 18:00]

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரபல தொடர் கொலையாளி மீது சிறைச்சாலையில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ரொபர்ட் பிக்டோன் என்ற நபர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கியூபெக்கின் அதியுச்ச பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்ட போர்ட் கார்டியார் சிறையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



"காசாவில் ஹமாஸ் படையினர் தோற்கடிக்கப்பட வேண்டும்" - ஜோ பைடன்!
[Tuesday 2024-05-21 18:00]

காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல என்றும், ஹமாஸ் படையினர் தோற்கடிக்கப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற யூத – அமெரிக்க பாரம்பரிய மாத நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதை தெரிவித்துள்ளார்.



கனடாவில் ஆபத்தான போதை மருந்து குறித்து எச்சரிக்கை!
[Tuesday 2024-05-21 18:00]

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பழங்குடியின மக்கள் செறிந்து வாழும் நிசானாவெப் அஸ்கி பிராந்தியத்தில் ஆபத்தான போதை மருந்துகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மிகவும் ஆபத்தான போதை மருந்து வகைகள் புழக்கத்தில் அதிக அளவு காணப்படுவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



இஸ்ரேல் பிரதமர் மற்றும் ஹமாஸ் தலைவருக்கு எதிராக பிடியாணை!
[Tuesday 2024-05-21 18:00]

யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக இஸ்ரேலிய பிரதமருக்கும் ஹமாஸ் தலைவருக்கும் எதிராக பிடியாணையை பிறப்பிக்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2023 ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் மற்றும் ஹமாஸ் தலைவருக்கு எதிராக பிடியாணையை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



ஜனாதிபதியின் மரணம் சதி என அறிந்தால் உலகப் போர் உறுதி: நிபுணர் ஒருவர் வெளிப்படை!
[Tuesday 2024-05-21 06:00]

ஈரானிய ஜனாதிபதியின் மரணத்திற்கு பின்னால் எதிரியின் கை இருப்பதாக தெரிய வந்தால், உலகப் போர் உறுதி என்றே நிபுணர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Bell 212 ஹெலிகொப்டரின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மிக மோசமான வானிலை காரணமாகவே விபத்து நேர்ந்திருக்கலாம் என ஈரான் தரப்பு நம்புகிறது.



சார்லஸ் மன்னரின் உருவப்படம் குறித்து வாழும் நாஸ்ட்ராடாமஸ் விடுத்த எச்சரிக்கை!
[Tuesday 2024-05-21 06:00]

சார்லஸ் மன்னரின் உத்தியோகப்பூர்வ உருவப்படம் தொடர்பில் இருவேறு கருத்துகள் வெளியாகிவரும் நிலையில், வாழும் நாஸ்ட்ராடாமஸ் விடுத்த எச்சரிக்கை கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வாழும் நாஸ்ட்ராடாமஸ் என பரவலாக அறியப்படும் Athos Salomé சார்லஸ் மன்னரின் புதிய உருவப்படம் குறித்து தமது கருத்துகளை பதிவு செய்துள்ளார். மன்னராக முடிசூடியதன் முதலாம் ஆண்டு நிறைவை பதிவு செய்யும் வகையில் உருவப்படம் ஒன்றை சார்லஸ் மன்னர் வெளியிட்டுள்ளார்.


NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா