Untitled Document
June 13, 2024 [GMT]
சமாதானத்துக்கான வாய்ப்பை அடியோடு குலைத்து விடும்!
[Tuesday 2024-05-14 17:00]


படுகொலையுண்ட தமது உறவுகளை நினைவேந்தும் நமது மக்களின் உரிமையை அடக்குமுறைச் சட்டங்களை ஏவி மறுப்பது நாட்டில் அமைதி, சமாதானத்துக்கான வாய்ப்பை அடியோடு குலைத்து விடும்  என புளொட் அமைப்பின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

படுகொலையுண்ட தமது உறவுகளை நினைவேந்தும் நமது மக்களின் உரிமையை அடக்குமுறைச் சட்டங்களை ஏவி மறுப்பது நாட்டில் அமைதி, சமாதானத்துக்கான வாய்ப்பை அடியோடு குலைத்து விடும் என புளொட் அமைப்பின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

  

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகித்தவர்கள் சம்பூரில் ஈவிரக்கமற்ற முறையில் இரவு வேளையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையையொட்டி கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

"தமிழ் மக்களின் நினைவேந்தும் உரிமை மறுக்கப்படக் கூடாது என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே பல தடவைகள் வலியுறுத்திக் கூறி வந்திருக்கின்றார். அப்படி இருக்க அவரது பொலிஸ் துறை அதற்கு முற்றிலும் மாறாகவே இப்போது நடக்கின்றது. இதனை நோக்கும்போது நமக்கு ஒரு சந்தேகம் ஏற்படுகின்றது.

ஒன்றில் - பொலிஸ் துறை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இல்லை, தமது கொள்கை - கோட்பாட்டை தமது பொலிஸ் துறை மூலம் செயற்படுத்தச் செய்யும் நிர்வாக அதிகார வலிமை அவரிடம் இல்லாமல் இருக்கலாம். அல்லது அவரும் இரட்டை வேடம் போட்டுத் தமிழரிடம் கூறுவது ஒன்று, தனது சிங்களவர்கள் மூலம் செய்விப்பது வேறு என்று இருக்கலாம்.

எது, எப்படியாயினும் இந்தப் போக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியலுக்கு நல்லதல்ல. இத்தகைய அடக்குமுறைக்கு எதிராப் போராடிப் பழக்கப்பட்டவர்கள் நமது தமிழ் மக்கள். நாங்கள் அடங்கோம். நினைவேந்தல் உரிமைகளுக்காகவும் அடங்காமல் போராடுவோம் என்ற செய்தியை ஜனாதிபதிக்கு கூறி வைக்க விரும்புகின்றேன்." என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



தமிழ் பொது வேட்பாளருக்கே ஆதரவு! - சஜித்திடம் நேரடியாக கூறிய சுரேஷ்
[Thursday 2024-06-13 16:00]

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்ததால் சிங்கள ஐனாதிபதிகளில் எங்களுக்கு நம்பிக்கையில்லை எனவும், இதனால் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தத் தீர்மானித்துள்ளோம் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்தெரிவித்துள்ளார்.



கவனம் - தமிழர்களை எச்சரிக்கிறார் பசில்!
[Thursday 2024-06-13 16:00]

வாக்குகளைப் பெறுவதற்காக திடீரென தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் அரசியல்வாதிகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் கவனத்தில் கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எச்சரித்துள்ளார்.



எவ்வாறான அதிகாரங்களைத் தரப் போகின்றீர்கள்?- சஜித்திடம் விக்கி கேள்வி.
[Thursday 2024-06-13 16:00]

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவேன் எனக் கூறும் நீங்கள் அதில் எவ்வாறான அதிகாரங்களைத் தரப் போகின்றீர்கள் என்று சஜித் பிரேமதாஸவிடம் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன்,கேள்வியெழுப்பியுள்ளார்.



சுமந்திரனுடன் இந்தியத் தூதுவர் சந்திப்பு!
[Thursday 2024-06-13 16:00]

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் கொழும்பில் நேற்று சந்திப்பு நடைபெற்றது. இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி உட்பட்ட இரு தரப்பு இணைப்பு சம்பந்தமான பல தரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.



கனடா அரசாங்கம் மாற்றும் அமைப்புகளை அறிமுகப்படுத்துகிறது- வாழ்க்கையை மாற்றுகிறது! Top News
[Thursday 2024-06-13 16:00]

பன்முகத்தன்மை கனடாவை வடிவமைத்துள்ளது மற்றும் தொடர்ந்து வடிவமைக்கிறது. 2015 ஆம் ஆண்டு முதல், கனடா அரசாங்கம் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தில் உறுதியாக உள்ளது, கனடாவையும் உலகையும் ஒரு சிறந்த இடமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த கனடாவில் உள்ள பலருக்கு முறையான இனவாதம் ஏற்றுக்கொள்ள முடியாத உண்மையாகவே உள்ளது.



336 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி!
[Thursday 2024-06-13 16:00]

சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தனது X கணக்கில் தெரிவித்துள்ளார்.



சஜித் பஸ் ஓட்டிய காட்சி- படம் எடுக்கவிடாமல் அச்சுறுத்திய பாதுகாவலர்கள்!
[Thursday 2024-06-13 16:00]

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச , சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து ஒன்றினை நேற்று வழங்கிய போது, பேருந்துக்கு வழக்கம்பரை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச பேருந்தில் அமர்ந்து அதனை செலுத்துவதற்கு தயாராகும் போது ஊடகவியலாளர்கள் அதனை காணொளி மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர் .



தாளையடியில் 135 கிலோ கேரள கஞ்சாவை போட்டு விட்டு ஓட்டம்!
[Thursday 2024-06-13 16:00]

வடமராட்சி கிழக்கு- தாளையடி பகுதியில் 135 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்று அதிகாலை 4:45 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.



ஊடகவியலாளர் வீடு மீது மர்மகும்பல் தாக்குதல்! - வீசி விட்டு சென்ற எச்சரிக்கை பிரசுரங்கள். Top News
[Thursday 2024-06-13 16:00]

யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து, உடைமைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ள சம்பவம் இன்று அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது .



கிளநொச்சியில் குளவிகள் கொட்டி 20 மாணவர்கள் வைத்தியசாலையில்!
[Thursday 2024-06-13 16:00]

கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியில் குழவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிக காற்று வீசி வரும் நிலையில், குழவிக்கூட்டிலிருந்த குழவிகள் கலைந்து வந்து இவ்வாறு மாணவர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் - புலனாய்வு அமைப்புகளின் செயற்பாடு குறித்து ஆராய விசாரணைக்குழு நியமனம்!
[Thursday 2024-06-13 05:00]

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை (SIS),தேசிய புலனாய்வு பிரதானி (CNI) மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.என்.டி.அல்விஸ் தலைமையிலான குழுவொன்று நியமித்துள்ளார்.



நினைவேந்தல் குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
[Thursday 2024-06-13 05:00]

இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.



புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டு - முன்னாள் சுங்க அதிகாரி விடுதலை!
[Thursday 2024-06-13 05:00]

விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு உதவியதாக தெரிவித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த முன்னாள் சுங்க அதிகாரி கந்தையா யோகநாதன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.



சித்தார்த்தனுடன் தொடர்ந்து சந்திப்புகளை நடத்த ஜேவிபி முடிவு!
[Thursday 2024-06-13 05:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கவுக்கும் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் சித்தார்த்தன் எம்.பியின் கந்தரோடை இல்லத்தில் இடம்பெற்றது.



முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இந்தளவு கொடுப்பனவா?
[Thursday 2024-06-13 05:00]

முன்னாள் ஜனாதிபதிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் விளக்கமளித்துள்ளார்.அவர்களுக்கான கொடுப்பனவுகள் குறித்து தெளிவுப்படுத்திய விஜித ஹேரத், மக்களின் பணம் வீணாக செலவிடப்பட்டுள்ளதாக ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.



சிறுமி தாக்கப்பட்ட காணொளியை வெளியிட்டவருக்கு 5 இலட்சம் ரூபா பரிசு!
[Thursday 2024-06-13 05:00]

4 வயது சிறுமி தாக்கப்படும் காணொளியை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படும் இளைஞருக்குப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னக்கோன் தலைமையில் 5 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்பட்டது.



கணினி அறிவில் கிழக்கு மாகாணம் அடிமட்ட நிலையில்!
[Thursday 2024-06-13 05:00]

நாட்டில் கணினி அறிவு 39 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. மேல் மாகாணம் உயர்வான மட்டத்திலும், கிழக்கு மாகாணம் குறைவான மட்டத்திலும் காணப்படுகிறது என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சாமலி கருணாரத்ன தெரிவித்தார்.



உரிய நேரத்தில் தேர்தல், சுயாதீன வேட்பாளராகவே ரணில் போட்டி! சாகல திட்டவட்டம்.
[Thursday 2024-06-13 05:00]

யார் என்ன சொன்னாலும் உரிய காலத்தில் நடத்தவேண்டிய தேர்தலை நடத்துவோம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசி்ங்க சுயாதீன வேட்பாளராகவே போட்டியிடுவார். அவருக்கு ஐக்கிய தேசிய கட்சி பூரண ஆதரவை வழங்கும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.



அடுத்த சில வாரங்களில் 15 முக்கியமான சட்டங்களை நிறைவேற்ற அரசாங்கம் திட்டம்!
[Thursday 2024-06-13 05:00]

எதிர்வரும் சில வாரங்களில் சுமார் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.



பிபிலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!
[Thursday 2024-06-13 05:00]

பிபில – மஹியங்கனை பிரதான வீதியின் வெகம பகுதியில் புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்தனர். தனியார் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.


Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா